பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்காக, சில இயற்கை மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்...

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு ஏற்படும். இது போன்ற பொடுகு பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்காக, சில இயற்கை மருத்துவ குறிப்புகளை பார்க்கலாம்...

* வாரம் ஒரு முறை, மருதாணி இலையை அரைத்து, சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

* தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்துக் காய்ச்சி, தலையில் தேய்த்து வரலாம்.

* தேங்காய் பால் எடுத்த பின் கையை தலையில் நன்றாகத் தேய்த்து, சிறிது நேரம் கழித்து மிதமான நீரில் தலையை அலசினால் பொடுகு, மறைந்து விடும்.

* முதல்நாள் சாதம் வடித்த கஞ்சியை எடுத்து வைத்து, மறுநாள் அதை தலையில் தேய்த்து குளித்தால், பொடுகு நீங்கும்.

* தயிர், முட்டையின் வெள்ளைக் கரு மற்றும் எலுமிச்சை சாறு கலந்து தலையில் தேய்த்துக் குளிக்க பொடுகு மறையும்.

* வால் மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

* வெந்தயத்தை தலைக்கு தேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைவதுடன் பொடுகு தொல்லை நீங்கும்.

* வேப்பிலை கொழுந்து, துளசி ஆகியவற்றை நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

* வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெய்யில் ஊற வைத்து, அந்த எண்ணெய்யை தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

* தலைக்கு குளிக்கும் போது, கடைசியாக குளிக்கும் தண்ணீரில், வினிகர் கலந்து குளித்தால், பொடுகு நீங்கும்.

* நெல்லிக்காய் தூள், வெந்தயப் பொடி, தயிர் மற்றும் கடலைமாவு கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிக்க வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர பொடுகு நீங்கும்.

பொடுகு தொல்லையை போக்கும் எளிய இயற்கை வழிகள்


உருளைக்கிழங்குகள், தோலின் நிறத்தை வெளிறச் செய்து, கருவளையங்களை குறைக்கின்றன.

கருவளையங்களை போக்க இயற்கையான தீர்வுகளை முயற்சி செய்யலாம். உருளைக்கிழங்குகள், தோலின் நிறத்தை வெளிறச் செய்து, கருவளையங்களை குறைக்கின்றன.

ஒரு நடுத்தர அளவுள்ள உருளைக்கிழங்கை எடுத்து, அதை நன்றாக கழுவவும். அதன் தோலில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் இருப்பதால், தோலை உறிக்காதீர்கள்.

இப்போது உருளைக் கிழங்கை இரண்டு பாதியாக வெட்டவும். அதில் ஒரு துண்டை, 3-4 அங்குல துண்டுகளாக வெட்டுங்கள்.

இந்த துண்டுகளை பிரிட்ஜ்ஜில், 20 நிமிடங்கள் வைத்திருந்து, பின் உங்கள் கண்களின் மேல், 5 நிமிடங்களுக்கு அந்த துண்டுகளை வைத்திருங்கள். சிறந்த பலன் பெற தொடர்ந்து, 10 நாட்களுக்கு செய்யுங்கள்.

வீட்டில் பிரிட்ஜ் இல்லையெனில், உருளைக் கிழங்கு சாற்றையும் உபயோகிக்க முடியும். ஒரு சிறிய அளவுள்ள உருளைக்கிழங்கை துருவி, அதில் இரண்டு ஸ்பூன் எடுத்து அதை பிழிந்து சாறு எடுக்கவும்.

ஒரு பஞ்சின் உதவியுடன், இந்த சாற்றை உங்கள் கண்களைச் சுற்றி தடவுங்கள். அது காய்ந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இதை படுப்பதற்கு முன் வழக்கமாக செய்து வந்தால், கருவளையங்களை வெளிற வைத்து விடும். ஆலிவ் எண்ணெய், தோலை இறுக்கமாக வைக்கவும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.

கண்களுக்கு கீழே வரும் கருவளையத்தை போக்கும் உருளைக்கிழங்கு


தயிர் தேனில் செய்யும் இந்த அழகுக் குறிப்பு உங்கள் முகத்தில் ஒரு சில நாட்களில் வசீகரத்தை உண்டு பண்ணும் என்பது உண்மையே. தேனைப் பற்றி சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எந்தவித சருமத்தையும் அழகாக்கும் மேஜிக் தேனிடம் உண்டு.அதேபோல் தயிர் சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த இரண்டு பொருட்களும் சேர்ந்து உங்கள் சருமத்தில் செய்யும் மாயாஜாலத்தை கவனிக்க ஆசையா? மேலும் தொடர்ந்து படியுங்கள்.

எப்படி முகத்தில் உபயோகிக்கலாம்? 1 ஸ்பூன் தேனை 2 ஸ்பூன் தயிருடன் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். தொடர்ந்து இதனை செய்யும்போது உங்கள் வறண்ட, டல்லாகியிருக்கிற சருமத்தை, பளிச்சின்னு மாற வைக்கும் என்பது உறுதி.

சிறந்த மாய்ஸ்ரைஸர் : தேன் மற்றும் தயிர் இரண்டும் சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைக்கிறது. வறண்ட சருமமாம இருந்தால், ஈரபதத்தை அளித்து மென்மையாக்குகிறது.

சிவப்பழகை தருவிக்கிறது: மெலனின் நம் சருமம் கருமை அடைவதற்கு காரணமான ஹார்மோன் ஆகும். தயிரிலுள்ள டைரோசின் என்கின்ற அமினோ அமிலம் இந்த மெலனின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இதனால் சிவப்பழகு கூடும். சருமத்தில் தங்கியுள்ள அழுக்குகளை நீக்கும்.

அலர்ஜியை தடுக்கும்: சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் க்ரீம்கள் போடும்போது உண்டாகும் அலர்ஜியை இந்தக் கலவை போக்கும். இவ்விரண்டிலுமே ஜின் என்ற மினரல் உள்ளது. சருமத்தில் ஏற்படும் பாதிப்பினை கட்டுப்படுத்துகிறது.

முகப்பருக்கு பை பை : உங்களுக்கு முகப்பரு தொல்லை தருகிறதா? அப்படியெனில் இதுதான் பெஸ்ட் சாய்ஸ். தயிரும் தேனும் சிறந்த கிருமி நாசினி. இவைகள் முகப்பருவை அண்ட விடாமல் தடுக்கின்றன.

கருவளையம்போக்குகிறது : கண்களும் அதற்கு கீழ் உள்ள பகுதிகளும் மிகவும் சென்ஸிடிவானது. அங்கு எளிதில் சுருக்கங்கள் வந்துவிடும். கண் சுருக்கங்களை இந்த கலவை நாளடைவில் குறைத்து உங்களை அழகாக காட்டும்.

சுருக்கங்களை போக்கும் : தயிர் மற்றும் தேன் சருமத்திற்கு இறுக்கத்தினை தருகிறது. கொலாஜன் உற்பத்தியை தூண்டுகிறது. இதனால் சுருக்கங்கள் மறையும். இளமையாக உங்கள் முகத்தினை காட்டும்.

வெயிலினால் ஏற்படும் அலர்ஜியை தவிர்க்க: சம்மரில் நிறைய பேருக்கு உண்டாகும் அலர்ஜி வேனிற்கட்டி, சிவந்து போய் தடிதடியாய் முகம் கழுத்து கை என வெயில் படும் இடத்திலெல்லாம் ஆகிவிடும். இந்த கலவையை தொடர்ந்து உபயோகித்தால், சரும பிரச்சனைகளிலிருந்து விடுதலை காணலாம்.


தயிர் தேன் கலவையால் உடனடி அழகு தேடி வரும் உங்கள் சருமத்தில்




Lip Care - How To Naturally Lighten Dark Lips (Fast Results) | Natural Tips for Pink Lips

How to get pink lips naturally?To get the pink and soft lips try this natural lip scrub at you home. This natural scrub would helps to exfoliate your lips and makes it soft. This remedy also cleanses the darkness of your lips.

The natural agents existing in the below mentioned ingredients aids in reducing the darkness of your lips.

this remedy would surely helps to get rid of dark lips naturally. You're sure to get a smooth and attractive lips within weeks with this natural scrub.

Lip Care - How To Naturally Lighten Dark Lips (Fast Results) | Natural Tips for Pink Lips


முகத்தை தினமும் கழுவி பராமரித்தால், அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும்.

சருமத்தில் நாள்தோறும் செல்கள் உருவாவது, இறப்பதும் நடக்கிற விஷயம். இறந்த செல்களை சருமம் தனது துவாரத்தின் மூலம் வெளியேற்றிவிடும்.

அந்த துவாரம் முழுவதும் தூசி, அழுக்கு படிந்திருந்தால், இறந்த செல்கள் வெளியேறாமல் அங்கேயே தங்கிவிடும். அதனால் தான் சருமம் கடினமாகி, சொரசொரப்புடன், சீக்கிரம் வயதான தோற்றத்தை பெற்று விடுகிறது.

இதற்காக முகத்தை தினமும் கழுவி பராமரித்தால், அழுக்குகள் வெளியேறி சுத்தமாகும். விடாப்படியான இறந்த செல்களை ஸ்க்ரப் மூலம் அகற்றலாம். அவை சருமதில் உள்ளே சென்று அழுக்குகளையும் இறந்த செல்களையும் நீக்கும். ஆனால் ஸ்க்ரப் நாம் கடையில் ஏன் வாங்க வேண்டும். வீட்டிலேயே தயாரிக்கலாம்.

சாதாரணமாக மஞ்சளும், உப்பும் அழுக்குகளை அகற்றி, முகத்தை பளிச்சிட வைக்கும். சர்க்கரையும் அவைகளுக்கு போட்டியாக சருமத்தை காக்கும்.

ஆனால் சர்க்கரையை ஸ்க்ரப்பாக உபயோகப்படுத்தி இருப்பீர்கள். அது கருமையையும் அகற்றும் என்பது உங்களுக்கு தெரியுமா? இதோ உங்கள் சருமத்தை அழகாக்கும் சர்க்கரையை கொண்டு செய்யும் பேக்.

கருமையை போக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக் :

தேவையானவை :

சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் ஆயில் - 2 சொட்டு

எலுமிச்சை சாறு - 2 சொட்டு

எலுமிச்சை சாறு முகத்திலுள்ள கருமையை போக்கும். சர்க்கரை இறந்த செல்களை அகற்றும். ஆலிவ் ஆயில் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து முகத்தை பொலிவாக்கும்.

ஆலிவ் ஆயிலுடன் சர்க்கரையையும், எலுமிச்சை சாறினையும் சேர்த்து நன்றாக கலக்கவும். பின் அதனை முகத்தில் போட்டு மெதுவாக மசாஜ் செய்யவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகம் பளிச்சிடும்.

ஃபேஸ் பேக் 2:

சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்

தேன் - 1 டேபிள் ஸ்பூன்

இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் காய விடவும். அதன் பின் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள்.

வாரம் இருமுறை செய்தால், மாசு, மருவெல்லாம் போயே போச்சு. சருமத்தை எப்போதும் சுத்தமாக பராமரிப்பது உங்கள் கையில்தான் இருக்கிறது.

சருமத்தை சுத்தமாக்கும் சர்க்கரை ஃபேஸ் பேக்



தலைமுடி ஒருவரின் அழகை அதிகரித்துக் காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய தலைமுடியில் ஏராளமான பிரச்சனைகளை இன்றைய தலைமுறையினர் சந்திக்கின்றனர். அதில் ஒன்று தலைமுடி அதிகம் உதிர்ந்து, முடியின் அடர்த்தி குறைவாக காணப்படுவது. இதற்கு காரணம் ஹார்மோன்கள், மோசமான பழக்கவழக்கங்கள், ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவையுடன், சரியான பராமரிப்பு கொடுக்காமல் இருப்பதும் முக்கியமானவைகளாகும். தலைமுடி மெலிந்து இருந்தால், அது ஒருவரின் அழகை மோசமாக வெளிக்காட்டும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெயில் 2 அத்தியாவசிய அமிலங்களான லாரிக் மற்றும் கேப்ரிக் அமிலங்கள் உள்ளது. இவை பாதிக்கப்பட் தலைமுடியை சரிசெய்யவும், பலவீனமான தலைமுடியை வலிமையாக்கவும், முடியின் அடர்த்தியை மேம்படுத்தவும் உதவும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி வாரம் 2 முறை மசாஜ் செய்து ஊற வைத்து குளிக்க வேண்டும்.

கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல் அனைத்து வகையான தலைமுடி பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வளிக்கும். தலைமுடி மெலிவதற்கு போதிய ஈரப்பசை இல்லாமையும், ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் இருப்பதும் தான் காரணம். ஆனால் கற்றாழை ஜெல்லை வாரத்திற்கு 3 முறை தலையில் தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் ஊற வைத்து அலசினால், தலைமுடியின் அடர்த்தி அதிகரிக்கும்.

நெல்லிக்காய் நெல்லிக்காயில் வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை அதிகம் உள்ளது. எனவே அந்த நெல்லிக்காய் பொடியை நீர் கலந்து வாரத்திற்கு ஒருமுறை தலைக்கு தடவி வந்தால், தலைமுடியின் அடர்த்தி அதிகிரிக்கும்.
உருளைக்கிழங்கு ஜூஸ் உருளைக்கிழங்கை சாறு எடுத்து, அதனை வாரத்திற்கு 2-3 முறை தலையில் தடவி ஊற வைத்து அலசி வர, தலைமுடியின் அடர்த்தி அதிகரிப்பதோடு, முடி சம்பந்தமான பிரச்சனைகளும் அகலும்.

முட்டை பழங்காலம் முதலாக தலைமுடி பிரச்சனைகளைப் போக்க முட்டை பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏனெனில் இதில் முடியின் வளர்ச்சிக்குத் தேவையான புரோட்டீன் அதிகம் உள்ளது. ஆகவே உங்களுக்கு அடர்த்தியான தலைமுடி வேண்டுமானால், நல்லெண்ணெயுடன் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து, வாரம் ஒருமுறை தலையில் தடவி ஊற வைத்து அலசுங்கள்.

தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க சில எளிய வழிகள்!



தலைமுடிக்கு போதிய ஊட்டத்தை வழங்கினால், மயிர் கால்கள் நன்கு வலிமையுடன் இருக்கும். அதற்கு தலைக்கு எண்ணெய் தேய்ப்பது சிறந்த வழி. தலைமுடிக்கு தேங்காய் எண்ணெய் மட்டுமின்றி நல்லெண்ணெயும் மிகவும் நல்லது. நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ, பி காம்ப்ளக்ஸ் மற்றும் கனிமச்சத்துக்களுள் கால்சியம், பாஸ்பரஸ், மக்னீசியம் மற்றும் புரோட்டீன் போன்றவைகளும் உள்ளன. எனவே இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், முடி நன்கு வலிமையுடனும், உறுதியாகவும் இருக்கும். இங்கு நல்லெண்ணெயை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து இனிமேல் நல்லெண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துங்கள்.

நல்லெண்ணெயை தலைமுடிக்குப் பயன்படுத்துங்கள்.


ஒவ்வொருவரும் மற்றவர்கள் முன்பு அழகாக காட்சியளிக்க வேண்டுமென்று நினைப்போம். அதற்காக பல முயற்சிகளையும் மேற்கொள்வோம். குறிப்பாக சற்று கருப்பாக இருப்பவர்கள், வெள்ளையாவதற்கு பல முயற்சிகளை எடுப்பார்கள். மேலும் வேறு வழிகள் ஏதேனும் உள்ளதா என்றும் தேடுவார்கள்.

தினமும் சிவப்பு சந்தனத்தை முகத்திற்கு பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்! நீங்களும் அப்படி வெள்ளையாக வழிகளைத் தேடுபவரா? அப்படியெனில் எளிதில் கிடைக்கும் கற்றாழையைக் கொண்டு தினமும் முகத்திற்கு மாஸ்க் போடுங்கள்.

கற்றாழை மருத்துவ குணங்களை உள்ளடக்கிய ஓர் அற்புதமான பொருள். இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சரும பிரச்சனைகளும் விரைவில் நீங்கும்.

ஆண்களே! முகம் கழுவும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க... சரி, இப்போது வெள்ளையாவதற்கு கற்றாழையைக் கொண்டு எப்படியெல்லாம் மாஸ்க் போடலாம் என்று பார்ப்போம்.

ஃபேஸ் பேக் #1 சிறிது கற்றாழை ஜெல்லுடன், சில துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகம் மற்றும் கழுத்தில் உள்ள கருமைகள் அகலும்.

ஃபேஸ் பேக் #2 ஒரு பௌலில் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொண்டு, அத்துடன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவும் முன், சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முதுமைப் புள்ளிகள் போன்றவை மறைந்து, முகமும் பொலிவோடு காணப்படும்.

ஃபேஸ் பேக் #3 இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு பொருந்தமானவை. அதற்கு கற்றாழை இலையை எடுத்து, அதன் கூர்மையான முனைகளை கத்தியால் நீக்கிவிட்டு,

நீரில் போட்டு வேக வைத்து இறக்கி, அரைத்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இதனால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

ஃபேஸ் பேக் #4 உங்களுக்கு சென்சிடிவ் சருமம் என்றால் கற்றாழை ஜெல்லுடன், வெள்ளரிக்காய் சாறு, தயிர் மற்றும் ரோஸ் ஆயில் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் முகத்தில் உள்ள அழுக்குகளை முழுமையாக வெளியேற்றி, முகத்தின் பொலிவை அதிகரிக்கும்.

ஃபேஸ் பேக் #5 இந்த ஃபேஸ் பேக் வறட்சியான சருமத்திற்கு ஏற்றது. அதற்கு கற்றாழை ஜெல்லுடன், காட்டேஜ் சீஸ், பேரிச்சம் பழம் மற்றும் வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து, சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, கழுத்து மற்றும் முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #6 இந்த ஃபேஸ் பேக் சரும நிறத்தை அதிகரிப்பதோடு, முகத்தை புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் வெளிக்காட்டும். அதற்கு கற்றாழை ஜெல்லுடன் மாம்பழ கூழ் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஃபேஸ் பேக் #7 வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்து வர, முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக வெளியேறி, முகம் பிரகாசமாக இருக்கும்.


வெள்ளையாவதற்கு கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும்?


சித்த மருத்துவத்தில் எண்ணற்ற அழகுக் குறிப்புகள் உள்ளன. அவற்றை படித்து பலன் பெறுங்கள்

தேங்காய் எண்ணெயில் மஞ்சள்தூளை போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.

* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.

* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால் முடி வளர்ச்சி குறைந்து முகம் அழகு பெறும்.

* கூந்தலில் எண்ணெய் பசை அதிகமாக இருந்தால், முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு பிறகு தலைக்கு ஊற்ற வேண்டும். இதனால் எண்ணெய் பசை நீங்கி முடி அழகு பெறும்.

* தேநீரில் வடிகட்டிய பின், மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்துக் குளித்தால், தலைமுடி பளபளப்பாகும்.

* வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். 

இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகம் குரு வராமல், வெயிலில் கறுத்துப் போகாமல் இருக்கும்.

* இளம் சூடான ஒரு லிட்டர் நீரில், இரண்டு ஸ்பூன் உப்பைப் போட்டு, கண்களை கழுவினால் கண்கள் பிரகாசமாக இருக்கும்.

* கை, கால் முட்டிகளில் கறுப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு குளிக்க வேண்டும் நாளடைவில் கறுப்பு நிறம் போய் விடும்.

தோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.

சருமத்தை அழகாக்கும் சித்த மருத்துவ குறிப்புகள்


முதலில் ஒருவரை ஈர்ப்பது முகம், நிறம் மற்றும் புன்னகை தான். இந்த மூன்றும் ஒருவருக்கு சிறப்பாக இருந்தால், எளிதில் மற்றவர்களுடன் நட்புறவு கொள்ள முடியும். அதிலும் நீங்கள் மற்றவர்களை எளிதில் கவர நினைத்தால், சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு வழங்க வேண்டியது அவசியம்.

முகம் கழுவ சோப்பிற்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள்!!! ஆனால் தற்போது சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் அளவில் பலருக்கு நேரம் இல்லை. அதே சமயம் சருமத்தில் அழுக்குகளின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்கவும், முகப்பொலிவை அதிகரிக்கவும், ஓர் அருமையான வழி ஒன்று உள்ளது.

தமிழ்நாட்டு பெண்கள் அழகின் ரகசியத்திற்கு பின்னணியில் உள்ள பாசிப்பயறு மாவு!!! அது வேறொன்றும் இல்லை, தினமும் சிறிது கேரட்டை அரைத்து பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இப்படி தினமும் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும். மேலும் அன்றாடம் ஒரு கேரட்டை உட்கொண்டு வருவதும் சரும அழகை மேம்படுத்தும்.

பொலிவான முகம் கேரட் மற்றும் பால் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவதால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களுக்கு ஊட்டமளித்து, சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும்.

பருவில்லா முகம் கேரட் மற்றும் பாலை ஒன்றாக கலந்து தினமும் மாஸ்க் போடும் போது, சருமத்தில் உள்ள பருக்கள், பருக்களால் வந்த தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி, சருமம் சுத்தமாகவும், அழகாகவும் காணப்படும்.

இளமை தோற்றம் முகத்தில் சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் காணப்படுகிறதா? அப்படியெனில் இந்த கேரட் மற்றும் பால் மாஸ்க் நல்ல தீர்வைத் தரும். ஏனெனில் இந்த மாஸ்க் சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, இளமைத் தோற்றத்தைத் தரும்.

சரும வறட்சி நீங்கும் உங்களுக்கு சருமம் அதிகம் வறட்சி அடையுமாயின், இந்த ஃபேஸ் பேக் போடுவதன் மூலம், வறட்சியைத் தடுத்து, சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கலாம்.

நேச்சுரல் சன்ஸ்க்ரீன் கேரட் மற்றும் பால் கலவை சிறந்த நேச்சுரல் சன்ஸ்க்ரீன் போன்று செயல்பட்டு, சரும செல்கள் சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கும். இதனால் சருமம் கருமையடைவது தடுக்கப்படும்.

சரும அரிப்பு மற்றும் எரிச்சல் சிலருக்கு வெயிலில் அதிகம் சுற்றினால், அரிப்புக்கள், மற்றும் எரிச்சல்கள் ஏற்படும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போடுவதன் மூலம் இப்பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.

தேவையில்லாத முடி நீங்கும் கேரட் மற்றும் பாலுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால், முகத்தில் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும் சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்.



தினமும் இரவில் கேரட்டை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் ஏற்படும் மாற்றங்கள்!


Brighten, Whiten Your Skin | Homemade Face Mask

Wish to have a beautiful and bright skin? Try these natural remedies that removes marks from your skin and prevents pimples!
DO'S :
Have a proper skincare routine and a balanced diet to make your skin naturally glowing!! To attain the radiant glow, go for natural products.

Your daily skin care regime helps to prevent the skin from losing its natural moisture and glow. But you should use natural remedies in your skincare routine for good results.

Brighten, Whiten Your Skin | Homemade Face Mask


சில பெண்களுக்கு ஆண்களை போல் உதட்டின் மேல் மீசை போல் ரோமம் முளைத்து பார்க்க அருவருப்பாக இருக்கும். 

இதற்காக அவர்கள் அழகு நிலையங்களுக்கு தான் செல்ல வேண்டும் என்பதில்லை. வீட்டில் இருந்தபடியே இதனை நிரந்தரமாக போக்க முடியும்.

இதற்கு குப்பை மேனி இலை, வேப்பங்கொழுந்து, விரலி மஞ்சள் ஆகியவற்றை சமஅளவில் சேகரித்து கொள்ளவும். 

இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கைக்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.

தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப்பாக இருக்கும் முடி நிரந்தரமாக உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும். மறுபடியும் அந்த இடத்தி ரோமம் வளராது.

உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இயற்கை மருத்துவம்


நிறைய கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் போட்டு, உதடு கருப்பாகிவிட்டதா? அப்புறம் அந்த கருமையை மறைக்கிறதுக்காகவே லிப்ஸ்டிக் இல்லாம வெளிய போக முடியாதுன்னு கவலைப்படுறீங்களா கேர்ள்ஸ்? இது உங்களுக்கான ஈஸி டிப்ஸ் தான். செய்வது மிக சுலபம்.

அதன் பலனோ அட்டகாசம். வீட்டிலேயே இயற்கையாக பக்க விளைவு இல்லாத லிப்ஸ்டிக் தயாரிக்கலாம். இதையே லிப்ஸ்டிக் என்று இல்லாமல் ஸ்க்ரப்பாகவும் பயன்படுத்தலாம். இதற்கு முக்கியமான தேவை ஒரே ஒரு பீட்ரூட் தான்.

பீட்ரூட் இயற்கையிலேயே நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட்டை கொண்டுள்ளது. புற ஊதாக்கதிரின் தாக்கத்திலிருந்து உதட்டினை பாதுகாக்கிறது. இந்த பீட்ரூட் லிப்ஸ்டிக் தொடர்ந்து உபயோகப்படுத்தும் போது, கருமை மறைந்து, நாளடைவில் உங்கள் உதடுகளும் பிங்க் நிறத்தில் ஆகும். ட்ரை பண்ணிப் பாருங்க.

தேவையானவை :

பீட்ரூட்-1

தேங்காய் எண்ணெய்- 2 டீஸ்பூன்

தேன் மெழுகு - 4 ஸ்பூன்.

செய்முறை : பீட்ரூட்டின் தோல் பகுதியை அகற்றி, துருவி அதன் சாறினை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு சிறிய மூடியுள்ள கன்டெயினரில் அந்த பீட்ரூட் சாறினை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த லிப்ஸ்டிக் நிறைய நாட்கள் வைத்துக் கொள்ளலாம் என்பதால் நல்ல சுத்தமான அளவு சிறிய கன்டெயினரை எடுத்துக் கொள்ளுங்கள்.

இப்போது பீட்ரூட் சாறுடன்,தேங்காய் எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றையும் போட்டு, நன்றாக ஒரு சிறிய ஸ்பூன்அல்லது டூத் பிக்கினால் கலக்குங்கள். பிறகு அதனை ஃப்ரிட்ஜில் வைக்கவும்.

ஓரிரு நாட்களில் உறைந்து விடும். பின் தேவைப்படும்போது அதனை உங்கள் உதட்டில் போட்டுக் கொள்ளலாம். உதட்டில் காய்ந்தவுடன், உதடு சிவந்து மினுமினுப்பாக தெரியும். கடைகளில் வாங்கும் லிப்ஸ்டிகை விட அழகாய் உங்கள் உதடுகளை காண்பிக்கும். இது அற்புதமான ஸ்கின் டோனர். உதட்டில் கருமையை போக்கி, ஈரப்பதம் அளிக்கும்.

இதில் ப்ரிசர்வேட்டிவ் இல்லை. கெமிக்கல் இல்லை. உங்கள் உதடுகளுக்கு மிகவும் ஏற்றது. தினமும் உபயோகப்படுத்தினால், உங்கள் உதடும் அதே நிறத்தில் மாறி ,தோற்றத்தை அழகாக்கும்.

இதே போலவே இந்த பீட்ரூட், தேன்மெழுகு மற்றும் தேங்காய் எண்ணெய் கலவையில் கொஞ்சம் சர்க்கரை சேர்த்தால் அருமையான ஸ்க்ரப் தயார். இதனை வாரம் ஒரு முறை உதட்டில் ஸ்ரப் செய்தால், இறந்த செல்கள் அகன்று உடது மிகவும் மென்மையாகும்.

குறிப்பு: பீட்ரூட் அடர்ந்த கலர் தருவது போல் லைட்டான சிவப்பு நிறம் தேவையெனில் நீங்கள் மாதுளம் பழச் சாறினை எடுத்தும் இதே போல் செய்யலாம். அது லைட் கலர் ஷேட்டில் அழகாக இருக்கும்.

இயற்கையானவை அனைத்துமே உங்களுக்கு நன்மைகள் மட்டுமே செய்யும். பாதுகாப்பானவைக் கூட. கடைகளில் வாங்கும் கெமிக்கல் கலந்த லிப்ஸ்டிக் உங்கள் உதடுகளைப் பதம் பார்க்கும்.

இந்த இயற்கையான லிப்ஸ்டிக் உங்கள் உதட்டிற்கு நிறத்த அளித்து உங்களை மிளிரச் செய்யும். செய்து, பயன் பெறுங்கள் தோழிகளே!


வீட்டிலேயே இயற்கையான லிப்ஸ்டிக் தயாரிக்கத் தெரியுமா?

Mehndi Designs 2013 Step by Step

Mehndi Designs 2016 Step by Step


இந்த கோடையில் பல பிரச்சினைகள் மக்களை வாட்டுவிப்பது போல் மிகவும் அதிகமாக முடி கொட்டுகின்ற பிரச்சினையும் அநேகரை வருத்துகின்றது. இதற்கு ஏதாவது வழி சொல்லுங்களேன் என கேட்க ஆரம்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 15 நாட்களில் கூடிக் கொண்டே போனது.

மண்டைக்கு உள்ளே இருக்கும் மூளையைப் பற்றியும், வெளியே இருக்கும் தலைமுடி பற்றியும் பல பல ஆண்டுகளாக ஆய்வுகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. முடியைப் பற்றி கவலைப் படாத ஆணும் இல்லை பெண்ணும் இல்லை எனலாம்.

உடலில் ஏற்படும் எந்த மாறுதல்களுக்கும் முதலில் மருத்துவ ரீதியான காரணங்களை அறிய வேண்டும். இளமைக் காலத்தில் முடி கொட்டுவதற்கான பொதுவான காரணங்கள்.

* அதிக உடல் உழைப்பு
* மனஉளைச்சல்
* பரம்பரை
* கூடும் வயது
* ரத்த சோகை
* ஹார்மோன்களின் மாறுபாடு
* அதிக நாள் நோய் தாக்குதல்
* வைட்டமின் பி6, போலிக் ஆசிட் குறைபாடு
* தைராய்டு பிரச்சினைகள்
* ஸ்டைல் என்ற பெயரில் முடியினை கெடுத்துக் கொள்ளுதல்

இவையெல்லாம் மருத்துவ காரணங்கள்.

இவற்றிற்கு மருத்துவ ரீதியான ஆலோசனைகள் தேவை. மருத்துவ ரீதியாக பல மருந்துகள், தலைக்கு தடவும் லோஷன் என ஆய்வுகளின் வெளிப்படாக பல கண்டு பிடிப்புகள் பரிந்துரைக்கப்படுகின்றன. 

ஆயினும் அவற்றினை பொதுவில் எழுத முடியாது. அதற்கும் மருத்துவ ஆலோசனை தேவை. ஆகவே அவரவர் வீட்டில் செய்து பயன்பெறக் கூடிய சில எளிய முறைகளை பார்ப்போம். இவற்றின் விஞ்ஞான ரீதியாத உண்மைகளையும் அறிவோம்.

தலைமுடி கொட்டுவதற்கு பொடுகு தொல்லை, சுகாதாரமின்மை, கிருமிகள் தாக்குதல், தரமில்லாத ஷாம்பூ இப்படி சில காரணங்கள் இருக்கலாம். எனவே முதலில் முடியினை பலமாக்கும் முறையினைப் பார்ப்போம்.

* தேங்காய் பால்

சுத்தமான ஒரு கப் தேங்காய் பாலினை உங்களாலேயே வீட்டில் தயாரித்துக் கொள்ள முடியும். பால் தண்ணியாக இருக்கக் கூடாது. அடர்த்தியாக இருக்க வேண்டும். தலைக்கு உபயோகிக்கும் ‘டை’ போடும் ப்ரஷ் கொண்டு தலை முடியினை நன்கு அகற்றி மண்டையில் முடியின் கால்களில் நன்கு படும்படி தடவவும். 

இதனை அப்படியே ஒரு டவல் கொண்டு சுற்றி 20 நிமிடங்கள் வைக்கவும். அதன்பின் குளிர்ந்த நீரில் மென்மையான ஷாம்பூ கொண்டு கழுவி விடவும். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்ய வேண்டும்.

தேங்காய் பாலில் வைட்டமின் ஈ சத்து அதிகம். ஆகவே நல்ல ஆரோக்கியத்துடன் முடியினை வைக்கும். 

இதிலுள்ள பொட்டாஷியம் சத்து முடி நன்கு வளர உதவும். மேலும் இதன் கிருமி நாசினி குணம் முடி பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

* வேப்பிலை

10-12 வேப்பிலை இருந்தால் போதும். இதனை இரண்டு டம்ளர் நீரில் போட்டு ஒரு டம்ளர் நீர் ஆகும் வரை கொதிக்க வைக்கவும். வடிகட்டி ஆறவிடவும். இதனை தலை சுத்தம் செய்யும் போது தலையில் பொறுமையாக ஊற்றி பின்னர் நீரில் தலையை அலசவும். இதனை தலையை ஷாம்பு கொண்டு சுத்தம் செய்த பிறகு தலையில் ஊற்றவும். பின்னர் மறுபடியும் நீர் கொண்டு சுத்தம் செய்யவும்.

ஏன் இப்படி செய்ய வேண்டும்? இது மிகப் பெரிய கிருமி நாசினை பொடுகினை நீக்கி விடும். தலை சுத்தமாவதால் முடி வளர்ச்சி கூடும். 

மேலும் இது தலைக்கு ரத்த ஓட்டத்தினைத் தூண்டும் மேலும் ஈறு, பேன் இவைகளையும் நீங்கும். இதனை வார ஒருமுறை செய்தால் போதும்.
சீப்பினை இதே முறையில் சுத்தம் செய்யுங்கள்.

பொடுகு இருக்கும் தலையில் வேப்ப நீர் படும் பொழுது சில நேரங்களில் கண் எரிச்சல் ஏற்படலாம். பொதுவில் வேப்ப நீர் கொண்டு தலை அலசும் பொழுது கண்களில் படாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

* சோற்றுக் கற்றாழை

நகர்புறம் தாண்டி இருப்பவர்களுக்கு இது எளிதில் கிடைத்து விடும். நகரங்களில் இதன் விலை மிகவும் அதிகம். இருப்பினும் இது மிக உபயோகமான சிகிச்சை என்பதால் இதனை குறிப்பிடுகின்றேன். சோற்றுகற்றாழையினை நன்கு கழுவி முட்களை நீக்கவும். 

பின் அதன் சதைப் பற்றினை நன்கு எடுத்துக் கொள்ளவும். தலையினை ஈரமாக்கிக் கொள்ளவும். 

பின்னர் இந்த விழுதினை முடியினை நீக்கி மண்டையில் நன்கு படுமாறு தேய்க்கவும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும். பின்னர் தலையினை சுத்தமான நீர் கொண்டு அலசி விடவும்.

இக்கோடை முடியும் வரை இதனை வாரம் 3 முறை செய்யலாம். ஏன் செய்ய வேண்டும்?

இதில் உள்ள மருத்துவ குணத்தினால் தலைமுடியின் வேரினில் ஊடுருவிச் சென்று முடி வளர்ச்சியினை தூண்டும். 

உடலை குளுமையாய் வைக்கும். சோற்றுக் கற்றாழை மஞ்சள் நிறத்தில் ஓரங்களிலோ அல்லது உள்ளோ இருந்தால் அதனை உபயோகப்படுத்தக் கூடாது. அது தீங்கு.

* வெந்தயம்

ஒரு கப் வெந்தயத்தினை முதல் நாள் இரவு நீரில் ஊற வைக்கவும். இதனை மிகவும் நைசாக அரைத்துக் கொள்ளவும். 

இதனை தலையில் நன்கு தடவி ஒருமணி நேரம் நன்கு ஊற வைக்கவும். குளிர்ந்த நீரில் நன்கு அலசவும். வாரம் இருமுறை செய்யலாம்.

* நெல்லிக்காய்

பொதுவில் நெல்லிக்காயினை தேங்காய் எண்ணெயில் இட்டு காயச்சி உபயோகப்படுத்துவர். 4-5 நெல்லிக்காயினை காய வைத்து பின் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி சற்று கருத்த நிறம் வந்தவுடன் அதனை அப்படியே ஒரு பாட்டிலில் மாற்றி வைத்து தலைக்கு தடவுவர். 

நெல்லிக்காயில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம். முடியினை நன்கு வலுவாக்கும். ‘இ’ சத்து கொலஜன் உற்பத்திக்கு உதவுவதால் முடி செழிப்பாய் இருக்கும். இதுவே நெல்லிக்காய் எண்ணெயின் ரகசியம்.

* தயிர்:

2 டேபிள் ஸ்பூன் தயிரும், சிறிது எலுமிச்சையும் கலந்து தலையில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் நன்கு கழுவி விடலாம். தயிரில் பி5 வைட்டமின் சத்து அதிகம். 

இது முடியினை நன்கு வளரச் செய்யும். இதனை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

* வெங்காய ஜூஸ்:

எத்தனை பேருக்கு இது அதிசயமாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனால் இது உண்மை. சின்ன வெங்காயத்தினை நன்கு உரித்து சிறிதும் நீர் சேர்க்காமல் அதனை துறுவி பிழிந்து சாறு எடுத்தும் கொள்ளவும். 

பஞ்சு கொண்டு அந்த சாறினை தலையில் முழுவதும் தடவவும். 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முடியினை நன்கு அலசி விடவும். ஷாம்பு பயன்படுத்தவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம்.

வெங்காயம் கிருமி நாசினி. இது முடிக்கு மிகவும் சிறந்தது. மேலும் இதில் உள்ள சல்பர் ரத்த ஓட்டத்தினை கூட்டி பாதிக்கப்பட்ட முடி கால்களை வலுவாக்கி நல்ல முடி வளர்ச்சியினை ஏற்படுத்தும்.

* தேங்காய் எண்ணெய் : ஆலிங் எண்ணெய் பாதாம் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது கிருமிகளை நீக்கும். ரத்த ஓட்டத்தினை தூண்டும். ஆனால் எண்ணெய் வைத்த ஒரு நாள் முழுவதும் அப்படியே இருந்தால் அதில் மாசு படியும். இரவில் தடவி காலையில் குளித்து விடுவது நல்லது.

2 முட்டையின் வெள்ளைக் கருவினை எடுத்து தலை முடியினை பிரித்து பிரித்து பிரஷ் மூலம் முடிகால்களில் நன்கு படும்படி தடவவும். 20 நிமிடங்கள் கழித்து தரமான ஷாம்பு கொண்டு சுத்தம் செய்யவும். 

வாரம் இருமுறை கூட இதனைச் செய்யலாம். இதிலுள்ள புரதம், வைட்டமின் பி சத்துக்கள், முக்கிய சத்துக்கள் முடியினை அற்புதமாய் வளரச் செய்யும்.

ஒரு உருளைக்கிழங்கினை நன்கு கழுவி தோல் சீவிக் கொள்ளவும். பின் அதனைத் துறுவி சாறு எடுத்து தலை முழுக்க தடவவும். 

20 நிமிடங்கள் சென்று தலையை நன்கு அலசி விடவும். இதனை வாரம் ஒருமுறை செய்யலாம். பொட்டாசியம் சத்தும், வைட்டமின் சி சத்தும் மிகுந்தது. இது முடி கொட்டாமல் இருக்க பெரிதும் உதவும்.

* எலுமிச்சை சாறு:

2-3 எலுமிச்சை பழங்களைப் பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு வெது வெதுப்பான நீர் கலந்து வைத்துக் கொள்ளவும். 

நீங்கள் தலைக்கு குளிக்கும்போழுது தலையினை நன்கு சுத்தம் செய்த பிறகு இச்சாறினை தலை முழுவதும் தடவி 5 நிமிடங்கள் மென்மையாய் மசாஜ் செய்து சுத்தமான நீரில் தலை முடியினை நன்கு அலசி விடவும்.

முடி கொட்டுவதனை வெகுவாய் நிறுத்தும். பொடுகினை நீக்கி விடும். ஆரோக்கியமாய் முடியினை பராமரிக்கும். கண்களில் பட்டால் மிகவும் எரிச்சல் கொடுக்கும். 

தீங்கு இல்லை எனினும் எரிச்சல் மிகுதியாய் இருக்கும். எனவே இதனை உபயோகிக்கும்போது கவனம் தேவை. கண்ணில் பட்டால் சுத்தமான நீர் கொண்டு கண்ணை கழுவி விடவும்.

இந்த முறைகளை நம் முன்னோர்கள் காலம் காலமாக சொன்னதுதான். செய்ததுதான். 

இன்று நாம் விஞ்ஞான ரீதியாக இதனை ‘ஆமாம்’ போட்டு கற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவர்கள் எவ்வாறு இதனையெல்லாம் கண்டு பிடித்தார்கள் என்பது ஆச்சர்யமே.

கோடையில் தலைமுடியினை பலமாக்கும் எளிய வைத்தியம்




Simple Easy Indian Bridal Henna Mehndi

Simple Easy Indian Bridal Henna Mehndi


எப்பவும் அழகா இருந்தா நம்ம மதிப்பே தனி தான். கல்லூரிக்கோ அலுவலகத்துக்கோ போறப்போ நம்ம ஃப்ரண்ட்ஸ் நீ மட்டும் எப்டி அழகா இருக்க எனக் கேட்டா ஒரு கிளாஸ் குளுகோஸ் குடிச்ச மாதிரிதானே இருக்கும். இந்த டிப்ஸ் எல்லாம் காலையில எழுந்ததும் ஃபாலோ பண்ணுங்க. நிச்சயம் ஆல் டைம் பியூட்டியா வலம் வருவீங்க.

அழகாய் இருக்கனும்னா முதல்ல உங்களுக்கு தேவை தன்னம்பிக்கை.நீங்க தன்னம்பிகையோட இருந்தாவே ஒரு அழகு உங்க முகத்துல குடிவரும்.ஒவ்வொரு காலையும் நீங்க தன்னம்பிக்கயோடுதான் துவங்கனும் என்று முடிவு எடுங்க.

ஃப்லாஸிங்க் : உங்கள் பற்களை விளக்கியவுடன் வெதுவெதுப்பான உப்பு நீரில் கொப்பளியுங்கள். இது உங்கள் ஈறு பலம் பெறவும், வாயிலுள்ள மோசமான கிருமிகள் அழியவும் உதவும்.

நேரமிருந்தால் , பற்களில் மாட்டிக் கொள்ளும் உணவுத்துணுக்குகளை ஃப்லாஸிங்க் மூலம் அகற்றலாம். இது பற்கள் சொத்தை மற்றும் சிதைவிலிருந்து காப்பாற்றும். பற்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

அடுத்தது 2 டம்ளர் நீர் குடிங்க. இது உங்க தோல்ல தங்கியிருக்கிற கழிவுகளை வெளியேற்றும். இந்த கழிவுகள்தான் சருமத்தின் மினுமினுப்பை குறைக்கும். ஆகவே அவற்றை வெளியேற்ற வெறும் வயிற்றில் நீர் குடிக்க வேண்டும்.

உடற்பயிற்சி : அடுத்து நீங்க செய்ய வேண்டியது உடற்பயிற்சி. நிறைய டைம் எடுத்துக்க வேண்டியது இல்ல. குறைந்த பட்சம் 20 நிமிடங்களாவது நீங்க உடற்பயிற்சி செய்து பாருங்க. 

உங்கள் ஹார்மோன் எல்லாம் நன்றாக தூண்டப்படும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள். அப்புறம் உங்க ஃப்ரெண்ட்ஸ் எல்லம் உங்களை ஸ்லிம் பியூட்டின்னு சொல்வது கியாரெண்டி.

சத்துள்ள உணவு : மற்ற இரு வேளைகளைக் காட்டிலும் காலையிலேயே நீங்கள் அதிகமாக உணவு சாப்பிட வேண்டும். அதுவும் புரோட்டின் நிறைந்த உணவுகள் சாப்பிடும் போது, அது நார்சத்துக்களைக் கொண்டுள்ளதால், கொலஸ்ட்ரால் அளவினைக் கட்டுப்படுத்தி, உடலை ஸ்லிமாக வைக்க உதவுகிறது.

க்ரீன் டீ : காலையில் காபி,டீ ஆகியவற்றை விட்டுவிட்டு க்ரீன் டீ குடியுங்கள்.அது நிறைய ஆன்டிஆக்ஸிடென்டை கொண்டுள்ளது. உங்களை என்றும் பதினாறாக வைக்க உதவும்.

சன் ஸ்க்ரீன் லோஷன்: காலையில் வெளியே கிளம்புவதற்கு முன் சன் ஸ்க்ரீன் லோஷனை வெயில்படும் இடத்தில் எல்லாம் தடவுங்கள். இது சருமத்தில் புற ஊதாக்கதிர்களை ஊடுருவச் செய்யாது. சரும பாதிகப்புகளிலிருந்து தப்பிக்கலாம்.


நீங்கள் எப்போதும் அழகாய் இருக்க இந்த மார்னிங்க் டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க..


வெயில் காலம் வந்தாலே பெண்கள் அதுவும் வேலைக்கு போகும் பெண்கள் பயப்படுவது சூரியனுக்கு தான். 

முகம் கருமையாகுமே என சன் ஸ்க்ரீன் லோஷன் போட்டு, முகம் முழுக்க துப்பட்டாவினால் மறைத்துக் கொண்டு செல்வார்கள். அவர்களுக்கு தேங்காய் எண்ணெய் ஒரு வரப்பிரசாதமாகும்.

தேங்காய் எண்ணெய் போதிய அளவு எடுத்து முகம், கைகள் என வெயில் படும் இடங்களில் தடவ வேண்டும். அது விரைவில் சருமத்தினால் உறிஞ்சுக்கொள்ளும். வெயிலின் தீவிரத்தில் சருமத்தின் மேல் ஒரு திரை போன்று செயல்படுகிறது.

அல்லது மிகவும் தரம் வாய்ந்த சன் ஸ்க்ரீன் லோஷனுடன் தேங்காய் எண்ணெய் கலந்தும் உபயோகிக்கலாம். வெளியில் போவதற்கு சில நிமிடங்கள் முன்பாக போட்டால் நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெய், விட்டமின் D-யை, உடல் உறிஞ்சுக் கொள்ள உதவி புரிகிறது.

ஆனால் மற்ற சன்-ஸ்க்ரீன் லோஷன்கள் வெயிலிருந்து சருமத்தை காத்தாலும், விட்டமின் D-யை உட்புக விடாமல் தடுக்கின்றன. ஆகவே இயற்கையான சன்ஸ்க்ரீன் தான் எப்போதும் நமக்கு பாதகம் தராது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

கோடையில் சருமம் கருமையடைவதை தடுக்கும் தேங்காய் எண்ணெய்


நமது மொத்த உடல் பாரத்தையும் அந்த சிறிய பாதங்கள்தான் தாங்குகிறது.அதிகப்படியான அழுத்தம் பாதங்களுக்கு ஏற்படும்போது பாதத்தில் இருக்கும் கொழுப்பு படிவங்கள் விரிந்து வெளிவரப் பார்க்கும்.

உங்கள் பாதம் வறண்டிருந்தால்,அல்லது பாதம் தெரியும்படி காலணி அணிவதனால் அவை எளிதாக தோலினைப் பிளக்கின்றன.அதுதான் பாதத்தில் வெடிப்பு வர காரணம்.

நீங்கள் சற்று கவனித்தீர்களேயானால், ஷூ மற்றும் கட் ஷூ அணிபவர்களுக்கு வெடிப்புகள் வராது. காரணம் குதிகால்கள் இறுக்கமாக மூடி இருப்பதனால் வெடிப்புகள் ஏற்படாது.

பாதவெடிப்புகள் பெரும்பாலும் பெண்களுக்கு வரும். அதிகப்படியான வெப்பத்திலும், குளிரிலும் வெடிப்புகள் வரலாம். சிலருக்கு பிளவு ஆழமாக சென்று வலியை ஏற்படுத்தும்.இன்னும் சிலருக்கு ரத்தம் வரும்.

எளிதில் போகக் கூடிய இந்த பாத வெடிப்பிற்கு கடைகளில் வாங்கும் க்ரீம்கள் உடனடி பலன் கொடுத்தாலும், அவை திரும்ப திரும்ப வரும்.

வீட்டிலேயே இதற்கு தீர்வு காண இந்த கட்டுரை உதவும். கீழே சொல்லியிருக்கும் இரண்டு முறைகளுமே உங்கள் பாதத்தின் வெடிப்புகளுக்கு சிறந்த தீர்வாகும். எப்படி செய்வது எனப் பார்க்கலாம்.

செய்முறை 1: ரைஸ் வினிகர் அரிசியை பதப்படுத்தி செய்யக்கூடிய வினிகர். இது,பாதங்களில் ஏற்படும் வெடிப்பிற்கு சிறந்த பலனைத் தரும்.கால்களை மிருதுவாக்கும், வெடிப்புகளை நீங்கச் செய்யும். ஆலிவ் ஆயில் சருமத்திற்கு கிடைத்த ஒருவரப் பிரசாதமாகும்.

பாதத்தில் இருக்கும் சொரசொரப்பினையும்,கடினத்தன்மையையும் நீக்கி,பஞ்சு போலாக்குகிறது.உப்பு இறந்த செல்களை நீக்குகிறது. பாதத்தின் வெடிப்புகளினுள் தங்கும் கிருமிகளை அழிக்கிறது.தொற்றுக்களை நீக்கும்.

தேவையானவை:

ரைஸ் வினிகர் :1 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் ஆயில்- 1 டேபிள் ஸ்பூன்

உப்பு- 2 டேபிள் ஸ்பூன்

ஒரு டப்பில் பாதங்கள் மூழ்கும் அளவிற்கு,பொறுத்துக் கொள்ளும் சூட்டில்,சுடு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் மேலே சொன்ன மூன்றையும் போட்டு கலக்க வேண்டும். பின் அதில் பாதங்களை, 20 நிமிடங்கள் வைக்க வேண்டும்.பின் வெடிப்புக்கான க்ரீமினை போடவும். இவ்வாறு தினமும் செய்தால், ஒரே வாரத்தில் வெடிப்பு போய் பாதங்கள் அழகாகிவிடும்.

செய்முறை 2:

தேவையானவை :

சோற்றுக்கற்றாழை

தேன்

கிளிசரின்

பெட்ரோலியம் ஜெல்லி

சோற்றுக்கற்றாழை, தேன் ,கிளிசரின் பெட்ரோலியம் ஜெல்லி கொண்டு செய்யும் இந்த ஜெல் மிகச் சிறந்த பலன்களைத் தரும். சோற்றுக் கற்றாழை சருமத்திற்கு அற்புதத்தை தரும் மூலிகைச் செடியாகும். தேன் கிருமி நாசினி. பாதங்களின் பிளவு மிக ஆழமாக இருந்தால், கிளிசரின் தவிர வேறெதுவும் இதற்கு தீர்வு தராது.

பெட்ரோலியம் ஜெல்லி வெடிப்பிற்கு மிகச் சிறந்த மருந்தாகும். இது உடனடியாக செயல்படுவதால், வெடிப்புகள் வேகமாக குறையும். இந்த நான்கும் சேர்த்து செய்யும் கலவை பாதங்களில் மேஜிக் செய்யும் என்றால் மிகையாகாது. இதனை வீட்டில் முயன்று பாருங்கள்.

நீங்களே உணர்வீர்கள். சோற்றுக்கற்றாழையின் சதைப்பகுதியை எடுத்து, அதனுடன், தேன், கிளிசரின் சேர்த்து நன்கு கலக்கவும். பின் அதனுடன் சிறிது பெட்ரோலியம் ஜெல்லியையும் கலந்து தினமும் இரவில் தேய்க்கவும். மறு நாள் காலையில் காலை ஸ்க்ரப் செய்யவும். இறந்த செல்கள் அகன்று, கால்கள் நாளடைவில் மிருதுவாகும்.

மாதம் ஒரு முறை பார்லரில் பெடிக்யூர் செய்து கொள்வது வெடிப்பு வராமல் தடுக்கும். தினமும் பாதங்களை ஸ்க்ரப் செய்வது மிக முக்கியம் அப்போதுதான் அழுக்குகள் நீங்கி, பாதங்கள் மிருதுவாகும். கூடுமானவரை வீட்டினுள் சாக்ஸ் அணிந்து கொள்வது வெடிப்பு வராமல் காக்கும்.



பாதங்களில் வெடிப்பு காணாமல் போக வேண்டுமா? இதோ அசத்தல் டிப்ஸ்

How To Cure Pimples at Home in 5 Days?

How To Cure Pimples at Home in 5 Days?