Salad To Control Ur Sugar Levels | Herbal Solutions




Amazing Mediicinal Benefits of Banana Flower - Tamil Health Tips

Amazing Mediicinal Benefits of Banana Flower - Tamil Health Tips


வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள்.

முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை. வாழைப் பழத் தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும்.

இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வேண்டாம். வாழைப் பழம் கைவசம் இருந்தால் போதுமானது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.ட்ரை பண்ணிவிட்டு சொல்லுங்க மக்களே.

சோரியாஸிஸ் பிரச்சனையா? சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.

மருக்கள் காணாமல் போகச் செய்ய : மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள்.

பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.

சரும அலர்ஜியா? ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ட்ரை பண்ணுங்க.

வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.

முகப்பருவை எதிர்க்கிறது: முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.

வெண்மையான பற்கள் பெற : மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செயும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும்.

இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழத் தோல் இருக்கு பாஸ். அதை எடுங்க. தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.

காயங்கள் ஏற்பட்டுள்ளதா? பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னாங்க. காயம் வந்த அது ஆறதுக்குள்ள அங்கேயே திரும்ப அடிபடும். இதை நிறைய பேர் அனுபவப்பட்டிருப்பார்கள்.

வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுக்கு சிம்பிள் வழி தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிடும்.

வீணாய் வீசி எறியும் வாழைபழத் தோலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்கள்தானே. சிறு ஆணியும் பல் குத்த உதவும் என்பதை மறக்காதீர்கள். வாழைப்பழத் தோலினை வீசி எறியும் முன் மேலே சொன்ன எதற்காவது உபயோகப்படுமா என யோசித்துவிட்டுப் பின் எறியுங்கள்.


வாழைப்பழத் தோலினை தூக்கி எறியும் முன் சற்று யோசியுங்கள் நண்பர்களே



இரவில் எட்டு மணி நேரம் அமில ஊறலில் இருக்கும் இரைப்பை, காலை உணவைச் சாப்பிடாவிட்டால் அமிலத்தால் சிதையத் தொடங்கும் என்பது ஏன் பலருக்கும் புரிவது இல்லை. காலை உணவின் மூலம் இரைப்பையை நிரப்பாமல் இருந்தால், இரவில் உடலில் இயல்பாக ஏறிய பித்தம் மெதுவாகத் தலைக்கு ஏறும். அது வயிற்றுப் புண், வயிறு உப்புசம், தீவிர வயிற்று வலி, வாந்தி, பசியின்மை, அதிக ரத்தக்கொதிப்பு, மன அழுத்தம் வரை பல நோய்களைக் கொண்டுவந்து சேர்க்கும். காலை 9 மணிக்குள் சாப்பிடாமல், 11 மணிக்கு எழும் அகோரப் பசியில் பர்கர், பீட்சா அல்லது வென்னிலா மில்க்ஷேக் என சாப்பிடுவதில் எக்குத்தப்பாக எகிறும் டிரான்ஸ்ஃபேட் கொழுப்பும் கலோரியும் அடிவயிற்றில் படிந்து பெருகும்.

காலைஉணவு மிக அவசியம். !



முடக்கறுத்தான்.... இதை முடக்கத்தான், மொடக்கத்தான் என்ற வேறு பெயர்களிலும் அழைப்பார்கள். முடக்கு + அறுத்தான். அதாவது, வாதநோயால் கை, கால்களில் ஏற்படும் பிடிப்பு, வாதக்கோளாறுகளை சரிசெய்வதால் இந்த மூலிகைக்கு அந்தப் பெயர் வந்தது. வேலியோரங்களிலும், சாலையோரங்களிலும் தானாகவே வளரக்கூடிய இந்த முடக்கத்தான், கீரை வகையைச் சேர்ந்தது. இதை சாம்பார், காரக்குழம்பு அல்லது புளிக்குழம்புகளில் சேர்த்து சமைத்து சாப்பிடுவதால் உடல்வலி, பிடிப்பு, வீக்கம் போன்றவை குணமாகும். இதைப் பயன்படுத்தும்போது சிலருக்கு பேதியாகலாம், ஆனால், அதற்காக பயப்படத் தேவையில்லை.

வாதப்பிடிப்பு, இரைப்பு இருமல், மூலம், பித்தம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் முடக்கத்தான் கீரையை நீர் விட்டு காய்ச்சி, தினமும் 2 தடவை 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால், உடனடி பலன் கிடைக்கும். இதேபோல் முடக்கத்தான் ரசம் வைத்தும் சாப்பிடலாம். தோசை மாவுடன் மிக்ஸியில் அரைத்த முடக்கத்தான் கீரையை கலந்து தோசை வார்த்து சாப்பிட்டு வந்தாலும் பலன் கிடைக்கும். உடல் வலி உள்ளவர்களுக்கும், மூட்டுவலியால் அவதிப்படும் முதியோருக்கும் இந்த முடக்கத்தான் கீரை உணவுகள் கைகண்ட பலன் தரும்.

மூட்டுவலியை விரட்டும் முடக்கத்தான்!


என்ன தான் மணிக்கணக்கில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்தாலும், உங்கள் தசைகளில் எந்த ஒரு வளர்ச்சியும் தென்படவில்லையா? வெறும் உடற்பயிற்சியை செய்தால் மட்டும் ஒருவரின் தசைகள் வளர்ச்சிப் பெறாது. அதற்கு பின் நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் தான் தசைகளில் வளர்ச்சியைக் காண முடியும்.

ஆனால், நம்மில் பலர் தசைகள் நன்கு வளர்வதற்கு ஜிம்மில் உடற்பயிற்சி செய்த பின், ஒருசில தவறுகளை செய்து வருகின்றனர். அதனால் தான் அவர்களுக்கு தசைகளில் வளர்ச்சியைக் காண முடியவில்லை. 

இங்கு தசைகளின் வளர்ச்சியில் இடையூறை உண்டாக்கும், உடற்பயிற்சிக்கு பின் நாம் செய்யும் சில தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தாமதமாக உணவு உட்கொள்வது உடற்பயிற்சி செய்து முடித்து வீட்டிற்கு வந்ததும் 1 மணிநேரத்திற்குள் உணவை உட்கொள்ள வேண்டும். தற்போது பலரும் மாலையில் ஜிம் செல்வதால், சீக்கிரமே உணவை உட்கொண்டு விட வேண்டும். தாமதமாக உட்கொண்டால், அதனால் எவ்வித பலனும் கிடைக்காது.

உடற்பயிற்சிக்கு பின் மது ஜிம் முடிந்து வீட்டிற்கு வந்த பின் மது அருந்தினால், நீங்கள் ஜிம்மில் செலவழித்த நேரம் முழுவதையும் வீணாக்கிவிட்டீர்கள் என்று அர்த்தம். 

ஏனெனில் மது அருந்தினால், அது புரத சேர்க்கையைக் குறைத்துவிடும். அதிலும் மது அருந்திக் கொண்டே அளவுக்கு அதிகமாக உட்கொண்டால், அதனால் தசைகளின் மீட்பு குறையும்.

ஸ்போர்ட்ஸ் பானங்கள் பருகுவது சர்க்கரை கலக்கப்பட்ட ஸ்போர்ட்ஸ் பானங்கள் எலக்ட்ரோலைட்டுக்களை நிரப்ப உதவுமே தவிர, அதில் கலோரிகள் அளவுக்கு அதிகமாக உள்ளது. எனவே ஸ்போர்ட்ஸ் பானங்களைப் பருகுவதைத் தவிர்த்த, இளநீர் அல்லது சுரைக்காய் ஜூஸ் குடியுங்கள்.

சப்ளிமண்ட்டுகளை எடுப்பது தசைகளின் வளர்ச்சிக்கு ஏராளமான சப்ளிமண்ட்டுகளான புரோட்டீன் பவுடர்கள் ஜிம்மிலேயே விற்கப்படுகிறது. இப்படி சப்ளிமண்ட்டுகளை எடுத்தால், அதனால் பிற்காலத்தில் மோசமான விளைவைத் தான் சந்திக்கக்கூடும். எனவே முடிந்த வரையில் உணவுகளின் மூலம் புரோட்டீனைப் பெற முயற்சி செய்யுங்கள்.

ஸ்ட்ரெட்சிங் செய்யாமல் இருப்பது ஸ்ட்ரெட்சிங் செய்வதால், தசைகளுக்கு ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறுவது அதிகரிக்கப்படுவதோடு, இரத்த ஓட்டமும் அதிகரிக்கும். 

இதனால் தசைகளில் காயங்கள் குறையக்கூடும். மேலும் நல்ல நெகிழ்வுத்தன்மை மற்றும் நல்ல நிலையைப் பெற உதவி புரியும். ஆகவே எப்போதும் உடற்பயிற்சி செய்து முடித்த பின் ஸ்ட்ரெட்சிங் செய்ய மறக்காதீர்கள்.

அளவான தூக்கத்தை மேற்கொள்வது ஒரு நாளில் தசைகள் இரு முறை வளர்ச்சிப் பெறும். ஒன்று தூங்கும் போது, மற்றொன்று உடற்பயிற்சிக்கு பின். உடற்பயிற்சி செய்த பின் ஒருவர் போதிய அளவு தூக்கத்தை மேற்கொண்டால், தசைகளில் புரத சேர்க்கை அதிகரித்து, வளர்ச்சியும் அதிகரிக்கும்.







உடற்பயிற்சிக்கு பின் செய்யும் இந்த தவறுகள் தான் தசைகளின் வளர்ச்சியைத் தடுக்கிறது என தெரியுமா?


குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்

குழந்தை பிறந்த பின்பு, அந்த குழந்தைக்கு எந்த அளவு தாய்ப்பால் கொடுக்க வேண்டும், மேலும் வளர வளர எவ்வளவு உணவு கொடுத்தால், குழந்தை நன்கு ஆரோக்கியமாக இருக்கும் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏனெனில் தற்போதுள்ள குழந்தைகள் விரைவில் குண்டாக மாறிவிடுகின்றனர். எனவே அவர்களின் உடலை ஆரோக்கியமாகவும், ஃபிட்டாகவும் வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு தாயின் கடமை.

இப்போது குழந்தை பிறந்த பின்னர், ஒரு வயது ஆகும் வரை எவ்வளவு உணவானது தேவைப்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

0-4 மாதம் வரை

நிறைய ஆய்வுகள், குழந்தை பிறந்த பின்னர், அவர்களுக்கு தாய்ப்பாலிலேயே குழந்தைக்கு வேண்டிய அனைத்து சத்துக்களும்
கிடைத்துவிடும் என்று சொல்கிறது.

ஏனெனில் தாய்ப்பாலில் அளவுக்கு அதிகமான நோய் எதிர்ப்புச் சக்தி நிறைந்துள்ளது. மேலும் அந்த தாய்ப்பால், அவர்களின் உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றுவதோடு, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் பிலிரூபின் என்னும் நிறமியை வெளியேற்றிவிடும்.

அதிலும் அந்த தாய்ப்பாலை குறைந்தது நான்கு மாதங்களுக்கு கொடுக்க வேண்டும். இதனால் அவர்களது உறுப்புகள் அனைத்தும் வலுவடைவதோடு, செரிமான மண்டலமும் நன்கு செயல்பட ஆரம்பிக்கும்.

4-6 மாதம் வரை

நான்கு மாதங்களுக்குப் பின்னர் குழந்தைகள் வேறு உணவை சாப்பிடுவதில் கவனத்தை செலுத்துவது போன்று தெரிந்தால், அப்போது ஒரு டேபிள் ஸ்பூன் வேக வைத்த இனிப்பு உருளைக்கிழங்கு, கேரட், ஆப்பிள், வாழைப்பழம், பீச் போன்றவற்றை நன்கு மசித்து கொடுக்க வேண்டும்.

அதிலும் இவர்களது ஆர்வத்தை எவ்வாறு தெரிந்து கொள்வதென்றால், ஒரு நாளைக்கு 8-10 முறை தாய்ப்பால் கொடுத்தும் அவர்கள் பசிக்கு அழுதால், அப்போது இந்த உணவுகளையும், தாய்ப்பால் கொடுத்து சிறிது நேரத்திற்குப் பின் கொடுக்கலாம். அதுவும் ஒரு டேபிள் ஸ்பூன் தான் கொடுக்க வேண்டும்.

6-8 மாதம் வரை

இந்த மாதங்களில் தாய்ப்பால், பழங்களை கொடுக்கும் போதோ, மெதுவாக வேக வைத்து மசித்த சாதம், காய்கறிகள், பருப்பு வகைகள்,
சிக்கன் போன்ற அனைத்தையும் கொடுக்கலாம்.

அதிலும் அவ்வாறு கொடுக்கும் போது, அவர்களுக்கு 3-9 டேபிள் ஸ்பூன் செர்லாக், 2-3 முறை தாய்ப்பால் மற்றும் 1/4 அல்லது 1/2 கப் வேக வைத்து மசித்த காய்கறிகள் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம்.

மேலும் அவ்வாறு இவற்றையெல்லாம் கொடுக்கும் போது, குழந்தைகளுக்கு அந்த உணவுகளால் ஏதாவது அலர்ஜி போன்று வருகிறதா என்று அவ்வப்போது கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வந்தால், உடனே அந்த உணவுகளில் எவற்றால் ஆகிறது என்று மருத்துவரிடம் சென்று ஆலோசித்து, அவற்றை தவிர மற்றவற்றை கொடுக்கலாம்.

8-10 மாதம் வரை

இந்த வயதில், சீஸ், தயிர் மற்றும் இரும்புச்சத்துள்ள தானியங்களான அரிசி, பார்லி, கோதுமை மற்றும் ஓட்ஸ் போன்றவற்றை மெதுவாக கொடுக்க ஆரம்பிக்கலாம். மேலும் அத்துடன் 1/4 கப் புரோட்டீன் உணவுகளான முட்டை, மீன் போன்றவற்றையும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

10-12 மாதம்

இந்த வயதில் அனைத்து உணவுகளையும் கொடுக்கலாம். ஆனால் அது அளவாக இருக்க வேண்டும். மேலும் இந்த வயதில் உணவுகள் கொடுக்கும் போது மிகவும் கவனமாகவும், அளவாகவும் கொடுக்க வேண்டும்.

அதாவது 1/3 கப் பால் பொருட்கள் அல்லது 1/2 கப் சீஸ் உடன் 1/4 அல்லது 1/2 கப் சாதத்துடன், காய்கறிகள் மற்றும் புரோட்டீன் உணவுகளை நிச்சயம் கொடுக்க வேண்டும்.

1 வயது வரை குழந்தைக்கு கொடுக்க வேண்டிய உணவு முறைகள்


60 வயதிற்கு மேல் பெண்களுக்கு எலும்பு பலகீனத்தால் முதுகு வலி அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது.

பெண்கள் நிமிர்ந்து நிற்கவும்– அவர்கள் நினைத்தபடி எல்லாம் குனிந்து, வளைந்து செயல்படவும்– அடிப்படையாக அமைந்திருப்பது முதுகு. இதன் மையமாக திகழ்வது முதுகுத்தண்டு வடம்.

கருவாக தாயின் வயிற்றுக்குள் சிசு உருவாகும் முதல் மாதத்திலே முதுகுத்தண்டுவட கட்டமைப்பும், மூளை கட்டமைப்பும் தோன்றிவிடுகிறது. மூளைக்கும்– முதுகுத் தண்டுக்கும் நரம்பு இணைப்பு இருக்கிறது. மூளையில் தொடங்கும் நரம்புகள் முதுகுத்தண்டின் இறுதிப்பகுதியில் நிறைவடைகிறது.

ஒருசில குழந்தைகளுக்கு முதுகுத்தண்டு வளர்ச்சி சரியாக அமைவதில்லை. கீழ்ப்பகுதியில் வளர்ச்சி குன்றி, சேதமடைந்தது போல் தோன்றும். இந்த குறைபாட்டை மெனின்கோ மைலுசில் (Meningo myelucele) என்கிறோம்.

இயற்கை கொடுத்த வரப்பிரசாதமாக கருவில் முதலிலே முதுகுத்தண்டுப் பகுதி உருவாகிவிடுவதால், வயிற்றில் இருக்கும் சிசுவுக்கு முதுகுத்தண்டுப் பகுதி சரியாக அமைந்திருக்கிறதா என்பதை பரிசோதனை மூலம் கண்டறிந்துவிடலாம். இது மனித இயக்கத்திற்கு மிக முக்கியமான உறுப்பாக இருப்பதால், சரியாக அமைந்திருக்காவிட்டால் கருவிலே கண்டறிந்து கருக்கலைப்பு செய்துவிடலாம்.

கழுத்தில் உள்ள 7 எலும்புகள், மார்பகத்தின் பின்புறம் உள்ள 12 எலும்புகள், வயிற்றின் பின்புறம் உள்ள 5 எலும்புகள், இதர 9 எலும்புகள் சேர்ந்து, 33 எலும்புகளை கொண்டிருக்கிறது, முதுகுத்தண்டு வடம்.

இந்த எலும்புகளோடு மூளையும், நரம்புகளும் இணைக்கப்பட்டிருப்பதால் சிறிதாகவோ, பெரிதாகவோ பிரச்சினைகள் ஏற்படும்போது வலி தோன்றுகிறது. அதைதான் முதுகு வலி என்கிறோம்.

பொதுவாக முதுகுத்தண்டுவட எலும்புகள், பெண் என்றால் 17 வயது வரையும், ஆண் என்றால் கிட்டத்தட்ட 20 வயது வரையும் வளரும் வாய்ப்புள்ளது.

பெண்கள் வயதுக்கு வரும் தருணத்தில் அவர்களின் முதுகெலும்பை சரியாக கவனித்துப்பார்க்கவேண்டும். ஒரு சிலருக்கு ‘கோலியோசிஸ்’ என்ற பாதிப்பு ஏற்படுகிறது. இது முதுகுத்தண்டை வளையவைக்கும் ஒருவித நோய்.

தோள்பட்டையும் இறங்கும். இந்த பாதிப்பு கேரளாவை சேர்ந்த பெண்களுக்கு அதிகம் இருக்கிறது. இதை தொடக்கத்திலே கண்டுபிடித்துவிட்டால் கட்டுப்போட்டு சரிசெய்திடலாம். கவனிக்காமல் விட்டுவிட்டால் அறுவை சிகிச்சை தேவைப்படும்.

பெரும்பாலும் கல்லூரிப் பருவத்தில்தான் பெண்கள் முதல் முறையாக முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள். அவர்கள் காலை உணவை முழுமையாக, முறையாக சாப்பிடாமல் இருப்பது அதற்கான முதல் காரணம். அவர்கள் மீது வெயில் படாததால், வைட்டமின்– டி பற்றாக்குறை ஏற்படுவது இரண்டாவது காரணம்.

கல்லூரிப் பருவத்தில் பெரும்பாலான மாணவிகள் வீட்டில் படிக்கும் அறை, படுக்கை அறை, வகுப்பு அறை என்று அறைகளுக்குள்ளே வாழ்க்கையை சுருக்கிக்கொள்வதால் வைட்டமின்– டி பற்றாக்குறை ஏற்படுகிறது.

மேலும் அவர்கள் வீட்டில் உட்காரும்போதும், படிக்கும்போதும், படுக்கும்போதும், வேலைபார்க்கும் போதும் சரியான ‘நிலையில்’ செயல்படுவதில்லை. வளைந்து நெளிந்து உட்காருவது, படுத்துக்கொண்டே படிப்பது, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்வது போன்றவைகளால் முதுகுத்தண்டுக்கு அழுத்தம் ஏற்பட்டு முதுகு வலி தோன்றுகிறது.

அடுத்து பெண்கள் கவனிக்கத் தகுந்தது கர்ப்பக் காலம். தாயின் உடலுக்குள் இன்னொரு உடல் (உயிர்) வளரும் அந்த காலகட்டத்தில் இருவருக்கான கால்சிய சத்து தேவை. மீன், முட்டை, கீரை வகைகள், பழங்கள், தரமான பாலில் கால்சிய சத்து இருக்கிறது. கால்சிய சத்து குறைபாடு ஏற்பட்டால் எலும்பு வளர்ச்சியும், எலும்பு பலமும் குறையும்.

முதுகு வலி தோன்றும். கர்ப்ப காலத்தில் ‘வாக்கிங்’ செல்வது முதுகுத்தண்டு இயக்கத்திற்கு சரியான பயிற்சியாக அமையும். பயிற்சியாளரின் வழிகாட்டுதலோடு குறிப்பிட்ட சில யோகாசனங்களையும் செய்யலாம்.

குழந்தை பிறந்து, பால் புகட்டும்போது பெண்கள் ஒரே நிலையில் அவ்வப்போது அமரவேண்டியதிருக்கிறது. அப்போது அனேக தாய்மார்கள் முதுகுவலியால் அவதிப்படுகிறார்கள்.

கர்ப்ப காலத்திலே முறையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டால், பால் புகட்டும் காலத்தில் முதுகுவலியால் அவதிப்படவேண்டிய சூழ்நிலையை தவிர்த்துவிடலாம்.

30 முதல் 40 வயது பருவத்தில் பெண்கள் முதுகு வலியால் அவதிப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த பருவத்தில் தாய்மை, பிரசவத்தால் உடல் எடை கூடிவிடுகிறது.

இதனால் முதுகுத்தண்டுக்கும் சுமை கூடும். அந்த காலகட்டத்தில் பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரித்து, ஓய்வற்ற உழைப்பிற்கும், பல்வேறு விதமான நெருக்கடிகளுக்கும் உள்ளாகிறார்கள்.

அப்போது அவர்கள் தன் உடலை நினைத்துப்பார்ப்பதில்லை. சரியாக உடலை பராமரிப்பதும் இல்லை. உணவு, உடற்பயிற்சி, ஓய்வு போன்றவை சரியாக இல்லாததால் இந்த பருவத்தில் முதுகுவலி அவர்களுக்கு தோன்றுகிறது. குறிப்பாக தகவல் தொழில்நுட்பத்துறையில் பணியாற்றும் பெண்களை இந்த வலி பாடாய்படுத்துகிறது.

40 முதல் 50 வயது வரையிலான பருவம் பெண்களை பொறுத்த வரையில் மிக முக்கிய காலகட்டம். அப்போது அவர்கள் மாதவிலக்கு நின்றுவிடும் ‘மனோபாஸ்’ காலகட்டத்தை அடைந்திருப்பார்கள். அதுவரை அவர்கள் உடலை பாதுகாத்த ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் அப்போது சுரக்காது. அதனால் உடல் எடை அதிகரிக்கும்.

உடலில் இருக்கும் கால்சிய சத்தும் சிறுநீர் மூலம் வெளியேறிக்கொண்டிருக்கும். அதனால் எலும்பு அடர்த்தி குறைபாடான ‘ஆஸ்டியோபேராசிஸ்’ பாதிப்பு ஏற்படுகிறது.

அப்போது வலி தோன்றும். 3 அங்குலம் உயரம் குறைந்து உடல் கூன் விழுந்ததுபோல் தோன்றும். இந்த பாதிப்பு தற்போது 30 சதவீத பெண்களுக்கு ஏற்படுகிறது.

60 வயதிற்கு மேல் பெண்களுக்கு எலும்பு பலகீனத்தால் முதுகு வலி அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. அப்போது ‘டீஜெனரேட்டிவ் கோலியோசிஸ்’ என்ற பாதிப்பு ஏற்படலாம்.

இதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருபக்கமாக சரிந்து நடப்பார்கள். சிலர் முன்னோக்கி இழுத்த நிலையில் நடப்பார்கள். அதனால் மூட்டுகள் மடங்கும். உடல் வலி அதிகரிக்கும். இதற்கும் தேவையான சிகிச்சையை பெறவேண்டும்.

ஓய்வற்ற வேலை, அடிபடுதல், அடிபட்டதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமை, தவறான முறையில் பொருட்களை தூக்குவது, எலும்பு பலகீனம், எலும்பு தேய்மானம், கர்ப்பப்பை மற்றும் சிறுநீர்ப் பையில் ஏற்படும் கிருமித் தொற்று, குடலில் ஏற்பட்டிருக்கும் நோய்கள், கால்சிய சத்து குறைபாடு போன்ற பல காரணங்களால் முதுகுவலி வரலாம்.

முதலில் முதுகுவலிக்கான காரணத்தை கண்டறிய வேண்டும். அதற்கு பரிசோதனைகள் அவசியம். பெரும்பாலான வலிகள் மருந்து, மாத்திரை மற்றும் பிசியோதெரபி மூலம் தீர்ந்துவிடும். ஒரு சிலருக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்.

உடல் ஆரோக்கியம் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள்.

முதுகு வலியில் இருந்து பெண்கள் மீளும் வழி


நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால், பதப்படுத்தப்பட்ட மாமிசத்தையும், உணவுகளையும் ஒதுக்குங்கள்.

கடந்த 20 வருடங்களில் நமது உணவு முறையில் பெரிய மற்றம் ஏற்பட்டுள்ளது. வீட்டில் சமைத்து உண்ணாமல் உணவகங்களுக்கு செல்லும் போக்கு அதிகமாகியுள்ளது.

வீட்டிலும் கூட ப்ரஷ் ஆன, காய்கறி மாமிசங்களை பயன்படுத்துவதை விட ப்ரிஜில் வைத்து நாட்கணக்கில் பயன்படுத்தும் பழக்கம் வந்துவிட்டது.

இப்படி நாட்கணக்கில் உணவுப் பொருட்களை வைத்து பயன்படுத்துவதற்காகவே பெரும் நிறுவனங்கள் பதப்படுத்தப்பட்ட உணவுகளை விற்கத் தொடங்கியுள்ளன. அந்த வகையில் இப்போது பதப்படுத்தப்பட்ட மாமிசமும் இந்தியாவிற்கு வரத்தொடங்கிவிட்டது.

அதிலும் மாட்டிறைச்சி, பன்றி மாமிசம், இஞ்சி, பூண்டு கொண்டு தயாரிக்கப்பட்ட இன்னும் சில உணவுகள் போன்றவைகள் கெட்டுப் போகாமல் இருக்க சில ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன.

இவை தான் இப்போது கெடுதலை தருகின்றன. பதப்படுத்தப்பட்ட உணவை 150 கிராம் உண்டால் அது 34 சிகரெட்டுகளை பிடிப்பதற்கு சமம் என்கிறது ஆய்வு.

இந்த ரசாயனத்தில் உள்ள ‘நைட்ரெட்‘ என்ற பொருள்தான் உணவுகளை கெட்டுப்போகாமல் பாதுகாக்கிறது. இதில் ‘கார்சிநோஜென்‘ என்ற புற்றுநோயை உருவாக்கும் பொருள் அதிக அளவில் உள்ளது.

அதோடு மட்டுமல்லாமல் அதிக உப்பும், கொழுப்பும் உள்ளது. இது மனித ஆரோக்கியத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. இதனால் வளர்ந்த நாடுகள் பல இந்த உணவுகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்தியா போன்ற சில நாடுகள் மட்டும் தடை விதிக்காமல் இருக்கின்ற காரணத்தால், அந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் சந்தைப்படுத்தப்படுகின்றன. மற்ற நோய்களைக் கூட சுலபமாக கண்டறிந்துவிடலாம். புற்றுநோயை கண்டுபிடிப்பது கடினம். முற்றிய நிலையில்தான் பாதிப்பு தெரிய தொடங்கும்.

தினமும் 50 கிராம் பதப்படுத்தப்பட்ட மாமிசத்தை சாப்பிட்டாலே இந்த பாதிப்பு ஏற்படும் என்கின்றன மருத்துவ ஆய்வுகள். நாம் ஆரோக்கியமாக வாழவேண்டும் என்றால், பதப்படுத்தப்பட்ட மாமிசத்தையும், உணவுகளையும் ஒதுக்குங்கள் என்கிறார்கள், மருத்துவர்கள்.

புற்றுநோயை உருவாக்கும் மாமிசம்


அனைவருக்குமே ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதாலும், உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும், மன அமைதி கிடைத்து, சந்தோஷத்தை உணர முடியும் என்பது தெரியும். ஆனால் ஒருசில உணவுகளை உட்கொண்டால், அவை மனநிலையைக் கெடுப்பதோடு, எரிச்சலையும், கோபத்தையும் தூண்டும்.

எனவே ஏற்கனவே உங்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருமாயின், கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை மட்டும் தயவு செய்து சாப்பிடாதீர்கள். சரி, இப்போது உங்களுக்கு அதிகளவு கோபத்தை வரவழைக்கும் உணவுப் பொருட்கள் என்னவென்று பார்ப்போம்.

காரமான உணவுகள் காரமான உணவுகளை மன அழுத்தத்தில் இருக்கும் போது உட்கொண்டால், அதனால் இரைப்பையில் அமில சுரப்பு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சலை உணரக்கூடும். மேலும் காரமான உணவுகள், உடலின் வெப்பத்தை அதிகரிப்பதால், அது உங்கள் பரபரப்புடன் இருக்கச் செய்யும்.

ட்ரான்ஸ் கொழுப்புக்கள் கலிபோர்னியாவில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில், அதிகளவு ட்ரான்ஸ் கொழுப்புக்களை உட்கொண்டால், அதிகளவு கோபத்தை வெளிப்படுத்தக்கூடும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில் ட்ரான்ஸ் கொழுப்புக்கள் உடலை சீராக வைத்துக் கொள்ள ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்களை மெட்டபாலிசம் செய்யும் போது இடையூறை ஏற்படுத்தும். எனவே எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிகம் உட்கொள்வதைத் தவிர்த்திடுங்கள்.

காப்ஃபைன் பானங்கள் காபி அல்லது டீயை ஒரு நாளில் அதிகளவு பருகுவோருக்கு, அதிலும் தூங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் பருகினால், தூக்கத்தில் இடையூறை ஏற்படுத்தி, அதனால் கோபத்தையும், எரிச்சலையும் உண்டாக்கும். எனவே எப்போதும் காபி குடிப்பதாக இருந்தால், படுக்கைக்கு 3 மணிநேரத்திகு முன் குடியுங்கள்.

பதப்படுத்தப்பட்ட மற்றும் சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் பிஸ்கட், சிப்ஸ் போன்றவை எளிதில் பசியைக் கட்டுப்படுத்தும் உணவுப் பொருளாக இருக்கலாம். ஆனால் இவற்றை அதிகம் உட்கொண்டால், இரத்த சர்க்கரை அளவு ஒரே நேரத்தில் அதிகரித்து, மன நிலையில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கி, கோபத்தை ஏற்படுத்தும்.

சூயிங் கப் சூயிங் கம் மற்றும் செயற்கை சுவையூட்டிகள் கலக்கப்பட்ட மிட்டாய்கள், செரிமான மண்டலத்தின் செயல்பாட்டில் இடையூறை உண்டாக்கி, அதனால் மனதில் ஒருவித எரிச்சலைத் தூண்டும். ஆகவே இவற்றை அதிகம் உட்கொள்ளாதீர்கள்.

ஆல்கஹால் ஆல்கஹால் கார்டிசோலை அதிகமாக வெளியிடச் செய்து, நரம்பு மண்டலத்தைத் தாக்கி, கட்டுப்படுத்த முடியாத அளவில் கோபத்தை உண்டாக்கும். அதனால் தான் ஆல்கஹால் பருகும் பழக்கம் உள்ளவர்களுக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறது.


உங்களுக்கு அதிகளவு கோபத்தை வரத் தூண்டும் உணவுப் பொருட்கள்!


பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன.

பிராய்லர் கோழிகள் 40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்துவிடுகிறது. கோழிகளை வளர்ப்பதற்கு 12 விதமான கெமிக்கல்ஸ் அதற்கு கொடுக்கப்படும் உணவோடு கலந்து கொடுக்கப்படுகிறது.

கோழிகளுக்கு நோய்கள் வரக்கூடாது என்பதற்காக அதிகளவு ஆன்ட்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. 

இதனால் கோழிகளுக்கு வரும் நோயை குணப்படுத்த முடியாமல் போவதோடு, அந்த இறைச்சியை சாப்பிடும் மனிதர்களுக்கும் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

கோழிகள் அதிக சதையோடு வளர்வதற்கு பல்வேறு விதமான மருந்துகளை ஊசிகளின் மூலம் கோழிகளுக்கு செலுத்துகிறார்கள். அதனால் அதை உண்ணும் ஆண்களின் விந்துவில் உள்ள உயிரணுக்கள் அழிக்கப்படுகிறது. பெண்குழந்தைகள் பத்து பதினோரு வயதிலேயே பருவமடைந்துவிடுகிறார்கள்.

பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொழுப்பு அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும் போது நம் உடலில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகளவில் சேருகின்றன.

இந்த கெட்ட கொழுப்பானது, நமது கல்லீரலில் வீக்கத்தையும் ரத்த அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது. 

100ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. பிராய்லர் கோழியை சாப்பிடுவதால் சிறுநீரகங்ளிலும் கல்லீரலிலும் கான்சர் நோய் மற்றும் குடல் புற்று நோயும் உருவாகிறதாம்.

இது தவிர மஞ்சள் காமாலை, இரைப்பை, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம். இன்றைக்கு நாம் அதிக அளவு லெக் பீஸைத்தான் விரும்பி சாப்பிடுகிறோம். 

கோழிகளின் கால்பகுதியில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருக்கிறது. வயிற்று பகுதியில் குறைவாகத்தான் இருக்கிறது.

கோழிக்கறி என்றாலே லெக் பீஸ்தான் நம் நினைவுக்கு வருகிறது. அந்த லெக்பீஸ் நமக்கு மிக விரைவில் ரத்த அழுத்ததை ஏற்படுத்திவிடும். நாட்டுக்கோழியின் முட்டையில் மஞ்சள் கரு அதிகமாகவும் வெள்ளைக்கரு குறைவாகவும் இருக்கும், பிராய்லர் கோழிகளில் வெள்ளைக் கரு அதிகமாக இருக்கிறது.

இப்போதைக்கு பிராய்லர் என்பது மக்களின் ஊட்டச்சத்து சார்ந்ததாக இல்லை. வணிக நோக்கம் கொண்டதாகவே இருக்கிறது.

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிராய்லர் கோழி




These slimming foods will help you lose weight, and this in three ways: they will limit your calorie intake, increase your metabolism and curb your cravings ...

The best of all worlds! Weight Loss Vegetables - If no food makes you lose weight, it is obviously recommended to lose weight to change diet and exercise. Most fruits and vegetables are low in fat and calories which makes them ideal for use in a weight loss diet; in the fruit diet.

We will present 8 vegetables appetite suppressant which are particularly suitable when you want a flat stomach and thin hips.

Indeed, it is important to learn to control your diet and better manage your hunger if you are trying to burn fat and cellulite from your body to lose belly and hips otherwise your efforts will come to naught even if you use other techniques to lose weight like exercising, dieting.

Weight Loss Vegetables - Most Weight Loss Friendly Foods


தற்போது ஏராளமான மக்கள் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் கஷ்டப்படுகின்றனர். இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் தான் முக்கிய காரணம்.

ஒருவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்து, மேன்மேலும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொண்டால், அதனால் உடல் பருமன், இரத்த அழுத்த பிரச்சனை முதல் இதய நோய்கள் வரை பலவற்றை விரைவில் பெறக்கூடும்.

எனவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

சரி, உணவுகளில் கொலஸ்ட்ராலே இல்லை என்பது தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும். ஏனெனில் இங்கு 0% கொலஸ்ட்ராலைக் கொண்ட உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உட்கொண்டு, நன்மைப் பெறுங்கள்.

உருளைக்கிழங்கு ஆம், உண்மையிலேயே உருளைக்கிழங்கில் கொலஸ்ட்ரால் சிறிதும் இல்லை. அதிலும் இதனை எண்ணெயில் பொரித்து உட்கொள்வதைத் தவிர்த்து, வேக வைத்து உண்ணும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

தக்காளி தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான லைகோபைன், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும்.

ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள் சாலட்டுகள், சாண்விட்ச்களில் தக்காளியை சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும் தினமும் ஒரு டம்ளர் தக்காளி ஜூஸைக் குடிக்கலாம்.

பசலைக்கீரை பசலைக்கீரையில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்களான பைட்டோ ஸ்டெரால்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. மேலும் இதில் கொலஸ்ட்ரால் இல்லை என்பதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்களுக்கு இது ஓர் அற்புதமான உணவுப் பொருள்.

பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகள் இவைகளிலும் கொலஸ்ட்ரால் இல்லை ஆனால் நார்ச்சத்து வளமான அளவில் உள்ளது. எனவே பீன்ஸ், பட்டாணி மற்றும் பருப்பு வகைகளை தவறாமல் உணவில் சேர்த்து, அதன் முழு சத்துக்களையும் பெறுங்கள்.

அவகேடோ/வெண்ணெய் பழம் பலரும் வெண்ணெய் பழம் என்ற பெயரினால், இதில் கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கும் என்று தவறாக நினைக்கின்றனர். ஆனால் இப்பழத்தில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் தான் அதிகம் உள்ளது. மேலும் பல்வேறு ஆய்வுகளிலும், இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதாக கண்டுபிடித்துள்ளனர்.

சோயா பீன்ஸ் சோயா பீன்ஸில் சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் குறைவாகவும், நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் உள்ளது. ஆனால் இதில் கொலஸ்ட்ரால் இல்லை. மேலும் இதனை உணவில் சேர்த்தால், உடலில் புரோட்டீன் அளவு உயர்வதோடு, கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 8-10 சதவீதம் குறையும்.

ஓட்ஸ் ஓட்ஸில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் இருப்பதோடு, கொலஸ்ட்ரால் பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஓர் அற்புதமான உணவுப் பொருள். ஆகவே காலையில் இதனை உணவாக உட்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

பூண்டு பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவை குறைப்பதோடு, இதய நோய் தாக்கும் அபாயத்தில் இருந்தும் குறைக்கும்.

ஆளி விதை ஆளி விதையில் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும் ஆல்பா லினோலியின் அமிலம் அதிகம் உள்ளது. ஆகவே கொலஸ்ட்ரால் பிரச்சனை இருப்பவர்கள், ஆளி விதையை தினமும் 1-2 டேபிள் ஸ்பூன் உட்கொள்வது உடலுக்கு நல்ல பாதுகாப்பை வழங்கும்.

பழங்கள் பழங்களிலும் கொலஸ்ட்ரால் குறைவாகத் தான் இருக்கும். அதிலும் வாழைப்பழம், தர்பூசணி, எலுமிச்சை, நெல்லிக்காய், ஆப்பிள், பீச், ப்ளம்ஸ் போன்றவற்றை ஒருவர் தினமும் உட்கொண்டு வந்தால், உடலில் நார்ச்சத்தின் அளவு அதிகரித்து, கொலஸ்ட்ராலின் அளவு குறையும்.






இந்த உணவுகளில் எல்லாம் கொலஸ்ட்ரால் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா?


சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும். ஐந்து கிலோ பாலுக்கு ஒரு கிலோ தேன் சமமாகும்.

சுத்தமான தேன் ஒரு சிறந்த உணவாகும். எளிதில் செரிக்கக் கூடியது. அதிகசத்து நிறைந்தது. ஐந்து கிலோ பாலுக்கு ஒரு கிலோ தேன் சமமாகும்.

பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை இருதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் சுலபமாக நீங்கி விடுகின்றன.

குழந்தைகளுக்கு உண்டாகும் பல்நோய், இருதய நோய் ஆகியவற்றுக்குத் தேன் ஒரு சிறந்த சஞ்சீவியாகும். தேன் மூலம் சுவாசக் கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி நோய், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் ஆகிய நோய்கள் குணமாகும். ஜீரணத்துக்கும் உதவும்.

தேன் கொழுப்பைக் கரைக்கக் கூடியது. ஆகவே உடல் மிகவும் பருமனாக உள்ளவர்கள் தொடர்ந்து தேன் சாப்பிட்டு வந்தால் பருமனும் எடையும் குறையும்.

ரத்தப் பித்தத்துக்கு அதாவது வாய், மூக்கு முதலியவற்றிலிருந்து ரத்தம் வடியும் வியாதிக்கு, ஆட்டின் பாலில் தேனைக் கலந்து குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கம்.

நமது உடலின் மேல் ஏற்படும் புண் காயங்களுக்கு மாத்திரமன்றி, உள்ளே ஏற்படும் இரைப்பைப் புண் போன்றவற்றையும் தேன் சாப்பிட்டு குணமாக்கலாம். வயதான சிலருக்கு அவ்வப்பொழுது தசைகளில் வலி ஏற்படுவதுண்டு.

கால்களில் குற்றமடைதல், அல்லது குரல் தொணியே இல்லாது தொண்டையை அடைத்து விடுதல் போன்ற கப நோய்கள் கண்டபோது, ஒரு நாளைக்கு நாலைந்து முறை தேனை துளசிச் சாறு, வெற்றிலை கலந்து கொடுத்து வந்தால் நல்ல குணம் ஏற்படும்.

உடலில் உள்ள கொழுப்பை கரைக்கும் தேன்



1) தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). . சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு.
2) 100 கிராம் சப்போட்டாப் பழத்தில் புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், இரும்புச் சத்து 2.0 மில்லி கிராம், தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நியாசின் 0.02 மில்லி கிராம் மற்றும் வைட்டமின் சி 6.1 மில்லி கிராம் உள்ளது.
தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரும். இளமைக்கு கியாரன்டி.
3) சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது., எலும்புகள் வலுவடையும்
4) இரவில் உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம். பழக்கூழ், ஜாம், சிரெப், மில்க் ஷேக், என்று விதவிதமாய் இதைத் தயாரித்துச் சாப்பிடலாம். சப்போட்டா பழக்கூழுடன், காய்ச்சின பால்சேர்த்து கீர் மாதிரி செய்து பருகலாம். அவரவர் கற்பனைக்கும் ரசனைக்கும் ஏற்றாற் போல் செய்து கொள்ளலாம். அல்லது வழக்கம் போல 'அப்படியே சாப்பிடலாம்'.
5) இதயம் சம்பந்தமான கோளாறுகளுக்கு ஏற்ப பாதுகாக்கும் தன்மையும் சப்போட்டா பழத்திற்கு உண்டு என அமெரிக்காவில் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கின்றது. சப்போட்டா பழத்தை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு, குடல் புற்று நோய் ஏற்படாது. சருமத்தை மிருதுவாக்கும் தன்மை சப்போட்டா பழத்திற்கு உண்டு
6) உடம்பில் உள்ள தேவையில்லாத கொழுப்பை குறைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு.

சப்போட்டா பழம்


ஓர் நாளுக்கு சராசரியாக 4 - 8 முறை சிறுநீர் கழிப்பது இயல்பானது. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு அதிகமாக அடிக்கடி சிறுநீர் கழித்துக்கொண்டே இருப்பது உடலில் ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாக தான் எடுத்துக் கொள்ள வேண்டும். நிறைய பேர் இதை மிக சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். ஆனால், அடிக்கடி சிறுநீர் கழிப்பது அபாயகரமான உடல்நலத்தின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதை உதாசீனப்படுத்துவது பின்னாளில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க காரணியாக அமையலாம்.

பொதுவான காரணங்கள் நீரிழிவு, சிறுநீர் பாதை தொற்று, கர்பிணிப் பெண்களுக்கு கர்ப்ப காலத்தில், புரோஸ்டேட் பிரச்சனைகள் போன்றவற்றின் காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடலாம். மேலும், சிறுநீரக தொற்று, சிறுநீர்ப்பை கற்கள் போன்றவற்றின் கூட இவ்வாறு நிகழலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆண்கள்! அடிக்கடி சிறுநீர் கழித்துக் கொண்டே இருப்பதால் ஆண்களுக்கு எரிச்சல் உணர்வு, வலி போன்றவை உண்டாகலாம். பால்வினை நோய் தொற்று, சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரக கற்கள், புரோஸ்டேட் கோளாறுகள் இருந்தால் இதுப் போன்ற உணர்வு ஏற்படும். நீரிழிவு மற்றும் வலிநிவாரண மாத்திரைகள் அதிகம் எடுத்துக் கொள்வதால் கூட ஆண்கள் மத்தியில் அடிக்கடி சிறுநீர் கழிக்க காரணியாக விளங்குகின்றன.

பெண்கள்! கர்ப்ப காலத்தின் போது பெண்களுக்கு கருப்பை பெரிதாகிவிடும். மேலும், சிறுநீர் பையில் அழுத்தம் அதிகரித்து காணப்படும். இதனால், அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இதிலும், இரு வகை இருக்கிறது, சிலருக்கு சிறிதளவு சிறுநீர் கழியும், சிலருக்கு பெருமளவு சிறுநீர் கழியும் எனப்படுகிறது.

பெண்கள்! சிறுநீர் பாதை தொற்று, சிறுநீரகத்தில் தொற்று, சிறுநீர் பை அல்லது இடுப்பு பகுதியில் தாக்கங்கள் ஏற்பட்டிருந்தாலும் கூட அடிக்கடி சிறுநீர் வெளியேற்றப்படும். மேலும், இரத்தத்தில் கால்சியம் அதிகளவு கலந்திருந்தாலும் கூட பெண்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழியும்.

இயற்கை தீர்வுகள் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை இருந்தால் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்வது அவசியம். ஒருவேளை பயப்படும் அளவிற்கு எந்த பிரச்சனையும் இல்லையெனில், நீங்கள் இயற்கை உணவுகளை உண்டே இதற்கு நல்ல தீர்வுக் காணலாம்.

மாதுளை மாதுளையின் தோலை நன்கு பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள். சிட்டிகை அளவு பேஸ்ட்டை சில துளி நீர் கலந்து பருகுங்கள். ஒருநாளுக்கு இருமுறை என ஐந்து நாட்கள் தொடர்ந்து இதை பருகிவந்தால், சிறுநீர் பையின் வெப்பம் குறையும், அடிக்கடி சிறுநீர் கழியும் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும்.
கொள்ளு நூறு கிராம் அளவு கொள்ளை வறுத்துக்கொள்ளவும். அதை வெல்லத்துடன் சேர்த்து கலந்து உட்கொள்ளுங்கள். சிறுநீர் பாதை தொற்றுக்கு இது சிறந்த நிவாரணியாக விளங்குகிறது. கொள்ளில் இருக்கும் ஆண்டி-ஆக்ஸிடன்ட்ஸ் சிறந்த மருத்துவ குணம் வாய்ந்தது ஆகும்.

அடிக்கடி சிறுநீர் கழிந்துக் கொண்டே இருக்கிறதா? காரணங்கள் மற்றும் தீர்வுகள்!


மனிதனுக்கு ஏற்படும் பிணிகளை நீக்கும் அருமருந்துகளான மூலிகைகள், இயற்கையின் ஏற்பாட்டில், தேவையுள்ள பகுதிகளில், தேவையான மூலிகை என்கிற வகையில் தானாகவே விளைந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சரியாகக் கண்டுபிடித்து உண்டு, தங்களுக்கு ஏற்படும் நோய்களைத் தீர்த்துக் கொள்ளும் வித்தையை, ஒவ்வொரு உயிரினத்துக்கும் இயற்கையே கடத்தி வைத்திருக்கிறது. ஆனால், வியாபார நோக்கோடு, இதையெல்லாம் திட்டமிட்டு மறக்கடித்து விட்டனர்... கடந்த இருபது, முப்பது ஆண்டுகளில்! அத்தகைய மூலிகைகளை மீண்டும் கையில் எடுக்கவும்... அவை பற்றிய புரிதலை உண்டாக்கவுமே... 'மூலிகை வனம்’ எனும் இப்பகுதி இங்கே விரிகிறது.

இந்த இதழில் நெருஞ்சில் பற்றி தெரிந்து கொள்வோம்.

சகமனிதர் உதவியில்லாமல் இந்த உலகில் நம்மால் ஒன்றையும் பெறமுடியாது. உண்ணும் உணவு... உடுத்தும் உடை... இருக்கும் இடம்... என அனைத்திலும் அடுத்தவர்களின் பங்களிப்பு இருக்கிறது. ஆனால், நமக்கான செயல்களைச் செய்த அந்த எளிய மனிதர்களை என்றைக்காவது நினைவு கூர்ந்து நன்றி பாராட்டியிருக்கிறோமா? மனிதர்கள் செய்யும் உதவிகளையே கொண்டாடத் தெரியாத நாம், சிறிய தாவரங்கள் செய்யும் உதவிகளையா உற்றுப் பார்க்கப் போகிறோம்?

பாதையோரங்கள், புல்வெளிகள், தரிசுநிலங்கள், வயல்கள், வரப்புகள் என எங்கெங்கும் சின்னஞ்சிறு வடிவில் படர்ந்து கிடப்பவை... நெருஞ்சில். பாதங்களை பதம்பார்க்கும் முள்ளுடன் இருப்பதால்... வேண்டாத விருந்தாளியைப் பார்ப்பதுப் போல, இதைப் பார்த்து பழகிவிட்டோம். கோபமுள்ள இடத்தில்தான் குணமிருக்கும் என்பது போல, முட்களை உடைய இந்த சின்னஞ்சிறிய செடிக்குள் இருக்கும் மருத்துவக் குணம்... மகத்தானது.

விதைகள் மூலமாக இனப்பெருக்கம் செய்து, நிலங்களில் படர்ந்து வளரும் இதன் வேர், அதிக ஆழம் வரை செல்லும். இதில், சிறு நெருஞ்சில், யானை நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் என மூன்று வகைகள் இருக்கின்றன. சிறு நெருஞ்சில் செடி... ஐந்து இதழ்களைக் கொண்ட மஞ்சள் நிற பூக்களுடன் காணப்படும். இந்தப் பூக்கள் சூரியனின் திசை நோக்கி திரும்பும் தன்மையுடையவை. புளிய மர இலையைப் போல், ஆனால், அளவில் அதைவிட சிறிய இலைகளை உடையவை. காய்கள், நிலக்கடலைப் பருப்பு அளவில் எட்டு முதல் பத்து கூரிய நட்சத்திர வடிவ முட்களுடன் இருக்கும். யானை நெருஞ்சில்.... இலை பெரியதாகவும், காயானது சிறுநெல்லி அளவிலும் இருக்கும். செப்பு நெருஞ்சில்... இலைகள் சிறியதாகவும், மிளகு அளவிலான முட்கள் இல்லாத காய்களுடன் மூன்று இதழ்களைக் கொண்ட சிவப்பு நிற பூக்களுடன் இருக்கும். இவை அனைத்துக்குமான மருத்துவக் குணங்களில் பெரிய வித்தியாசம் ஏதுமில்லை.

பல நாடுகளிலும் பயன்பாடு!

நெருஞ்சில் இலையில் இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் போன்றவை இருக்கின்றன. பாலியல் பிரச்னைகளையும், சிறுநீரகக் கோளாறுகளையும் நீக்கும் அருமருந்தாக உள்ளது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே ஆயுர்வேதத்திலும், சீன மருத்துவத்திலும் பயன்படுத்தப்படும் பெருமை வாய்ந்தது, நெருஞ்சில். இன்றைக்கும் சீனாவில்... சிறுநீரகம் தொடர்பான நோய்கள், கல்லீரல் பாதிப்புகள், சரும நோய்கள், ரத்தநாள பாதிப்புகள், இதயநோய்களுக்கு முக்கிய மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. பல்கேரியாவில், பாலியல் வேட்கையை அதிகப்படுத்தவும், குழந்தையின்மைப் பிரச்னைக்கும் நெருஞ்சிலைப் பயன்படுத்துகின்றனர். கிரேக்க நாடுகளில், சிறுநீர் பிரச்னைகளுக்கும், மனநிலை சார்ந்த பிரச்னைகளுக்கும் இதைப் பயன்படுத்துகின்றனர்.

சிறுநீரகம் சீராகும்!

சிறுநீரகக் கோளாறுகளுக்கு நெருஞ்சில் நல்ல மருந்து. சிறுநீரகப் பாதைகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். 'அன்யூரியா’ (கிஸீuக்ஷீவீணீ) எனப்படும் சிறுநீர் தடைப்பட்டு வலியுடன் வெளிவரும் நோய்க்கு, நெருஞ்சில் சேர்த்த 'கோக்சூராதி க்ருதம்’ நல்ல மருந்து.

சிதைந்த நெருஞ்சில் முள் 50 கிராம், கொத்தமல்லி விதை 5 கிராம் ஆகியவற்றை 500 மில்லி நீரில் இட்டு சுண்டக் காய்ச்சி, காலை-மாலை இருவேளையும் 60 மில்லி அளவு குடித்து வந்தால்... கல் அடைப்பு, சதையடைப்பு, நீர்க்கட்டு, நீர்எரிச்சல் போன்றவை குணமாகும். நெருஞ்சில் விதை, வெள்ளரி விதை இரண்டையும் சமஅளவு எடுத்துப் பொடி செய்து, அதிலிருந்து 2 கிராம் எடுத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், கல் அடைப்பு குணமாகும். இதன் இலையை நீரிலிட்டு காய்ச்சி வடிகட்டி, கற்கண்டு சேர்த்துக் குடித்து வந்தால்... சிறுநீரில் ரத்தம் கலந்து போகும் பிரச்னை குணமாகும்.

சூடு தணிப்பான்!

இரண்டு நெருஞ்சில் செடியை வேருடன் பிடுங்கி, ஒரு பிடி அருகம்புல் சேர்த்து, அதில், ஒரு லிட்டர் நீர்விட்டு, அரை லிட்டர் அளவுக்கு வரும் வரை சுண்டக் காய்ச்ச வேண்டும். இதை காலை, மாலை இருவேளையும் 50 மில்லி அளவு, மூன்று நாட்கள் குடித்து வந்தால், உடல்சூடு தணியும். கண்எரிச்சல், கண்ணில் நீர்வடிதல், சொட்டுசொட்டாக சிறுநீர் போதல் ஆகியவை குணமாகும்.

கர்ப்பப்பைக் கோளாறுகளுக்கும் மருந்து!

நெருஞ்சில் வேரை, எலுமிச்சைச் சாறு சேர்த்து அரைத்து குடித்து வந்தால், பூப்படையாத பெண்கள் பூப்பெய்துவார்கள். 50 கிராம் நெருஞ்சில் இலையில் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து, அதைப் பாதியாக காய்ச்சி, தினமும் சிறிதளவு குடித்து வந்தால் பெண்களுக்கான கர்ப்பப்பைக் கோளாறுகள் சரியாவதுடன், குழந்தைப்பேறு உண்டாகும்.

ஆண்மை அதிகரிக்கும்!

நெருஞ்சில் முள்ளை பசும்பாலில் வேகவைத்து, உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு, அதில், 2 கிராம் எடுத்து பாலில் கலந்து, காலை, மாலை இருவேளைகளும் பருகி வந்தால், ஆண்மை பெருகும். நெருஞ்சில் இலையை வெள்ளாட்டுப் பாலுடன் சேர்த்து, காய்ச்சி வடிகட்டி, தேன் சேர்த்துக் குடித்து வந்தால், ஆண்மை அதிகரிக்கும். நெருஞ்சில் வேர், கீழாநெல்லி வேர் இரண்டையும் சமஅளவு எடுத்து அரைத்து, இளநீரில் கலந்து குடித்து வந்தால், மஞ்சள் காமாலை நோய் குறையும்.

சிறுநீரகக் கோளாறுகளுக்கான அறுவை சிகிச்சைகளுக்கு அவசியமில்லாமல்... பல ஆயிரங்களை மிச்சப்படுத்தும் நெருஞ்சிலை நெஞ்சில் இருத்துங்கள்... வாழ்வு வளமாகும்... மருத்துவச் செலவுகள் மட்டுப்படும்.

சிறுநீரகத்தைச் சீராக்கும் நெருஞ்சில்..!



நன்னாரி... இது கொடி வகையைச் சேர்ந்தது என்றாலும் இதன் வேர்தான் மிகுந்த பலனளிக்கக்கூடியது. வெயில் காலங்களில் விற்கக்கூடிய நன்னாரி சர்பத்துக்கு, இந்த வேர்தான் மூலப்பொருள். நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கக்கூடிய நன்னாரி வேரை இடித்து நீர் விட்டு கொதிக்கவைக்க வேண்டும். நீர் பாதியாக வற்றியதும் அதனுடன் சர்க்கரை சேர்த்துக் குடித்தால் (இது நன்னாரி மணப்பாகு என்றழைக்கப்படுகிறது), எரிச்சலுடன் சிறுநீர் கழிப்பவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். முக்கியமாக சொட்டு மூத்திரம், சிறுநீர் கழிக்க சிரமப்படுதல், சிறுநீர் கழிக்காததால் அடிவயிற்றில் ஏற்படும் வலி உள்ளிட்ட சிறுநீர் சம்பந்தப்பட்ட உபாதைகளை இந்த நன்னாரி பானம் சரிசெய்யும். உடல் சூட்டினால் அவதிப்படுபவர்கள் நன்னாரி மணப்பாகை 15 முதல் 25 மில்லி வீதம் சில நாட்கள் குடித்து வந்தால் நிவாரணம் கிடைக்கும். 5 கிராம் பச்சை நன்னாரி வேரை அரைத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து குடித்தால் வறட்டு இருமல் சரியாகும்.

மேலும், பொதுவாக நன்னாரி உடல் வியர்வையை கூட்டுவதோடு, ரத்தத்தை தூய்மைப்படுத்தக்கூடியது; தாராளமாக நீர் இறங்கச் செய்யக்கூடியது, ஆண் - பெண் உறுப்புகளில் வரக்கூடிய ரணத்துடன் கூடிய புண்களை ஆற்றும் வல்லமை படைத்தது நன்னாரி.

நலம் தரும் நன்னாரி!


தினமும் காலையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறேன் என்று பழச்சாறுகளை பருகுபவரா? பழச்சாறுகள் உடல் எடையை அதிகரிக்காது என்று நினைப்பவரா? காலையில் காபி, டீக்கு பதிலாக, பழச்சாறுகளை பருகுபவர்கள் தான் அதிகப்படியான கலோரிகளை உட்கொள்கின்றனர் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.

சிலர் காலையில் புரோபயோடிக் பானங்களைப் பருகுவார்கள். ஆனால் இந்த புரோபயோடிக் பானங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துமே தவிர, உடல் எடையைக் குறைக்க உதவாது.

மாறாக புரோபயோடிக் பானங்களில் சேர்க்கப்பட்டிருக்கும் சர்க்கரை, பவுடர் பால், செயற்கை இனிப்பூட்டிகள் போன்றவை உடலில் கலோரிகள் அளவைத் தான் அதிகரிக்கும். எனவே நீங்கள் உங்கள் உடல் எடையை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள பானங்களை காலையில் பருகுவதைத் தவிர்த்திடுங்கள்.

இனிப்பு லஸ்ஸி வட மற்றும் மேற்கு இந்திய பகுதிகளில் லஸ்ஸி மிகவும் பிரபலமான ஓர் பானம். இந்த பானமானது தயிர், சர்க்கரை, தண்ணீர் சேர்த்து செய்யப்படுவது.

இந்த பானத்தில் கொழுப்புக்களும், சர்க்கரையும் உடல் எடையை மிகவும் வேகமாக அதிகரிக்கும் அளவில் நிறைந்துள்ளது. அதிலும் ஒரு டம்ளர் லஸ்ஸியில் 159 கலோரிகள் இருக்கும்.

சாக்லேட் அல்லது பாதாம் பால் தற்போது பாதாம் பால் அல்லது சாக்லேட் பாலைப் பருகுவோரின் எண்ணிக்கை அதிகம் உள்ளது. ஆனால் கடைகளில் விற்கப்படும் பாதாம் பவுடர் மற்றும் சாக்லேட் பவுடரை பாலில் சேர்த்து கலந்து பருகினால், அதில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை சுவையூட்டிகளால் உடல் பருமனைத் தான் சந்திக்கக்கூடும். ஒரு டம்ளர் சாக்லேட் அல்லது பாதாம் பாலில் 158 கலோரிகள் இருக்கும்.

ஆரஞ்சு ஜூஸ் பழங்களை எப்போதும் அப்படியே சாப்பிட்டால் தான் அதன் முழுமையான பலனைப் பெற முடியும். அதனை ஜூஸ் வடிவில் தயாரித்துப் பருகும் போது, அதில் சுவைக்காக சர்க்கரையை சேர்க்க நேரிடும்.

இதனால் அந்த பழச்சாறு உடலுக்கு நன்மையைக் கொடுப்பதற்கு பதிலாக, தீமையைத் தான் விளைவிக்கும். அதிலும் ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸில் 220-க்கும் அதிகமான அளவில் கலோரிகள் இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? எனவே எப்போது பழங்களை சாறு வடிவில் அதிகாலையில் குடிப்பதைத் தவிர்த்திடுங்கள்.

எருமை பால் சொன்னால் நம்பமாட்டீர்கள், ஒரு டம்ளர் எருமை மாட்டுப் பாலில் 280 கலோரிகளும், 16.81 கிராம் கொழுப்புக்களும் உள்ளது. இதற்கு மேல் ஏதாவது சொல்ல வேண்டுமா என்ன?

வாழைப்பழ மில்க் ஷேக் நீங்கள் உடல் எடை அதிகரிக்க வேண்டாம் என நினைத்தால், வாழைப்பழத்தையும், பாலையும் ஒன்றாகப் பருகாதீர்கள். ஏனெனில் ஒரு வாழைப்பழத்தில் மட்டும் 108 கலோரிகள் உள்ளது. அப்படியெனில் ஒரு டம்ளர் வாழைப்பழ மில்க் ஷேக்கில் எவ்வளவு கலோரிகள் இருக்கும் என்று சற்று யோசித்துப் பாருங்கள்.

ஸ்மூத்தி பலரும் ஸ்மூத்தி மிகவும் ஆரோக்கியமான பானமாக கருதுவார்கள். ஆனால் அதில் தான் கலோரிகளும், கொழுப்புக்களும் அதிகமான அளவில் இருக்கும். ஒரு டம்ளர் ஸ்மூத்தியில் 145 கலோரிகள் இருக்கும்.

வேறு என்ன பருகுவது? உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், உடல் எடையைக் கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளவும் நினைத்தால், மேலே கொடுக்கப்பட்டுள்ள பானங்களுக்கு பதிலாக, வேறு சில பானங்கள் உள்ளன. அவற்றைப் பருகுங்கள். நிச்சயம் உடல் எடை குறைவதோடு, ஆரோக்கியமும் மேம்படும்.

தேன்-பட்டை டீ ஒரு டம்ளர் சுடுநீரில் 1 டீஸ்பூன் பட்டைத் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் குடித்து வர வேண்டும். வேண்டுமானால், இத்துடன் சிறிது எலுமிச்சை சாற்றினையும் சேர்த்துக் கொள்ளலாம்.

க்ரீன் டீ உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை சுத்தமாகவும், வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைக்கவும் வேண்டுமானால், தினமும் காலையிலும், மாலையிலும் ஒரு டம்ளர் க்ரீன் டீயைப் பருகுங்கள்.










உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் குடிக்கக்கூடாத பானங்கள்!


பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

இன்றைய பெரும்பாலான மக்கள் தினசரி எதிர்கொள்ளும் இரண்டு பிரச்சனை காலை கடனும், உடல் பருமனும் தான். உடல் பருமன் இருந்தாலே காலை கடன், செரிமானத்தில் பிரச்சனைகள் எழுவது சாதாரணம் தான்.

இது மட்டுமின்றி, உடல் பருமன் விந்தணு திறன் குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை உண்டாக காரணியாக இருக்கிறது.

நாம் சமையலில் சேர்க்கும் சில பொருட்கள் இயற்கையாகவே கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்டிருக்கின்றன. மிளகு, மஞ்சள், இஞ்சி, பூண்டு போன்றவை இவற்றில் அடங்குபவை ஆகும்.

இதில் பூண்டு கொழுப்பை கரைக்கும் சிறந்த பண்பு கொண்டிருக்கிறது. இது பசியை கட்டுப்படுத்தும் ஹார்மோனையும் கட்டுப்படுத்தி, வேகமாக உடல் பருமனை குறைக்க உதவுகிறது.

உடல் எடையை குறைக்க பூண்டு ஓர் சிறந்த மருத்துவ குணம் படைத்த பொருளாக திகழ்கிறது.

உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருப்பது அடிக்கடி பசிப்பது, அதிகமாக பசிப்பது. பூண்டு இந்த பசியை கட்டுப்படுத்த வல்லது. பூண்டின் இயற்கை தன்மையானது பசியை தூண்டும் சுரப்பியை சீராக்குகிறது.

லெப்டின் என்ற சுரப்பி தான் மூளைக்கு பசி குறித்த சிக்னல் அனுப்பி, உண்ண தூண்டுகிறது. இதில் ஏற்படும் கோளாறுகளினால் தான் அடிக்கடி பசி எடுப்பது (அல்லது) பசியே இல்லாமல் இருப்பது போன்றவை எல்லாம்.

பூண்டு, இந்த சுரப்பியை சீராக்கி பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் உடலில் அதிகமாக கொழுப்பு செல்கள் அதிகரிக்காமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

மேலும் பூண்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதால் நோரெபினிஃப்ரைன் எனும் சுரப்பி வெளிப்படுகிறது. இது நியூரோடிரான்ஸ்மிட்டரை தூண்டிவிட்டு உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. வளர்சிதை மாற்றம் சீரடைவதால் உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பாதுகாக்க முடியும்.

பூண்டு பல் - 3

1 எலுமிச்சை பழத்தின் சாறு

1 கப் தண்ணீர்

ஒரு கப் நீரில் ஒரு எலுமிச்சை பழத்தின் சாறினை சேர்த்துக் கொள்ளவும். பிறகு அதில் நசுக்கிய மூன்று பூண்டு பற்களை எலுமிச்சை நீரில் சேர்த்து நன்கு கலந்து பருகவும்.

தினமும் காலை வெறும் வயிற்றில் இந்த ஜூஸை இரண்டு வாரம் பருகி வந்தால் நீங்களாகவே உடல் எடையில் நல்ல மாற்றத்தை காண முடியும்.

இரண்டே வாரத்தில் தொப்பையின் கொழுப்பை கரைக்கும் பூண்டு