நோட்டா பற்றி அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய தகவல்கள்!
நோட்டா என்பது வேட்பாளர்கள் யாரையும் வாக்காளர்களுக்கு பிடிக்கவில்லை என்பதை தெரிவிக்க பயன்படும் வாய்ப்பாகும். இந்த தேர்வை வாக்கு பாட்டிலில் சேர்க்க வேண்டி சுப்ரீம் கோர்ட்டிடம் கடந்த 2009-ம் ஆண்டு தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி கடந்த 2013-ம் ஆண்டு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நோட்டா வசதி தமிழகத்தில் முதன் முறையாக ஏற்காடு இடைத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டது. நோட்டா பொத்தான் இளஞ்சிவப்பு நிறத்தில் வேட்பாளர் பட்டியலில் கடைசி இடத்தில் இடம்பெற்றிருக்கும்....
நோட்டா அளிப்பது எப்படி? ஓட்டளிக்கும் இயந்திரத்தில் வேட்பாளர்கள் பட்டியலின் கடைசியில் வாக்கு சீட்டு மேல் "X" இட்டுள்ளது போல ஓர் சின்னம் இருக்கும். அதை அழுத்த வேண்டும். இந்த ஓட்டை தேர்வு செய்ய தேர்தல் அதிகாரிகளிடம் நீங்கள் ஒப்புதல் வாங்க வேண்டிய அவசியம் ஏதும் இல்லை.
முதன் முதலில் எப்போது நோட்டா அமலாக்கம் ஆனது? சட்டசபை தேர்தலில் தான் முதன் முதலில் நோட்டா சேர்க்கப்பட்டது. முதலில் இதன் எண்ணிக்கை குறைவாக தான் பதிவானது. சத்தீஸ்கர்-ல் 3.56 லட்சம் டெல்லியில் 50,000 மத்திய பிரதேசத்தில் 5.9 லட்சம் மற்றும் ராஜஸ்தான்-ல் 5.67 லட்சம் நோட்டா வாக்குகள் பதிவாகின என்பது குறிப்பிடத்தக்கது.
49-O எந்த வேட்பாளர்களையும் தங்களுக்கு பிடிக்கவில்லை என தெரிவிக்க நோட்டாவிற்கு முன்னர் 49-O என்ற வாய்ப்பு இருந்தது. இந்த வாக்கை அளிக்க வாக்காளர்கள் தனியாக ஓர் ஓட்டுப் பெட்டியில் வாக்களிக்கும் முறையும் இருந்தது.
நோட்டாவின் வித்தியாசம் என்ன? ஓர் சீனியர் தேர்தல் கமிஷன் அதிகாரி, "நோட்டா வெறும் கணக்குக் கொள்வதற்கு மட்டுமே பயன்படும். அதிகளவில் நோட்டா பதிவானாலும் அதற்கு அடுத்து எந்த வேட்பாளர் அதிக ஓட்டுகள் பெற்றுள்ளாரோ அவர் தான் வெற்றியாளர் என அறிவிக்கப்படும் என" கூறியுள்ளார்.
நோட்டாவிற்கு ஏன் மதிப்பில்லை? நோட்டா வாக்காளர்களின் கருத்தையும், வேட்பாளர்களின் மதிப்பையும் அறிந்துக் கொள்ளவே பயன்படும். இதை வைத்து கட்சிகள் வேட்பாளரின் தரத்தை அறிந்துக் கொள்ளலாம்.
நோட்டா உள்ள மற்ற நாடுகள் கொலம்பியா, உக்ரைன், பிரேசில், பங்களாதேஷ், பின்லாந்த், ஸ்பெயின், ஸ்வீடன், பிரான்ஸ், பெல்ஜியம் மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் நோட்டா வாக்களிக்க வாய்ப்பளிக்கப்படுகிறது.
Labels:
information
,
other
No comments :
Post a Comment