சிம்பிள் & ஹெல்த்தி சாலட்ஸ்!

Share this :
No comments

** வெஜிடபிள் ஃப்ரூட் சாலட் **

தேவையானவை: கேரட், சிறிய வெள்ளரி, தக்காளி - தலா 1, பேரிக்காய், ஆப்பிள், நேந்திரம் பழம் - பாதி அளவு, கறுப்பு திராட்சை - 5, சப்போட்டா - 1, மாதுளை முத்துக்கள் - ஒரு டீஸ்பூன், செர்ரி பழங்கள் - 10.

செய்முறை: காய்கறிகள், பழங்களை சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். இவற்றுடன் மாதுளை முத்துக்கள், செர்ரி பழங்களை மேலாகத் தூவவும். வண்ணமயமான, சத்தான வெஜிடபிள், ஃப்ரூட் சாலட் தயார்.

பலன்கள்: வைட்டமின் சத்து செறிந்த சாலட் என்பதால், அனைவருக்கும் ஏற்றது. குறிப்பாக வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்சிடன்ட் நிறைவாக உள்ளதால், புற்று நோயாளிகள், இதய நோய், உயர் ரத்த அழுத்தப் பிரச்னை உள்ளவர்கள் இதை எடுத்துக்கொள்வது நல்லது. நோய் எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கும்.

** சென்னா சாலட் **

தேவையானவை: கறுப்புக் கொண்டைக்கடலை - கால் கப், பெரிய வெங்காயம் - 2, தக்காளி, கேரட் - தலா 1, தேங்காயத் துண்டுகள் - ஒரு டேபிஸ்ஸ்பூன், உப்பு, எலுமிச்சைச் சாறு - தேவையான அளவு.

செய்முறை: கொண்டைக்கடலையை முளைகட்டி, வேகவைத்துக்கொள்ளவும். தக்காளி, கேரட், வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். கடலையுடன் தக்காளி, காய்கறிகளைக் கலந்து, தேங்காய்த் துண்டுகளைச் சேர்க்கவும். எலுமிச்சைச் சாறு கலந்து, உப்பு தூவினால் சாலட் ரெடி.

பலன்கள்: அதிக அளவில் நார்ச்சத்து உள்ளது. இது உடல் எடையைக் குறைக்கவும் மலச்சிக்கலைப் போக்கவும் உதவுகிறது. 

அதிக அளவில் புரதச்சத்து கொண்டது. கறுப்புக் கொண்டைக் கடலை, கெட்ட கொழுப்பைக் குறைத்து, இதயம் மற்றும் ரத்தக் குழாய்களின் செயல்திறன் மேம்பட உதவும். இதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட் போன்ற காயகறிகள் சேரும்போது, பலன் அதிகரிக்கும்.

No comments :

Post a Comment