பாலில் சோப்பு, சோடா, வெள்ளை பெயின்ட் கலக்கப்படுகிறது: அதிர்ச்சித் தகவல்!
புதுடெல்லி: இந்தியாவில் விற்கப்படும் பாலில், சோப்பு தூள்,வெள்ளை பெயின்ட், சோடா என்று உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுப்பப்படுவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஹர்ஷவர்தன், நாடளுமன்றத்தில் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது அமைச்சர் ஹர்ஷவர்தன் பதில் அளித்துப் பேசினார்.அப்போது அவர், இந்திய அளவில் பாலில் செய்யப்படும் பகீர் கலப்படம் குறித்து அதிர்ச்சித் தகவல்களைத் தெரிவித்தார்.
" நாட்டில் அன்றாடம் வினியோகிக்கப்படும் பால் குறித்து உணவுப் பொருள் ஒழுங்குமுறை அமைப்பினர் நடத்திய ஆய்வில் 68% பால் தரமானதாக இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தவிர தவிர, பாலில் உடலுக்கு கேடு விளைவிக்கும் சோப்புத் தூள், காஸ்டிக் சோடா, குளுக்கோஸ், வெள்ளை பெயிண்ட், ரீபைண்ட் எண்ணெய் போன்றவை கலக்கப்படுகின்றன.
தற்போதுள்ள நவீன ஸ்கேனர் கருவிகள் மூலம் 40 வினாடிகளில் பாலில் கலப்படம் உள்ளதா என்பதையும், எந்த அளவிற்கு அதில் கலப்படம் இருக்கிறது என்பதையும் துல்லியமாகக் கண்டுபிடித்து விடலாம்.
ஒவ்வொரு எம்.பி.யும் தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த நவீன ஸ்கேனர்களை வாங்கிக் கொள்ளலாம். ஸ்கேனர் விலை அதிகமாக இருந்தாலும் கூட ஒருமுறை சோதனை நடத்த 10 பைசாதான் செலவாகும்.
விரைவில் ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் பால் எங்கிருந்து வினியோகம் செய்யப்படுகிறது, கேன்களில் அடைக்கப்பட்ட பாலில் கலப்படம் செய்யப்படுகிறதாஎன்பதை கண்டறியும் முறை மத்திய அரசால் அமலுக்கு கொண்டுவரப்படவுள்ளது." என்று கூறினார் அமைச்சர் ஹர்ஷவர்தன்.
இந்தத் தகவல் பால் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Labels:
News
,
others
No comments :
Post a Comment