ஜாதி ரீதியாக கருணாநிதியை திட்டிய முதல் தலைவர்.. ஈவிகேஎஸ் இளங்கோவன்.. ஒரு பிளாஷ்பேக்!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை ஜாதி ரீதியாக திட்டி விட்டார் வைகோ என்று ஊரே இன்று அல்லோகல்லப்படுகிறது. ஆனால் கருணாநிதியை ஜாதி ரீதியாக மிகக் கடுமையாக விமர்சித்தவர் சாட்சாத் தற்போது அவருக்குப் பக்கத்திலேயே இருக்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன்தான்.
வைகோவை விட கடுமையாக விமர்சித்தவர் இளங்கோவன். இது நடந்து 11 வருடங்களாகி விட்டது. 2005ம் ஆண்டு நடந்த சம்பவம் இது. இளங்கோவன் அன்று பேசிய பேச்சு திமுகவை கொந்தளிக்க வைத்தது. கருணாநிதியை ஜாதிரீதியாக திட்டியதோடு மட்டுமல்லாமல் அப்போது தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறனையும் அவன் இவன் என்று ஏக வசனத்திலும் பேசியிருந்தார் இளங்கோவன்.
அந்த பிளாஷ் பேக் இதோ...!
காங்கிரஸ் எம்.பிக்கள், எம்எல்ஏக்கள் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவரும் மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சருமான இளங்கோவன்பேசிய பேச்சால் திமுக எரிமலையாக வெடித்துக் கொண்டுள்ளது.
சத்தியமூர்த்தி பவனில் பூட்டப்பட்ட அறையில் நடந்த அந்தக் கூட்டத்தில் அவர் என்ன தான் பேசினார் என்று விசாரித்தபோது தெரியவந்தவிவரம்:
கூட்டணி ஆட்சி தான் சரிப்பட்டு வரும். யாரோ முதலமைச்சராக காங்கிரஸ்காரன் அடிபடனுமா?. சாதாரண விஷயத்தைக் கூடகருணாநிதி நல்லா ஊதி பெரிசாக்குவாரே.. அவர் நல்லா ஊதுவாரே.. (இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் கருணாநிதி என்பதால்,அவரை இப்படிக் கிண்டலடித்துள்ளார்).
ஊதி ஊதி பெரிசாக்குவாரே...(காங்கிரஸ் எம்பி, எம்எல்ஏக்கள் மத்தியில் சிரிப்பொலி எழ இந்த பாயிண்டையே மீண்டும் மீண்டும்பேசியுள்ளார் இளங்கோவன்). முகத்துல 2 இன்ஞ் பெளடர் பூசிக்கிட்டு திரியிற ஸ்டாலின் என்று அடுத்ததாக ஸ்டாலினைத் தாக்கியஇளங்கோவன் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனையும் விடவில்லை.
ஈரோடு தொலைத் தொடர்புக் கமிட்டிக்கு உறுப்பினர்களாக நியமிக்க காங்கிரஸ்காரர்கள் லிஸ்டை தயாநிதி மாறன்கிட்ட கொடுத்தேன்.(தயாநிதி தான் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர்). ஆனா, அந்த லிஸ்ட்ல இருந்த ஒருத்தர் பெயரைக் கூட அவன் சேர்க்கல என்றுதயாநிதியை ஒருமையில் போட்டுத் தாக்கியிருக்கிறார் இளங்கோவன்.
இந்தத் தகவல்கள் அப்படியே திமுகவை எட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கொந்தளித்துவிட்டனர். குறிப்பாக பேராசிரியர் அன்பழகன்,துரைமுருகன், பொன்முடி போன்றவர்கள் இளங்கோவனுக்கு பாடம் கற்பிக்கனும் என்று குரல் கொடுத்துள்ளனர்.
தேவைப்பட்டால் நமது மத்திய அமைச்சர்கள் பதவி விலகட்டும் என்றும் கூறினாராம் அன்பழகன்.
ஆனால், தன்னை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து கழற்றிவிட்டுவிட்டு மாநில காங்கிரஸ் பணிக்கு அனுப்ப இருக்கிறார்கள் என்பதைமுன் கூட்டியே தெரிந்து கொண்ட இளங்கோவன், அதைத் தவிர்க்கவே திமுகவுடன் மோதலில் ஈடுபடுகிறார் என்கிறது அவருக்கு எதிரானகாங்கிரஸ் கோஷ்டி.
மத்திய அமைச்சர் பதவியை விட விரும்பாத இளங்கோவன், திமுகவுடன் மோதினால் தன்னை மாநில கட்சிப் பணிக்கு அனுப்பமாட்டார்கள் என்று நினைத்து இவ்வாறு பேசி வருகிறார் என்கின்றனர்.
இளங்கோவனின் செயல்பாட்டில் திருப்தி இல்லாததால் அவரை நீக்கிவிட சோனியாவிடம் பிரதமர் மன்மோகன் சிங் பரிந்துரைசெய்துள்ளதாக கடந்த சில மாதங்களாகவே பேச்சு உள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடருக்குப் பின் மாற்றி அமைக்கப்படவுள்ள மத்தியஅமைச்சரவையில் இளங்கோவனின் தலை உருளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று முன் தினம் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய பிரதமரும் இதனைத் தெரிவித்துள்ளார்.
என்ன தான் பேசினார் இளங்கோவன்? ஆனால் இன்று வைகோ கருணாநிதியைப் பேசியது குறித்து கருத்து தெரிவித்துள்ள இளங்கோவன், வைகோ மீது வைத்திருந்த மரியாதை போய் விட்டது என்று ரொம்பவே சலித்துக் கொண்டுள்ளார்.
அதிலும் ஒருமையில் வைகோ பேசியது தன்னை மிகவும் வேதனைப்படுத்தி விட்டதாக இவர் விசனப்பட்டுள்ளார் என்பதுதான் ஹைலைட்டானது...!
Labels:
News
,
politics
No comments :
Post a Comment