தமிழக அமைச்சரவையில் 4 பெண்களுக்கு மட்டுமே அமைச்சர் வாய்ப்பு
தமிழக அமைச்சரவையில் முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பெண்களுக்கு மட்டுமே அமைச்சர் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக 134 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியது.
இந்த நிலையில், புதிய அமைச்சரவை பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். அதில், ஜெயலலிதா உள்பட 29 பேர் இடம் பெற்றுள்ளனர். இதில் முதல்வர் ஜெயலலிதா, எஸ்.வளர்மதி, சரோஜா மற்றும் ராஜலட்சுமி ஆகிய 4 பெண்கள் இடம் பெற்றுள்ளனர்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment