நம்பிக்கையுடன் இன்டர்வியூவை எதிர்கொள்ளுங்கள்
வேலைக்கு முயன்று கொண்டிருப்பவர்களை பயமுறுத்தும் ஒரு வார்த்தை `இன்டர்வியூ.’
வேலைக்கு முயன்று கொண்டிருப்பவர்களை பயமுறுத்தும் ஒரு வார்த்தை `இன்டர்வியூ.’ தங்கள் வாழ்க்கையின் எதிர்காலம் இதில் தான் இருக்கிறது என்பதை உணர்வு பூர்வமாக உணர்ந்திருப்பதால் இம்மாதிரியான இன்டர்வியூவுக்கு போகிறவர்கள் முதலிலேயே மனதுக்குள் ஒருவித படபடப்பை ஏற்றிக்கொண்டு விடுகிறார்கள்.
இன்டர்வியூவுக்காக காத்திருக்கும் அறைக்குள் அழைக்கப்படுகிறீர்கள். அங்கே உங்களைப் போலவே தேர்வுக்கு வந்த பலரையும் பார்க்கிறீர்கள். அப்போதே உள்ளுக்குள் ஒரு சின்ன உதறல் வந்து ஒட்டிக்கொள்கிறது. அதிலும் ஆண்களும் பெண்களும் கலந்து கொள்கிற இன்டர்வியூ என்றால் கேட்கவே வேண்டாம்.
இன்டர்வியூ அழைக்கப்பட்டதுமே டென்ஷன் இல்லாமல் அறைக்குள் நுழையுங்கள். உங்களை அழைத்து விட்டார்கள் என்பதற்காக தள்ளுகதவைத் தள்ளிக்கொண்டு நேரடியாக உள்ளே நுழைந்து விடாதீர்கள்.
`மே ஐ கம் இன் சார்?’ என்று நாகரீகமாக கேட்டபடி அறைக்குள் நுழையுங்கள். உள்ளே நுழைகிற அந்தக் கணம் முதலே நீங்கள் கவனிக்கப்படுகிறீர்கள். சரியாக சொல்லவேண்டும் என்றால், அந்தக்கணம் முதலே உங்களுக்கு இன்டர்வியூ ஆரம்பம் ஆகி விட்டதாகத்தான் பொருள்.
நீங்கள்அறைக்குள் எப்படி வருகிறீர்கள்? அதிகாரிகளை பார்த்து எப்படி வணக்கம் வைக்கிறீர்கள் என்பது முதல் உங்கள் தேர்வின் தொடக்கம். சில கேள்விகள் உங்களுக்கு சட்டென்று புரியாமல் இருக்கலாம்.
அதை புரியவில்லை. தயவு செய்து திரும்பவும் கூற முடியுமா?’ என்று கேட்டு அதன்பிறகு உங்கள் பதிலை சொல்லலாம். ஒருவேளை அந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு தெரியவில்லை என்றால், விடை தெரியவில்லை என்பதை தயக்கமின்றி கூறுங்கள்.
எல்லாம் தெரிந்தவர் என்று எவருமில்லை. எனவே அவர்கள் கேட்கும் கேள்விகளில் ஒன்றிரெண்டுக்கு பதில் தெரியாத பட்சத்தில் `தெரியவில்லை சாரி’ என்று கூறி விடலாம்.
ஒருவேளை தெரியாதது என்று சொல்லி விட்டால் நாம் நிராகரிக்கப்பட்டு விடுவோமோ என்று பயந்து கொண்டு சிலர் தவறான விடைகளை கூற முயற்சிக்கலாம். அது `ஒத்தையா ரெட்டையா’ கதையாக அமைந்து உங்கள் வெற்றிக்கான வாய்ப்புக்கு பின்னடைவை ஏற்படுத்தி விடக்கூடும்.
ஐந்து நிமிடம் தேர்வாளர்கள் இப்படி உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே நீங்கள் `சமாளிப்பாளரா? நேர்மையாக அணுகுபவரா’ என்பதை கணித்து விடுவார்கள். கேள்விகள் முடிந்தது என்று அவர்கள் அறிவித்ததும், மறக்காமல் நன்றி சொல்லிவிட்டு புறப்படுங்கள் .
தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் இன்டர்வியூவில் ஜெயிப்பது சுலபம்.
Labels:
News
,
others
No comments :
Post a Comment