கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு ஆலோசனை

Share this :
No comments

கருணாநிதி தலைமையில் தி.மு.க. செயற்குழு அண்ணா அறிவாலயத்தில் இன்று கூடியது. கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

சென்னை:

சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. 89 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தி.மு.க. எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது.

இந்த நிலையில் தி.மு.க. தலைமை செயற்குழு இன்று காலை கூடியது. தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.

இதில் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், தலைமை நிலைய செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, மருத்துவ நுழைவுத் தேர்வு விவகாரம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.