வடை போச்சே!: விஜயகாந்த் நகைச்சுவை கருத்து
உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிடும் தேமுதிக-மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் பிரச்சாரம் செய்தார்.
அங்கு அவருக்கு சாப்பிட வடை கொடுக்கப்பட்டது. மோசமான சாலை காரணமாக விஜயகாந்தின் வேன் குலுங்கியதில் வடை கீழே விழுந்துவிட்டது இதனால் அவர் வடை சாப்பிடமுடியாமல் போனதை தனது பிரச்சாரத்தில் கூறினார்.
வடை சாப்பிட முடியாத அளவிற்கு ரோடு மோசமாக இருப்பதை நகைச்சுவை உணர்வுடன் விஜயகாந்த் பேசினார். தான் வெற்றி பெற்றால் கண்டிப்பாக ரோடு போடப்படும் என விஜயகாந்த் உறுதியளித்தார்.
வேனுக்குள் இருந்த விஜயகாந்தை வெளியே வந்து பேசுமாறு சிலர் அழைத்தனர். இதனால் கோபமடைந்த விஜயகாந்த், நான் ஒன்றும் ஜெயலலிதா அல்ல, வேனுக்கு மேலே ஏறியும் என்னால் பேச முடியும் என்றார் சற்று கோபமாக.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment