விஜய் இயக்குனருக்கு வாழ்வளிக்கப் போகும் அஜித் படம்
விஜய் இயக்குனருக்கு வாழ்வளிக்கப் போகும் அஜித் படம் விஜய்யை வைத்து ஜில்லா படத்தை இயக்கியவர் நேசன்.
ஜில்லாவுக்குப் பிறகு ரொம்ப நல்லா வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நேசன் அடுத்து படமில்லாமல் அல்லாடிக் கொண்டிருக்கிறார்.
ஜில்லா வெளியான போது, அப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்வதற்காக ஹைதராபாத்தில் டேரா போட்டார் நேசன். ரீமேக் செய்ய வேண்டும் என்பதற்காக ஜில்லாவை தெலுங்கில் டப் செய்யவும் இல்லை.
ஆனால், அந்தக் கதையில் நடிக்க எந்த முன்னணி நடிகரும் ஆர்வம் காட்டவில்லை. கடைசியில் ஒரு வருடம் கழித்து ஜில்லாவை தெலுங்கில் டப் செய்து வெளியிட்டனர்.
இந்நிலையில் நேசனுக்கு அஜித் படம் மூலம் ஒளிமயமான எதிர்காலம் தெரியத் தொடங்கியிருக்கிறது. அஜித்தின் வேதாளம் படத்தை தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் தயாரிக்க ஏ.எம்.ரத்னம் திட்டமிட்டுள்ளார். இந்த ரீமேக்கை இயக்க அவர் தேர்வு செய்திருப்பது நேசனை.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் நேசன் வேதாளத்திள் தெலுங்கு ரீமேக்கை இயக்குவார் என்கிறார்கள்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment