விக்ரமுக்கு விருது இல்லையா? - பி.சி.ஸ்ரீராம் அதிருப்தி

Share this :
No comments


நேற்று அறிவிக்கப்பட்ட 2015 -ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படாததற்கு அவரது ரசிகர்கள் இணையத்தில் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். ஐ படத்துக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராம் தனது கோபத்தையும், அதிருப்தியையும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

'விக்ரமுக்கு விருது ஏதும் இல்லை. வருந்துகிறேன். தேசிய விருதுகள் பல நேரங்களில் அதன் நோக்கத்தை இழந்துவிடுகிறது.

என்னைப் பொருத்தவரை இது விக்ரமுடைய இழப்பு அல்ல, இது தேசிய விருதுகளுக்கான இழப்பு' என்று காட்டமாக கூறியுள்ளார்.

இதேபோல் ராஜமௌலி மனுதர்மத்தை ஆதரித்து பதிவிட்டதாலேயே பாகுபலி போன்ற ஒரு வணிகப் படத்தை சிறந்த படமாக தேர்வு செய்துள்ளனர் என்றும் கண்டனங்கள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment