ஜெயலலிதாவுக்கு டாட்டா சொல்லிட்டு கருணாநிதிக்கு சிக்னல் கொடுக்கும் வாசன்?

Share this :
No comments


தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எப்பொழுது தனது கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது. அதிமுக உடன் கூட்டணி அமைப்பார் என கூறப்பட்டு வந்த நிலையில் அவரது இன்றைய பேட்டி அதனை மறுக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதிமுக உடன் கூட்டணி வைத்தால் அவருக்கு 8 தொகுதிகள் வழங்கப்படும் என பேசப்பட்டது. இரட்டை இலை சின்னத்துடன் அவர்கள் போட்டியிட்டால் 12 தொகுதிகள் வரை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டது. ஆனால் ஜி.கே.வாசன் சொந்த சின்னத்தில் 25 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என கோரிக்கை வைத்ததால் ஜெயலலிதா உடனான சந்திப்பும் நடைபெறாமல் இருந்தது.

இந்நிலையில் ஜி.கே.வாசன் தங்கள் கட்சிக்கான தென்னந்தோப்பு சின்னத்தை இன்று அறிவித்தார். மேலும் தாங்கள் சேர இருக்கும் கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் பிரச்சனையில்லை என்ற தொனியில் பேட்டி அளித்துள்ளார்.

அதிமுக அளிக்கும் 8 தொகுதிகளை ஜி.கே.வாசன் ஏற்க மாட்டார் எனவும் அதிமுக கூட்டணிக்கு டாட்டா சொல்லவே ஜி.கே.வாசன் தங்கள் சின்னத்தை அறிவித்திருப்பதாக தமாகா வட்டாரங்கள் கூறுகின்றன.

மக்கள் நல கூட்டணியில் தேமுதிக-வுக்கு 124 தொகுதிகள் போக மீதமுள்ள 110 தொகுதிகளை பிரிக்க மக்கள் நல கூட்டணி கட்சிகள் மண்டைய பிச்சிகிட்டு இருக்காங்க இந்நிலையில் ஜி.கே.வாசன் கேட்க்கும் தொகுதிகள் அங்கு கிடைக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் காங்கிரஸ் உடன் கூட்டணி அமைத்திருக்கும் திமுக உடன் தமாகா சேருமா என செய்தியாளர் ஒருவர் கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த வாசன் காங்கிரஸை விட்டு விலகி வெகுதூரம் வந்துவிட்டோம். நாங்கள் கூட்டணி தொடர்பாக முடிவெடுக்கும் போது ஒரு கட்சியைப் பார்த்து முடிவெடுக்கமாட்டோம், எங்களது கட்சி நலன், மக்களின் நலன் பார்த்து முடிவெடுப்போம் என்றார்.

ஜி.கே.வாசனின் இந்த கருத்து அவர் திமுக உடன் கூட்டணி அமைக்க விருப்பமாக இருப்பதாகவே அரசியல் விமர்சகர்களால் கூறப்படுகிறது. திமுக தரப்பும் ஜி.கே.வாசனை கூட்டணியில் இணைக்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜி.கே.வாசன் திமுக கூட்டணிக்கு வருவதை காங்கிரஸ் கட்சி எதிர்த்தால் காங்கிரசை கூட்டணியில் இருந்து கழட்டி விடவும் திமுக யோசிக்காது என பேசப்படுகிறது. ஜி.கே. வாசனின் இன்றைய பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments :

Post a Comment