மே இறுதியில் வெளிவரும் சிவகார்த்திகேயனின் ரெமோ படப்பாடல்கள்

Share this :
No comments


சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரமாண்டமாக தயாராகும் படம், ரெமோ. இதனை சிவகார்த்திகேயனின் நண்பர் ராஜா, 24 ஏஎம் பட நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். கிட்டத்தட்ட சிவகார்த்திகேயனின் சொந்த தயாரிப்பு இது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். கீர்த்தி சுரேஷ் நாயகி. இதன் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

இதன் பாடல்களை மே மாத இறுதியில் - தேர்தல் முடிவு வெளியான பிறகு வெளியிட தீர்மானித்துள்ளனர். அதற்கு முன் படப்பிடிப்பை முடிக்கும் முனைப்புடன் வேலைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இந்தப் படத்தில் முதல்முறையாக பல்வேறு கெட்டப்புகளில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அதில் ஒன்று பெண் கதாபாத்திரம் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments :

Post a Comment