செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரியாக்களில் 11 திரையரங்குகளுக்கே புதுப்படங்கள்

Share this :
No comments

செங்கல்பட்டு திரையரங்கு உரிமையாளர்கள் தெறி படத்தை மினிமம் கியாரண்டியில் வாங்க மாட்டோம், சதவீத அடிப்படையில் மட்டுமே வாங்குவோம் என்று கூறி, தெறி படத்தை வெளியிடாமல் புறக்கணித்தனர். 11 திரையரங்குகள் மட்டுமே தெறியை வெளியிட்டன. அந்த 11 திரையரங்குகளுக்கு மட்டுமே புதுப்படங்களை தருவோம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. அந்த 11 திரையரங்குகள் விவரம் 1. ஏஜிஎஸ் குழுமம் (வில்லிவாக்கம், ஓஎம்ஆர்) 2. மாயாஜால் - கானத்தூர் 3. ஜாஸ் சினிமாஸ் - வேளச்சேரி 4. ஃபேம் இண்டர்நேஷனல் - விருகம்பாக்கம் 5. பிவிஆர் சினிமாஸ் - வேளச்சேரி 6. எஸ் 2 தியாகராஜா - திருவான்மியூர் 7. எஸ் 2 - பெரம்பூர் 8. கணபதிராம் - அடையார் 9. மீரா - திருவள்ளூர் 10. வெற்றிவேல் முருகன் - பொன்னேரி 11. எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் - சாலிகிராமம் கபாலி, 24, எஸ் 3 உள்பட எந்தப் புதிய படங்களும் இந்த 11 திரையரங்குகளுக்கு மட்டுமே வழங்கப்படும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரியாக்களில் உள்ள பிற திரையரங்குகளுக்கு புதிய படங்கள் எதுவும் தரப்பட மாட்டாது என தயாரிப்பாளர்கள் சங்கம் உறுதிபட அறிவித்துள்ளது.

No comments :

Post a Comment