மோ டீசரை வெளியிட்ட கமல்
மோ என்னும் பெயரில் புதிய படம் ஒன்று உருவாகி உள்ளது. இதில் சுரேஷ் கதாநாயகனாகவும், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பூஜா தேவாரியா கதாநாயகியாகவும் நடித்துள்ளார்கள்.
டபிள்யூ.டி.எப் என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை புவன் நல்லான் இயக்கியுள்ளார்.
காமெடி கலந்த திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் டீசரை கமல்ஹாசன் நேற்று வெளியிட்டார். டீசரை பார்த்த கமல்ஹாசன் படக்குழுவினரை வெகுவாக பாராட்டியிருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஜூன் மாதத்தில் படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment