தயாரிப்பாளர்கள் சங்க முடிவு - கட்டுப்பட மறுத்த உதயநிதி

Share this :
No comments

தெறி படத்தை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஏரியாக்களில் உள்ள 11 திரையரங்குகள் மட்டுமே திரையிட்டன. இந்த 11 திரையரங்குகள் தவிர வேறு எந்த திரையரங்குகளுக்கும் புதுப்படங்களை தருவதில்லை என்று தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு எடுத்து அறிவித்துள்ளது. இந்த முடிவுக்கு கட்டுப்பட போவதில்லை என உதயநிதி கூறியுள்ளார். கடந்த 5 வருடங்களில் என்னுடைய எந்தப் படத்துக்கும் அரசு வரிச்சலுகை தரவில்லை. அப்போதெல்லாம் இந்த தயாரிப்பாளர்கள் சங்கம் எங்கே போயிருந்தது என்று கேள்வி எழுப்பியிருக்கும் அவர், என்னுடைய மனிதன் படத்தை அனைத்து திரையரங்குகளுக்கும் அளிப்பேன் என கூறியுள்ளார். உதயநிதி போல் தாணு தலைமையிலான தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மீது அதிருப்தி கொண்டவர்கள், தயாரிப்பாளர்கள் சங்கத்தின், 11 திரையரங்குகளுக்கே படங்கள் என்ற முடிவை எதிர்க்க வாய்ப்புள்ளது.

No comments :

Post a Comment