அஜித் வந்தால் வரட்டும்... அலட்சிய நடிகர் சங்கம்

ஏப்ரல் 17 நடக்க உள்ள நட்சத்திர கிரிக்கெட் போட்டி, அஜித்தை மையப்படுத்தி சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அஜித், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்கு பதிலாக நன்கொடை தர முன்வந்ததாகவும், அதனை ஏற்க நடிகர் சங்கம் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. நன்கொடை வாங்கி கட்டிடத்தை கட்டினால், அதிக நன்கொடை தருகிறகிறவர்கள் சங்கத்தில் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். பங்களிப்பு செலுத்த முடியாத நலிந்த கலைஞர்களுக்கு அது ஒரு மனத்தடையாக அமையும் என்று கூறியே நன்கொடையை தவிர்த்து நட்சத்திர கிரிக்கெட் போட்டியை நடிகர் சங்கம் நியாயப்படுத்துகிறது. அவர்களின் நியாயப்படியே பார்த்தாலும், முன்னணி நடிகர், நடிகைகள் மட்டும்தான் இந்த கிரிக்கெட் போட்டியிலும் பங்களிப்பு செலுத்தப் போகிறார்கள். நலிந்த கலைஞர்கள் மைதானத்துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவார்களா என்பது சந்தேகம். அப்படியிருக்க, நலிந்த கலைஞர்கள் எப்படி நட்சத்திர கிரிக்கெட்டில் பங்கெடுப்பதாக கூற முடியும்? இந்நிலையில், நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் அஜித் கலந்து கொள்வாரா என்ற கேள்விக்கு பதிலளித்த பொன்வண்ணன், வருவதும் வராததும் அவர் விருப்பம். யாரும் யாரையும் வற்புறுத்தவில்லை. சக கலைஞர்களின் நலனுக்காக நடத்தப்படும் நிகழ்ச்சி இது என்று பதிலளித்தார்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment