அஜித் -விஜய் நட்சத்திர கிரிக்கெட் வராதது பற்றி கமலின் கருத்து
உலக நாயகன் கமல்ஹாசனின் 'சபாஷ் நாயுடு' படத்தொடக்கவிழா இன்று காலை நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடைபெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் பேசிய கமல்ஹாசன் தனது படம் குறித்தும், அஜித்-விஜய் குறித்தும் பேசியுள்ளார்.
'சபாஷ் நாயுடு' திரைப்படம் மே மாதம் 14ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் இந்த படத்தின் 85% படப்பிடிப்பு அமெரிக்காவிலும், மீதி இந்தியாவிலும் நடைபெறும் என்று தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூலையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் அஜித் மற்றும் விஜய் இருவருமே எங்கள் சகோதரர்கள் என்றும் நடிகர் சங்கம் எப்போதுமே இருவரையும் வரவேற்க தயாராக இருப்பதாக கூறிய கமல், நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கு இருவரும் ஏன் வரவில்லை என்று எந்த விளக்கமும் அவர்கள் அளிக்க தேவையில்லை என்று அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறினார்.
Labels:
cinema news
No comments :
Post a Comment