வெயிலுக்கு இதமான சிறுதானியக் கஞ்சி

Share this :
No comments

தேவையான பொருட்கள்:

சாமை, திணை, வரகு, சிவப்பரிசி, பாசிப்பருப்பு தலா – 50 கிராம்,

மோர் – 3 கப்,

தண்ணீர் – 4 கப்,

சின்ன வெங்காயம் – 8,

சீரகம் – 1 டீஸ்பூன்,

கறிவேப்பிலை – தேவையான அளவு,

பச்சைமிளகாய் – 3,

கடுகு – 1 டீஸ்பூன்,

நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,

கொத்தமல்லித்தழை, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

* சின்ன வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

* சாமை, தினை, வரகு, சிவப்பரிசி, பச்சைப்பருப்பு இவற்றைத் தனித்தனியாக கடாயில் வறுத்து சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு, நன்றாகக் குருணையாகப் பொடிக்க வேண்டும்.

* இதில் 4 கப் தண்ணீர் ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து, குக்கரில் 3 விசில் வந்ததும் இறக்கவும்.

* கடாயில் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், பச்சை மிளகாய் தாளித்து சின்ன வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்கி, கஞ்சியில் கொட்டவும்.

* பிறகு மோர், கொத்தமல்லி தழை சேர்க்கவும்.

* உடலுக்கு ஆரோக்கியம் இந்த கஞ்சியை குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவரும் அருந்தலாம்.

No comments :

Post a Comment