ஜெயலலிதாவுக்காக, வேண்டுதலில் இருக்கும் நமீதா: நிறைவேறியதால் திருப்பதி பயணம்

Share this :
No comments


அதிமுகவில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் சமீபத்தில் சேர்ந்தார் நடிகை நமீதா. அரசியலில் அனுபவம் இல்லையென்றாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காகவே அதிமுக கட்சியை தேர்வு செய்ததாக நமீதா கூறியிருந்தார்.

தேர்தல் நேரத்தில் நமீதா அதிமுகவில் சேர்ந்தாலும் அவரை தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பயன்படுத்தவில்லை. இந்நிலையில் அந்த நேரத்தில் அவருடைய பிறந்தநாள் வந்ததால் திருப்பதி சென்று வழிபட்டார் நமீதா.

பிறந்தநாளுக்கு திருப்பதி சென்ற நமீதா, அதிமுக மீண்டும் வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என வேண்டியதாக கூறினார். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளதையடுத்து நடிகை நமீதா வேண்டுதலை நிறைவேற்றிய திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

தன்னுடைய வேண்டுதலுக்கு பலன் கிடைத்துள்ளதால் மீண்டும் திருப்பதிக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளேன் என்று நமீதா தெரிவித்துள்ளார்.