வெளிநாட்டில் கறுப்பு பணம் - சிக்கிய சயிப் அலிகான், கரீனா கபூர் தம்பதி
நாட்டில் கறுப்புப் பணத்தை பதுக்கிய பட்டியலில் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராயுடன் சயிப் அலிகான், கரீனா கபூர் தம்பதியும் மாட்டியுள்ளனர். கரீனாவின் சகோதரி கரீஷ்மாவுக்கும் இதில் பங்குள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சயிப் அலிகான், கரீனா கபூர் பி விஷன் என்ற பெயரில் புதிய நிறுவனம் தொடங்கி கரீபியன் ஒரு தீவில் இருக்கும் ஓப்டுரேட் என்ற நிறுவனத்துடன் இணைந்து ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் புனே அணியை வாங்க முயற்சித்துள்ளனர். பி விஷன் கம்பெனியில் கரீனா கபூருக்கும், கரீஷ்மா கபூருக்கும் தலா 4.5 சதவீதம் பங்குகளும் சயீப் அலிகானுக்கு 9 சதவீதம் பங்குகளும் இருந்துள்ளன. இதன் மூலம் வரிஏய்ப்பு செய்த கருப்பு பணம் வெளிநாட்டு கம்பெனிக்கு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் ஏலத்தில் புனே அணியை எடுக்க முடியாமல் போனதால் அந்த பி விஷன் கம்பெனியை கலைத்து விட்டார்கள். கருப்பு பண பதுக்கல் பட்டியலில் சயீப் அலிகான், கரீனா கபூர், கரீஷ்மா கபூர் பெயர்கள் இடம் பெற்று இருப்பது இந்தி பட உலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment