கருணாசால் அதிமுகவில் கலகம்: அப்செட்டில் கட்சியினர்

Share this :
No comments

முக்குலத்தோர் புலிப்படை தலைவரும், நடிகருமான கருணாஸ் வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் ராமநாதபுரம் மாவட்டம், திருவாடணையில் போட்டியிடுகிறார். இவர் அதிமுக பொதுச்செயலாளார் ஜெயலலிதாவை வேட்பாளர் பட்டியல் வெளியாகும் ஒரு நாள் முன்னர் தான் போய் சந்தித்து முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் ஆதரவை தெரிவித்தார். மறுநாள் வெளியான வேட்பாளர் பட்டியலில் கருணாஸ் திருவாடனை தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது, குறிப்பாக அதிமுகவினரில் பலர் அப்செட்ட ஆனார்கள். இதனால் உள்ளூர் அதிமுக நிர்வாகிகள் கோபத்தில் உள்ளதாக கூறப்படுகிறது. திருவாடனை தொகுதியில் பிரபலமான முன்னாள் மாவட்ட செயலாளர் ஆனிமுத்து தீவிரமாக சீட் கேட்டு வந்தார். தற்போது மாவட்ட கவுன்சிலராக உள்ள ஆனிமுத்துக்கு தான் சீட் கிடைக்கும் என அதிமுகவினர் எதிர்பார்த்துள்ள நிலையில் கருணாசுக்கு அந்த தொகுதியில் சீட் கொடுக்கப்பட்டது கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவர்கள் உள்ளடி வேலைகளில் ஈடுபடலாம் என பேசப்படுகிறது.

No comments :

Post a Comment