குடல் புண்களை ஆற்றும் கேழ்வரகு

Share this :
No comments

கால்சியம் நிறைந்திருக்கும் தானியம் கேழ்வரகு. இது, அனைவரும் சாப்பிடுவதற்கு ஏற்ற உணவு. கேழ்வரகை கஞ்சி, கூழ், தோசை, இடியாப்பம், சேமியா எனப் பலவிதமாகச் சாப்பிடலாம். உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல்கொண்டது; குடலுக்கு நல்லது. வெயில்காலங்களில் கேழ்வரகு கூழ் குடிக்கலாம். இது பசியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது; குடல் புண்களை ஆற்றும். கேழ்வரகு, கிளைசமிக் எண் சற்று அதிகம் கொண்டது. எனவே, சர்க்கரை நோயாளிகள் கேழ் வரகை திட வடிவில் சமைத்துச் சாப்பிடுவதே நல்லது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு கேழ்வரகு மிகவும் அவசியம். எனவே சிறுவயதில் இருந்தே கேழ்வரகை குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல்பருமனாக இருப்பவர்களுக்கு கேழ்வரகு நல்லது. மூட்டுவலி இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும்.

No comments :

Post a Comment