வைகோவுக்கு தடை விதித்த மக்கள் நல கூட்டணியினர்
மக்கள் நல கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும், மதிமுக பொதுச்செயலாளருமான வைகோவுக்கு மக்கள் நல கூட்டணியினர் ஒரு புதிய தடை வித்துள்ளதாக கூறப்படுகிறது. எப்பொழுதும் ஆக்ரோஷமாக பேசும் வைகோ சமீப காலமாக செய்தியாளர்களிடம் கோபப்படுவதும், அரசியல் தலைவர்களை தரக்குறைவாக விமர்சிப்பதும், அதிகாரிகளை ஒருமையில் பேசுவதுமாக நிதானம் இழந்து பேசுகிறார். சமீபத்தில் திமுக தலைவர் கருணாநிதியை மிகவும் அறுவருக்கத்தக்க வகையில் பேசி பின்னர் அவரது சாதி தொழிலை சொல்லி பேசினார். இதனால் திமுகவினர் வைகோவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது உருவ பொம்மையை எரித்தனர். பின்னர் வைகோ தான்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கோரினார். இப்படி தொடர்ச்சியாக செய்தியாளர்கள் மத்தியில் நிதானம் இழந்து பேசும் வைகோவுக்கு மக்கள் நல கூட்டணியினர் செய்தியாளர்களை சந்திக்க தடை விதித்ததாக பேசப்படுகிறது. நேற்று மதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை வைகோ சந்திக்காமல் திருமாவளாவன் தான் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
Labels:
News
,
other
No comments :
Post a Comment