தேமுதிக-மக்கள் நல கூட்டணி தொகுதி பங்கீடு விவரம்: தேமுதிக தொகுதிகள் குறைப்பு
தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் இன்று இணைந்தது. செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த கூட்டணி கட்சியின் தலைவர்கள் தொகுதி பங்கீடு விவரங்களை வெளியிட்டனர். தேமுதிக தலைமை அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜி.கே.வாசன் தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் சேர்ந்ததை அதிகாரப்பூரவமாக அறிவித்தனர். முன்னதாக தேமுதிக அலுவலகத்துக்கு வந்த ஜி.கே.வாசனுக்கு தொண்டர்கள் வழியெங்கும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொகுதி பங்கீடு விபரம்: தேமுதிக - 104 தொகுதிகளில் போட்டியிடுகின்றன மதிமுக - 29 தொகுதிகளில் போட்டியிடுகின்றன தமாகா - 26 தொகுதிகளில் போட்டியிடுகின்றன விசிக - 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றன மா.கம்யூனிஸ்டு - 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றன இ.கம்யூனிஸ்டு - 25 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. முன்னதாக விஜயகாந்த் இந்த கூட்டணியில் சேரும் போது அவருக்கு 124 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது ஜி.கே.வாசனின் தமாகா இந்த கூட்டணியில் சேர்ந்துள்ளதால் தேமுதிகவிற்கு 20 தொகுதிகள் குறைக்கப்பட்டு 104 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment