போலீஸுக்கு போவேன்... ஐஸ்வர்யா தத்தா மீது தயாரிப்பாளர் பாய்ச்சல்

Share this :
No comments


ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் நாலு படம்தான் வந்திருக்கிறது. அதற்குள் நாற்பது பக்கத்துக்கு புகார் படிக்கிறார் தயாரிப்பாளர் பி.ஜி.முத்தையா.

என்ன விவகாரம்?

பி.ஜி.முத்தையா மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தை இயக்கி வருகிறார். ஐஸ்வர்யா தத்தா நாயகி. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கிளைமாக்ஸை எடுப்பதற்காக அனைவரும் தயார். ஆனால், ஐஸ்வர்யா தத்தா மட்டும் ஆப்சென்ட். படப்பிடிப்புக்கு வருவதாக சொல்லிவிட்டு வேறொரு படப்பிடிப்புக்கு சென்றிருக்கிறார். அதனால், அன்றைய ஒருநாள் முழுவதும் வீண். தயாரிப்பாளரின் பர்ஸுக்கு அந்தவகையில் 3 லட்சம் நஷ்டம்.

எங்களுக்கு கால்ஷீட் தந்துவிட்டு வேறு படப்பிடிப்புக்கு போயிருக்கிறார். அதனால் 3 லட்சம் நஷ்டம். அவர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் மட்டுமில்லை, போலீஸிலும் புகார் தருவேன் என்று கொதிக்கிறார் தயாரிப்பாளர்.

ஐஸ்வர்யா தத்தா... நீங்க என்ன சொல்றீங்க?

No comments :

Post a Comment