பாவாடை தாவணியில் மலராக மாறிய ஜனனி
அவன் இவன் படத்தில் நடித்த ஜனனியை கடைசியாகப் பார்த்தது தெகிடியில். ஏன் தமிழில் பார்க்க முடியவில்லை என்ற கேள்விக்கு, சும்மா வந்து போகும் கதாபாத்திரங்கள் வேண்டாம் என்றிருக்கிறேன் என வழக்கமாக நடிகைகள் சொல்லும் பதிலை சொல்கிறார். தற்போது தமிழில் உல்டா, தொல்லைக்காட்சி என இரு படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் உல்டா சைக்கலாஜிகல் த்ரில்லர். கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தொல்லைக்காட்சியின் ஒரு ஷெட்யூல்ட் முடிந்திருக்கிறது. இதில் படம் முழுக்க தாவணியில் ஜனனி வருகிறார். படத்தில் இவரது கதாபாத்திர பெயர் மலர். பிரேமம் மலர் போல் புகழ் கிடைக்கட்டும்.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment