தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் இணைந்தார் ஜி.கே.வாசன்: தமாகவிற்கு 26 தொகுதிகள் ஒதுக்கீடு

Share this :
No comments

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தேமுதிக-மக்கள் நல கூட்டணியில் இணைந்தது. அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணி தொடர்பான முடிவுகளை அறிவித்து, தொகுதி பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தமாகா அதிமுக கூட்டணியில் இடம் பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான உடன்பாடு எட்டப்படவில்லை. இதைத் தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இடம் பொறுவது குறித்து வாசன் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் மக்கள் நல கூட்டணியில் தமாகா இடம்பெற உள்ளதாகவும், அற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், மக்கள் நல கூட்டணி தலைவர்கள் ஜி.கே.வாசனை சந்திப்பதற்காச் சென்றனர். இதைத் தொடர்ந்து வாசன் உள்ளிட்ட தலைவர்கள் கோயம்போட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்திற்குச் சென்றனர். அங்கு, தேமுதிக-மக்கள் நல கூட்டணியுடன் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும் இணைந்த அறிவிப்பு முறைப்படி வெளியிடப்பட்டது. அதன்படி, இந்த கூட்டணியில் தமாகாவிற்கு 26 தொகுதிகங் ஒதுக்கப்படுள்ளதாக அதிகாரப்பூர்மாக அறிவிப்பு வெளியாகிறது.

No comments :

Post a Comment