மீண்டும் வீ.சேகர் இயக்கத்தில் வடிவேலு...?

Share this :
No comments


சாதா வடிவேலை அசாதாரண வடிவேலாக்கியதில் வீ.சேகரின் படங்களுக்கு நிறைய பங்குண்டு.

வீ.சேகரின் படத்தில் யார் இருக்கிறார்களோ இல்லையோ வடிவேல் இருப்பார் என்று சொல்கிற அளவுக்கு வீ.சேகரின் கம்பெனி ஆர்ட்டிஸ்டாக இருந்து வளர்ந்தவர்.

குடும்பப் படங்களிலும் ஒரு சிவப்புத்துண்டு கதாபாத்திரத்தை உலவவிட்ட வீ.சேகரை பொருளாதாரம் படுத்தியபாட்டில் சிலை திருட்டு என்ற பைபாஸில் சஞ்சலித்து சிறை சென்று மீண்டுள்ளார். அவரது நிலமை இப்போதைக்கு கவலைக்கிடம்.

வீ.சேகரின் இன்றைய நிலையை கருத்தில் கொண்டு, அவரது கம்பெனில் படம் நடிக்க முன்வந்திருக்கிறார் வடிவேலு. சம்பளம் எல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் என்று சொல்கிற அளவுக்கு இறங்கி வந்திருக்கிறதாம் காமெடிப் புயல்.

வீ.சேகரும் வடிவேலுக்கு ஏற்ற கதையாக எழுதிக் கொண்டிருக்கிறாராம்.

வாங்க... வந்து வூடு கட்டி அடிங்க...

No comments :

Post a Comment