பாஜகவிலிருந்து விலகிய காமரஜரின் பேத்தி திமுகவில் இணைந்தார்
மறைந்த காமராஜரின் பேத்தி மற்றும் அவரது இளைய சகோதரரின் மகள் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
மறைந்த காமராஜரின் பேத்தி டி.எஸ்.கே.மயூரி மற்றும் அவரது இளைய சகோதரரின் மகள் சந்திரா, கண்ணன், ராஜாமணி ஆகியோர் இன்று காலை சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்தனர். அதன்பின், திமுக பொருளாலர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
மயூரி ஏற்கனவே பாஜகவில் இருந்தார். அங்கு சரியாக செயல்பட முடியாத காரணத்தினால், அந்த கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்ததாக அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அப்போது அங்கு எராளமான திமுக நிர்வாகிகள் இருந்தனர். அவர்களோடு அடுத்து, 104 தமிழ் சங்க தலைவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து, தங்கள் ஆதரவை திமுகவிற்கு தெரிவித்துக் கொண்டனர்.
Labels:
News
,
other
No comments :
Post a Comment