கான் Gone ஆகலையாம் - செல்வராகவன்
செல்வராகவன் இயக்கத்தல் சிம்பு நடிப்பில் தொடங்கப்பட்ட படம், கான். ஆரம்பித்த உடனேயே படம் பெட்டிக்குள் போனது. கான் ட்ராப்பாகிவிட்டது என்ற செய்தியை உறுதி செய்வதுபோல், நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்க ஆரம்பித்தார் செல்வராகவன்.
இந்த பிக்கப் ட்ராப் மீடியாவில் செய்தியான போதெல்லாம் பதலளிக்காமலிருந்த செல்வராகவன் இப்போது திடீரென்று, கான் ட்ராப் ஆகலை. படத்தை தொடங்க ஆர்வமாக காத்துகிட்டிருக்கிறோம் என்று ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார். சிம்பும் கானில் நடிக்க ஆர்வமாகத்தான் இருக்கிறாராம்.
கான் ட்ராப் ஆனதாக சொல்லப்பட்ட போதெல்லாம் சும்மாயிருந்தவர், பலமாதங்கள் கழித்து பதிலளிக்கிறார்.
செல்வராகவன் சார்.. உங்க 'டக்'கு ரொம்ம்ம்ப ஸ்லோ.
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment