ரூ.100 கோடி டீல் - மயக்கம் போடவைக்கும் அண்டர்கிரவுன்ட் அரசியல்

Share this :
No comments


அதிமுக- திமுக வேட்பாளர் இடையே ஏற்பட்ட ரூ 100 கோடி அண்டர்கிரவுன்ட் அரசியல் டீல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் இரண்டு தொகுதியில் பணப்பட்டுவடா உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக, தேர்தலை நிறுத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த தொகுதியில் ஒரு தொகுதியில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் இடையே அண்டர்கிரவண்ட் டீலிங் நடைபெற்றுள்ளதாம். என்னவென்றால், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றால், அதிமுக வேட்பாளர் விட்டுக் கொடுத்துவிடவேண்டுமாம். அதே போல், அதிமுக ஆட்சி அமைந்தால், திமுக வேட்பாளர் விட்டுக் கொடுத்திட வேண்டுமாம். இதில் ஒரு பியூட்டி என்னவென்றால், செலவு தொகையாக ரூ.100 கோடியை தோல்வியடைந்த வேட்பாளருக்கு வெற்றி பெற்ற வேட்பாளர் கொடுத்துவிட வேண்டுமாம்.

இந்த டீலிங் மூலம் எந்த வேட்பாளர் தோல்வி அடைந்தாலும் அவருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாதாம்.மேலும், எந்த ஆட்சி அமைந்தாலும், அவர்கள் இருவருமே தங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளை சுலமாக சாதித்துக் கொள்ளலாம். இந்த ஒரு சூப்பர் டீலிங்போட்டு வேலை பார்த்த தகவல் அதிமுக நிர்வாகிகள் மூலம் விலாவாரியாக மேலிடத்திற்கு தெரிந்துவிட்டதாம். இதனால், மேடம் கடும் டென்சனில் உள்ளாராம்.

மேலும், திமுக ராஜ்யசபா தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி இன்றியமையாதவை ஆகிறது. இதனால், இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளாராம்.

இந்த விவகாரம் குறித்து உண்மையை நிலையை அறிய உளவுத்துறை களத்தில் குதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments :

Post a Comment