நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணி 98 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் திமுக 89 தொகுதிகளில் வெற்றி பெற்று வலுவான எதிர்கட்சியாக உருவெடுத்துள்ளது.

முதல்வராக நேற்றைய தினம் ஜெயலலிதா பதவியேற்றதையடுத்து, நாளை முதல் சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளது. இதனையொட்டி திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் சட்டசபை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து தனது முகநூலில் அறிக்கை வெளியிட்டுள்ள மு.க.ஸ்டாலின், திமுக சட்டமன்ற கட்சி தலைவராக தன்னை தேர்ந்தெடுத்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக எம்எல்ஏக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தலைவர் பொறுப்பில் சிறப்பாக பணியாற்றுவேன். சட்டமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற தொடர்ந்து பாடுபடுவேன். மக்களின் பிரச்சனைகளை சட்டமன்றத்தில் ஆக்கப்பூர்வமாக விவாதிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் கருணாநிதிக்கு நன்றி கூறினார் மு.க.ஸ்டாலின்



இவரா அதிமுக அமைச்சர்? : வைரல் வீடியோ



தமிழக முதல்வராக நேற்று மீண்டும் பதவியேற்ற ஜெயலலிதா வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்தார். இது மக்களை ஏமாற்றும் வேலை எனவும், அதிமுகவின் தேன் தடவிய வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பால் 1.11 கோடி நுகர்வோருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த பயனும் ஏற்படாது. இந்த அறிவிப்பு மக்களை ஏமாற்றும் செயலாகவே அமையும்.

ஒரு வீட்டில் 100 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் உபயோகித்தால் அதில் 100 யூனிட்டை கழித்து விட்ட மீதமுள்ளவற்றுக்கு கட்டணம் வசூலிக்க வேண்டும், ஆனால் அதிமுக அரசு பிறப்பித்துள்ள ஆணை இதற்கு நேர்மாறாக அமைந்திருக்கிறது.

ஒரு வீட்டில் இரு மாதங்களுக்கு 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டால் இலவச மின்சாரத் திட்டத்தின்படி 100 யூனிட் கழித்து மீதமுள்ள 100 யூனிட்களுக்கு ரூ.120 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், இப்போது ரூ. 233 வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இரு மாதங்களுக்கு 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இப்போது ரூ.1030 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இலவச மின்சாரத்திட்டத்தின்படி இது 300 யூனிட் கட்டணமான ரூ.730 ஆக குறைக்கப்படவேண்டும்; ஆனால் இது ரூ.830 ஆக மட்டுமே குறைக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் 100 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் 1.11 கோடி வீடுகளுக்கு பெரிய பயன் கிடைக்காது.

வறுமையில் வாடும் குடும்பங்களுக்கு ஏற்கெனவே இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வரும் நிலையில், வாக்குவங்கியை குறிவைத்து கோடீஸ்வரர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை.

100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்துவிட்டு, அதை முறையாக வழங்காமல் 1.11 கோடி குடும்பங்களை ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது. அதிமுகவின் தேன் தடவிய வாக்குறுதிகளை நம்பி ஏமாறாமல் தமிழக மக்கள் இனியாவது விழிப்புணர்வு பெற வேண்டும் என ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

அதிமுகவின் தேன் தடவிய வாக்குறுதி: ராமதாஸ் காட்டம்



ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஷ் லீக் ஆட்டத்தின் போது, ஒரு பெண் செய்தியாளர் மெல் மெக்லாலிடம் அநாகரிகமாக பேசிய தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் கிறிஸ் கெயிலை மீண்டும் ஒப்பந்தம் செய்ய அவருடைய ரெனிகேட்ஸ் அணி மறுத்துள்ளது.

அந்த ஆட்டத்தின் போது அந்த பெண் நிருபரிடம் “உங்களுக்கு பேட்டி கொடுக்க வேண்டும் என்று நானே விரும்பினேன். உங்கள் கண்களைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அவை அழகாக உள்ளன. இந்த போட்டியில் கண்டிப்பாக எங்கள் அணிதான் வெற்றி பெறுவோம். எனவே போட்டி முடிந்த பின் நாம் ஜாலியாக மது அருந்துவோம். வெட்கப்பட வேண்டாம்” என்று கூறியிருந்தார்.

கெயில் இப்படி பேசியது பலத்த சர்ச்சையை கிளப்பியது. அதற்காக அவருக்கு 10,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.

இதுபற்றி விளக்கம் அளித்த கெயில் “நான் விளையாட்டாகத்தான் பேசினேன். இது அந்த நிருபரை களங்கப்படுத்தியிருந்தால், அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அடுத்த வருடம் நடக்க உள்ள போட்டியில் கிறிஸ் கெயிலை ஒப்பந்தம் செய்யமாட்டோம் என ரெனிகேட்ஸ் அணி தெரிவித்துள்ளது.

பெண் செய்தியாளரிடம் அநாகரிகப் பேச்சு : கெயிலுக்கு ஆரம்பமானது ஆப்பு



எம்.பி.க்கள் கேட்ட கேள்விகளுக்கு மதுபோதையில் பதிலளித்த உள்துறை மந்திரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவிலா என்று கேட்கிறீர்களா?... இல்லை.. இது தான்சானியா நாட்டில் நடந்துள்ளது.

கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள தான்சானியாவின் தற்போது ஜான் மகுஃபுலி அதிபராக உள்ளார். இவர் அரசுத்துறையில் பல சீர்திருத்தங்களையும் அதிரடி நடவடிக்கைகளியும் எடுத்து வருகிறார்.

அரசு சார்பில் நடத்தப்படும் விழாக்களில் வீண் செலவுகளை குறைத்து, ஊழலில் ஈடுபடும் அதிகாரிகளை பணி நீக்கம் செய்வது என அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இந்நிலையில், அந்நாட்டு பாராளுமன்றத்தின் கூட்டத்தொடரின் போது, சில எம்.பிக்கள் உள்துறை மந்திரியான சார்லஸ் கிட்வாங்காவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு சார்லஸ் பதிலளித்தார். ஆனால் அப்போது அவர் போதையில் இருந்ததாக தெரிகிறது.

இதனால் கோபமடைந்த அதிபர் ஜான் மகுஃபுலி, சார்லஸை பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

சரக்கடித்து விட்டு பாராளுமன்றத்தில் பேசிய மந்திரி டிஸ்மிஸ்



அரவக்குறிச்சி தொகுதியில் சட்ட மன்றத் தேர்தல் நடத்த வேண்டும் என திமுக மற்றும் அதிமுக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 16 ஆம் தேதி 232 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. அப்போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது உள்ளிட்ட பல்வேறு புகார் எழுந்தது.

இதனால், தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலை மே 23 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்து உத்தரவிட்டது. ஆனால், தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என திமுக தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை வலியுறுத்திவருகிறது.

இந்த நிலையில், இதே கோரிக்கையை முன்வைத்து, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தேர்தலை மே 31 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் தஞ்சாவூர் அதிமுக வேட்பாளர் ரெங்கசாமி மற்றும் அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

திமுகவுடன் கூட்டு சேர்ந்த அதிமுக



ஒரே தேதியில் இரண்டாவது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்று மீண்டும் ஒரு சாதனை படைத்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு, சொத்துக்குவிப்பு வழக்கில் முதல்வர் பதவி இழந்தார். பின்பு, ஜாமீனில் வெளியே வந்த ஜெயலலிதா மே மாதம் 23 ஆம் தேதி தமிழக முதல்வராக 5ஆவது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், நடைபெற்று முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்றதை அடுத்து, அதே மே 23 ஆம் தேதி தற்போது 6 ஆவது முறையாக முதல்வராக பதவியேற்று சாதனை படைத்துள்ளதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன.

மேலும், தமிழக அரசியில் வரலாற்றில், சட்டசபை தேர்தலில் 1984 ஆம் ஆண்டுக்கு பின்பு தற்போதுதான் ஒரு கட்சி இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

அப்படிபோடு....ஜெயலலிதாவின் அடுத்த சாதனை



மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான அவசர சட்டத்தில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கையிழுத்திட்டார். இதன் மூலம் இந்த வருடம் மருத்துவ நுழைவுத்தேர்வு இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பனிரெண்டாம் வகுப்பு முடித்து, மருத்துவத்தை படிக்க நினைக்கும் மாணவ மாணவிகள் நுழைவுத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம். ஆனால், அதை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு அமைப்பினர் போர்க்கொடி தூக்கி வருகின்றனர்.

இதற்கான அவரசர சட்டம் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அவர் அதில் கையெழுத்திடவில்லை. இதனால், நேற்று மதியம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா நேரில் சென்று பிரணாப்பிடம் விளக்கம் அளித்தார்.

அதையடுத்து, மருத்துவ பொது நுழைவுத்தேர்வை தள்ளி வைக்கும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.

எனவே தமிழகத்தில் இந்த வருடம் மருத்துவ நுழைவுத்தேர்வு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பிளஸ்2 வகுப்பில் எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் கலந்தாய்வு மூலம் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறும்.

ஆனால், தனியார் மருத்துவ கல்லூரிகளுக்கு மருத்துவ நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு மருத்துவ நுழைவுத்தேர்வு இல்லை



அதிமுக- திமுக வேட்பாளர் இடையே ஏற்பட்ட ரூ 100 கோடி அண்டர்கிரவுன்ட் அரசியல் டீல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, தமிழகத்தில் இரண்டு தொகுதியில் பணப்பட்டுவடா உள்ளிட்ட பல்வேறு புகார்கள் காரணமாக, தேர்தலை நிறுத்திவைத்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இந்த தொகுதியில் ஒரு தொகுதியில் திமுக - அதிமுக வேட்பாளர்கள் இடையே அண்டர்கிரவண்ட் டீலிங் நடைபெற்றுள்ளதாம். என்னவென்றால், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றால், அதிமுக வேட்பாளர் விட்டுக் கொடுத்துவிடவேண்டுமாம். அதே போல், அதிமுக ஆட்சி அமைந்தால், திமுக வேட்பாளர் விட்டுக் கொடுத்திட வேண்டுமாம். இதில் ஒரு பியூட்டி என்னவென்றால், செலவு தொகையாக ரூ.100 கோடியை தோல்வியடைந்த வேட்பாளருக்கு வெற்றி பெற்ற வேட்பாளர் கொடுத்துவிட வேண்டுமாம்.

இந்த டீலிங் மூலம் எந்த வேட்பாளர் தோல்வி அடைந்தாலும் அவருக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாதாம்.மேலும், எந்த ஆட்சி அமைந்தாலும், அவர்கள் இருவருமே தங்களுக்கு தேவையான அனைத்து வேலைகளை சுலமாக சாதித்துக் கொள்ளலாம். இந்த ஒரு சூப்பர் டீலிங்போட்டு வேலை பார்த்த தகவல் அதிமுக நிர்வாகிகள் மூலம் விலாவாரியாக மேலிடத்திற்கு தெரிந்துவிட்டதாம். இதனால், மேடம் கடும் டென்சனில் உள்ளாராம்.

மேலும், திமுக ராஜ்யசபா தேர்தலில் இந்த இரண்டு தொகுதிகளின் வெற்றி இன்றியமையாதவை ஆகிறது. இதனால், இந்த இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளாராம்.

இந்த விவகாரம் குறித்து உண்மையை நிலையை அறிய உளவுத்துறை களத்தில் குதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரூ.100 கோடி டீல் - மயக்கம் போடவைக்கும் அண்டர்கிரவுன்ட் அரசியல்



டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைப்பதன் மூலம் ஓரு ஆண்டுக்கு 300 கோடி வரை வருவாய் இழப்பு ஏற்பட்டாலும், மக்கள் நன்மை கருதி இந்த முடிவை ஜெயலலிதா உறுதியாக எடுத்துள்ளாராம்.
தமிழகத்தில் ஆறாவது முறையாக முதல்வர் பதவியேற்ற ஜெயலலிதா, முதல்கட்டமாக டாஸ்மாக் மதுபானக் கடைகளின் விற்பனை நேரத்தை இரண்டு மணி நேரமாக குறைக்கவும், தமிழகம் முழுக்க சுமார் 500 கடைகளை மூடவும் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகம் முழுக்க உள்ள 6826 டாஸ்மாக் கடைகள் மூலம், ஒரு நாளுக்கு ரூ.70 முதல் ரூ.80 கோடி வரை அரசுக்கு வருமானம் கிடைக்கிறது.

டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 10 மணிக்கு திறப்பதற்கு பதிலாக 12 மணிக்கு திறப்பதாலும், 500 கடைகளை மூடுவதாலும், அரசுக்கு பெரிய அளவில் நஷ்டம் ஏற்படாது.

காரணம், டாஸ்மாக் கடைகளில் மாலை விற்பனை தான் அதிகம், காலை நேரத்தில் விற்பனை குறைவே. இதனால், அரசுக்கு நாள் ஒன்றுக்கு ரூ.80 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை இழப்பு ஏற்படலாம். அப்படியே இருந்தாலும், ஓரு ஆண்டுக்கு 300 கோடி வரை மட்டுமே வருமானம் இழப்பு ஏற்படும்.

ஆனால், இந்த இழப்புகளை சரிகட்ட புதிய முயற்சியை டாஸ்மாக் நிறுவனம் எடுத்துள்ளதாம். அது மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாம்.

நஷ்டம் வந்தாலும் சரி, கஷ்டம் வந்தாலும் சரி.... இனிமேல் அப்படித்தான்: ஜெயலலிதா



தமிழக முதல்வராக ஜெயலலிதா 6ஆவது முறையாக பதவி ஏற்றதை முன்னிட்டு கோவை மக்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் ஒரு ரூபாய் வாங்கி ஒரு தொண்டர் சிறப்புசேவை செய்துள்ளார்.

கோவை எஸ்ஐஎச்எஸ் காலனியைச் சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் மதிவாணன். இவர் அதிமுக தீவிர தொண்டர்.

இந்த நிலையில், சட்டசபை தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையிலும், தமிழக முதல்வராக ஜெயலலிதா 6ஆவது முறையாக பதவி ஏற்றதை முன்னிட்டும் கோவை மக்கள் எந்த பகுதிக்கு சென்றாலும் ஒரு ரூபாய் வாங்கி ஒரு தொண்டர் சிறப்புசேவை செய்துள்ளார். நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோவை பயணிகளிடம் ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக பெற்றுள்ளார்.

நேற்று மட்டும், ஆட்டோவுக்கு 400 ரூபாய்க்கு டீசல் போட்டு, 240 கிமீ தூரம் வரை ஓட்டியுள்ளார். இந்த சிறப்பு சேவை மூலம் சுமார் 150க்கும் அதிகமான பயணிகள் பலன் பெற்றுள்ளார்களாம்.

இது குறித்து, ஆட்டோ டிரைவர் மதிவாணன் கூறுகையில், தமிழக முதல்வராக அம்மா முதல்வரானதை முன்னிட்டு இந்த சேவையை செய்துள்ளேன். மக்களுக்காக அம்மா செய்த சேவையை கணக்கிட்டால், எனது சேவை மிகவும் சாதாரணம் என மனம் உருகிறார்.

ஆட்டோவில் செல்ல ரூ 50, 100 தேவையில்லை- ரூ. 1 மட்டுமே போதும்.......



ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவிற்கு வருகைதந்த மு.க.ஸ்டாலினுக்கு நன்றி கூறிய முதல்வர் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்காதது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

விதிகளை தளர்த்தி மு.க.ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்க அதிகாரிகளை அறிவுறுத்தியதாகவும், ஸ்டாலினையோ, திமுகவையோ அவமதிக்கும் எண்ணமில்லை என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.

நேற்று நடந்த ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு முன்வரிசையில் இடம் ஒதுக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியது, இந்த நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று விளக்க அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் பங்கேற்றது மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதற்காக அவருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கான பகுதியில் ஸ்டாலின் அமர வைக்கப்பட்டுள்ளார்.

ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இடம், அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அது, ஸ்டாலினையோ, திமுகவையோ அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். திமுகவையோ, ஸ்டாலினையோ அவமரியாதை செய்யும் நோக்கம் எனக்கு இல்லை என்றார்.

பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலின் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால், வரிசை முறையைத் தளர்த்தி ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடமளிக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன் என்றார் ஜெயலலிதா.

மாநில நலனுக்காக எதிர்கட்சியுடன் சேர்ந்து செயல்பட எதிர்நோக்கியுள்ளதாக கூறிய ஜெயலலிதா, மாநில முன்னேற்றத்துக்காக ஸ்டாலினும், திமுகவும் செயல்படுவதற்கு எனது வாழ்த்துகள் என்று கூறியுள்ளார்.

திமுகவையும், ஸ்டாலினை அவமதிக்கும் எண்ணமில்லை: ஜெயலலிதா விளக்கம்



முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று நன்றி கூறிய ஜெயலலிதா, அவருக்கு முன்வரிசையில் இடம் வழங்கப்படாததற்கு விளக்கம் அளித்தார்.

ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இடம், அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் அது, ஸ்டாலினையோ, திமுகவையோ அவமானப்படுத்துவதற்காக அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன் என கூறிய ஜெயலலிதா, பதவியேற்பு விழாவுக்கு ஸ்டாலின் வருவது குறித்து முன்கூட்டியே தகவல் கிடைத்திருந்தால், வரிசை முறையைத் தளர்த்தி ஸ்டாலினுக்கு முன் வரிசையில் இடமளிக்குமாறு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டிருப்பேன் என்றார் ஜெயலலிதா.

ஜெயலலிதாவின் இந்த விளக்கத்திற்கு பதில் அளித்த திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன், கடும் கண்டனத்திற்கு பிறகு முதல்வர் அறிக்கை விடுவது ஏற்றுக்கொள்ளகூடியது அல்ல, கடந்த பதவியேற்பு விழாவில் பேராசிரியர் அன்பழகனுக்கும் இதே நிலை தான் ஏற்பட்டது என்றார்.

மேலும், உண்மையில் முதல்வர் மணம் மாறியிருந்தால் சந்தோஷம். நல்லது நடப்பதற்கு திமுக என்றும் துணை நிற்கும் எனவும் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

உண்மையில் ஜெயலலிதா மனம் மாறியிருந்தால் சந்தோஷம்: திமுக பதில்



Why the low turnout in Chennai? | TN Elections 2016 | Ollaral News | Bosskey TV

Puthiya Thalaimurai Nerpada Pesu 24-05-16
Jayalalithaa clarifies on seating for Stalin in swearing-in ceremony

Puthiya Thalaimurai Nerpada Pesu 24-05-16 | Jayalalithaa clarifies on seating for Stalin in swearing-in ceremony







 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

EMI Thavanai Murai Vazhkai Sun Tv Serial 24-05-16 Episode 56









 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Aadhira Sun Tv Serial 24-05-16 Episode 290





 
PLEASE CLICK THE ABOVE IMAGE TO WATCH THIS EPISODE HAPPY WATCHING

Indira 24-05-16 Raj Tv Serial Episode 67


The Most Extreme Helicopters in The World



Aaradhya Bachchan attend Shilpa Shetty's son Viaan Birthday Party



Samantha Ruth Prabhu opens up about her love life | Hot Tamil Cinema News



Vadivelu's recent condition disturbs other comedians | Hot Tamil Cinema News



No NEET this year: Financially backward girl wants to pursue medicine



Ayutha Ezhuthu 24-05-2016

Ayutha Ezhuthu 24-05-2016



இந்தியா ஏழை நாடு இல்ல அறிவு, அதோட செல்வத்த எல்லாம் கருப்பு பணமா பதுக்கி வெச்சுருக்காங்க. அதனால எவ்வளோ ஏற்ற தாழ்வு பாரு, பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆயிட்டே போறான். ஏழை இன்னும் ஏழை ஆயிட்டே போறான். இது சிவாஜி படத்தில் ரஜினி பேசும் வசனம்

ஆனால், இதே இந்தியாவில் லட்சக்கணக்கில் வங்கி இருப்பு, சொந்தமாக அடுக்கு மாடி குடியிருப்பு வைத்திருக்கும் பிச்சைக்காரர்களும் இருக்கிறார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? நம்பி தான் ஆக வேண்டும். அதிலும், மும்பையில் பிச்சை எடுப்பவர்கள் பலர் வங்கி இருப்பு, லைப் இன்சூரன்ஸ் எல்லாம் வைத்திருக்கிறார்கள்.

பாரத் ஜெயின்

பாரத் ஜெயின், இவரது வயது 49. இவர் மும்பை நகர் பகுதிக்கு அருகாமையில் வசித்து வருகிறார். இவர் 70 லட்சம் ரூபாய் மதிப்பிலான இரண்டு அடுக்கு மாடி குடியிருப்புக்கு சொந்தக்காரார். சராசரியாக இவர் மாதத்திற்கு 7,500 ரூபாய் பிச்சை எடுத்தும், இவருக்கு சொந்தமான கடை மூலமாக கிடைக்கும் வாடகை மூலமாக 10,000 ரூபாயும் சம்பாதிக்கிறார்.

சாம்பாஜி காலே

சாம்பாஜி காலே எனும் இவர் இவரது குடும்பத்துடன் பிச்சை எடுத்து வருகிறார். கார் (Khar) எனும் பகுதியில் இவர் பிச்சை எடுக்கிறார். ஒரு நாளுக்கு 1000 - 1500 ரூபாய் வரை இவர் பிச்சை மூலம் சம்பாதிக்கிறார். இவருக்கு சொந்தமாக ஒரு அடுக்கு மாடி குடியிருப்பும். சோலாபூர் பகுதியில் இரண்டு நிலங்களும் இருக்கின்றன. மேலும், இவர் பெரியளவில் வங்கி இருப்பும் வைத்திருக்கிறார்.

மஸ்ஸு

மஸ்ஸு என்கிற மாலனா எனும் இவர் மும்பை பகுதியில் பிச்சை எடுக்கிறார். தினமும் 1500 ரூபாய் வரை வருமானம் ஈட்டுகிறார். பிச்சை எடுக்கும் இடத்திற்கு இவர் தினமும் ஆட்டோவில் தான் செல்கிறார். 8-10 மணி நேரம் வரை இவர் தினமும் பிச்சை எடுக்கிறார். அதே ஆட்டோவில் மீண்டும் வீட்டிற்கு சென்று விடுகிறார். இவரிடம் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதியா தேசி

இவருக்கு லைப் இன்சூரன்ஸ் எல்லாம் கூட இருக்கிறது. இவர் வருட வருடம் ப்ரீமியம் தொகையாக 36,000 ரூபாய் கட்டுகிறார். இவர் தினமும் 8-10 நேரம் பிச்சை எடுப்பது மூலமாக 300 - 400 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். வெளிநாடுகளுக்கு எல்லாம் இவர் சென்று வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ண குமார்

மும்பையை சேர்ந்த கிருஷ்ண குமார் சி.பி டேன்க் பகுதியில் தான் அதிகம் பிச்சை எடுக்கிறார். தினமும் 1500 - 2000 வரை இவர் சம்பாதிக்கிறார். இவருக்கு சொந்தமான குடியிருப்பில் இவரது சகோதரர் உடன் தங்கியிருக்கிறார். 5 லட்சம் மதிப்பிலான சொத்து வைத்திருக்கிறார்.

லக்ஷிமி தாஸ்

60 வயதான லக்ஷிமி தாஸ் உடல் ஊனமுற்றவர். 16 வயதில் இருந்து இவர் கல்கத்தாவில் பிச்சை எடுத்து வருகிறார். போலயோ அட்டாக் ஆனவர். வேறு வழியின்றி தான் இவர் பிச்சை எடுக்க ஆரம்பித்தார். இப்போது இவருக்கு பெரியளவில் வங்கி இருப்பு தொகை இருக்கிறது.

சிவாஜி

"ஏழை இன்னும், ஏழை ஆகிட்டே இருக்கான், பணக்காரன் இன்னும் பணக்காரன் ஆகிட்டே இருக்கான்." யாரு ஏழை, யாரு பணக்காரன்...ஒரே குழப்பமா இருக்கு...

பணக்கார பிச்சைக்காரர்களின் சொத்து… இதைப் படிச்சிட்டு ஷாக் ஆகிடாதீங்க!.



Avargal tamil movie 1977 released - All must watch



KT Rama Rao speech on Apple development centre launch - my view



Namitha visits Tirupathi to thank for Jayalalitha's election victory | ADMK



Severe heat melts tar roads in Gujarat | Latest Tamil Weather News








Moondru Mudichu 24-05-16 Polimer Tv Serial Episode 1133



Customer Relationship is essential says Bank Manager Sriram | Common Man Comedy Man | Bosskey TV



Salad To Control Ur Sugar Levels | Herbal Solutions





Vijay Tv Show Super Singer 5 24-05-16


Namma Thala Dhoni | Dhoni's Dream Was Fullfilled ?


Vindhya rhyming speech praising Jayalalitha