ஏப்ரல் 9 முதல் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம்?: ஆர்.கே.நகரில் இருந்து தொடங்குகிறார்!
தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வரும் மே மாதம் 16 ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் வக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலுக்கான கூட்டணி, பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு என கட்சிகள் படு பிசியாக இருக்கும் போது. அதிமுக தலைமை கூட்டணி, வேட்பாளர் தேர்வு என அனைத்தையும் முடித்து, இன்று அதிரடியாக 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
இதில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மீண்டும் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுகிறார். 227 தொகுதிகளில் அதிமுகவும், 7 தொகுதிகளில் கூட்டணி கட்சிகளும் இரட்டை இலை சின்னத்தில் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், ஏப்ரல் 9 முதல் தேர்தல் பிரச்சாரத்தை ஜெயலலிதா தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது. தான் போட்டியிட இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தை அவர் தொடங்குகிறார்.
ஜெயலலிதா
ஏப்ரல் 9 முதல் மே 12 வரை தனது முதற் கட்ட பிரச்சாரத்தை மேற்கொள்ள இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும் ஏப்ரல் 250-ல் புதுச்சேரி மாநிலத்திற்கு உட்பட்ட தொகுதிகளில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ய இருப்பதாகவும் பேசப்படுகிறது.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment