...ஆகவே பாரதிராஜாவை எச்சரிக்கிறேன் - பாலா

குற்றப்பரம்பரை கதையை யார் இயக்குவது என்பதில் பாரதிராஜா, பாலா இடையே மோதல் வலுப்பெற்று வருகிறது. சமீபத்தில் குற்றப்பரம்பரை படத்தை தொடங்கிய பாரதிராஜா, பாலா குறித்த கேள்விக்கு, நான் மேலே பார்த்து பேசுகிறவன், கீழே பார்த்து பேசி பழக்கமில்லை என்றார். இந்த விவகாரத்தில் இதுவரை வாய் திறக்காமலிருந்த பாலா முதல்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பாரதிராஜாவுக்கும், ரத்தினகுமாருக்கும் எச்சரிக்கை விடுத்தார். பாலாவின் பேச்சு வருமாறு... "வேல ராமமூர்த்தி எழுதிய குற்றப்பரம்பரை நாவலை நான் படித்தேன். எனக்குப் பிடித்தது. பாரதிராஜா இதை படமாக்க இருப்பதால் நாவலில் உள்ள சிறு பகுதியை வைத்து அந்த காலகட்டத்தில் வேறு படம் எடுக்க திட்டமிட்டேன். இதையறிந்த பாரதிராஜா என்னிடம் போன் செய்து குற்றப்பரம்பரை படத்தை இயக்க வேண்டாம். அது என்னுடைய கனவு படம். நான் எடுக்க போகிறேன் என்று கூறினார். மேலும், பத்திரிக்கைகளில் என்னைப்பற்றி தவறாக விமர்சித்திருக்கிறார் பாரதிராஜா. இதைக்கேட்டு நான் மிகவும் வருந்தினேன். குற்றப்பரம்பரை என்பது ஒரு வரலாற்று சம்பவம். இதை யார் வேண்டுமானாலும் இயக்கலாம். அவர்மட்டும் தான் இயக்குவேன் என்று கூறுவது குழந்தைத்தனமாக இருக்கிறது. பாரதிராஜா வரலாற்றை படமாக எடுக்கிறார். நான் கதையை படமாக எடுக்க இருக்கிறேன். என் படத்திற்கும் பாரதிராஜா இயக்கும் படத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. ரத்தினகுமார் கூறிய கதையை மையமாக வைத்து பாரதிராஜாவும் இயக்க இருக்கிறார். ரத்தினகுமார் என்னை கதை திருடன் என்று கூறி இருக்கிறார். மேலும் அறிவு இல்லை என்றும் கூறியிருக்கிறார். பிதாமகன் படப்பிடிப்பின் போது பாரதிராஜாவை தரக்குறைவாக பேசியவர் ரத்தினகுமார். இன்று பாரதிராஜா பின்னாடி நின்று கொண்டு என்னை தவறாக பேசி வருகிறார். பொறுமையை இழந்துதான் தற்போது பேச வந்திருக்கிறேன். நான் பாரதிராஜா, ரத்தினகுமார் இருவரையும் எச்சரிக்கிறேன். என்னைப்பற்றி இருவரும் தவறாக பேசினால் உங்களுக்கு நல்லது இல்லை."
Labels:
cinema news
,
other
No comments :
Post a Comment