கும்மிடிபூண்டியிலிருந்து பிரசாரத்தை துவக்குகிறார் விஜயகாந்த்

Share this :
No comments

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது தேர்தல் பிரசாரத்தை வரும் 11ம் தேதி கும்மிடிபூண்டியிலிருந்து துவங்குகிறார். தமிழக தேர்தல் களம் தற்போது சூடு பிடிக்க துவங்கியுள்ளது. அனைத்துக் கட்சிகளும் கிட்டத்தட்ட கூட்டணிகளை முடிவு செய்துவிட்டன. அதிமுக அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களையும் அறிவித்தது. இதையடுத்து கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தை துவக்கியுள்ளனர். திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆர்.கே. நகர் தொகுதியில் பிர்சாரத்தை துவக்கினார். முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று பிர்சாரத்தை துவக்குகிறார். இந்நிலையில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துள்ள விஜயகாந்த் வரும் 11ம் தேதி கும்மிடிபூண்டியிலிருந்து துவங்குகிறார். சமீபகாலமாக தொண்டையில் ஏற்பட்டுள்ள தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பால் விஜயகாந்த் பேசுவதற்கு சிரமம் அடைந்து வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த சில நாட்களாக மீடியாவிலிருந்து விலகியே காணப்பட்டார். இதனால் விஜயகாந்த் உடல் நலம் குறித்து வதந்திகள் பரவின. மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜயகாந்த் தேர்தல் பிர்சசாரத்தில் பங்கேற்பாரா என்று கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஜயகாந்த். வரும் 11ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியிலிருந்து அவர் பிரசாரத்தை துவங்குகிறார். 12ம் தேதி காஞ்சிபுரம் வடக்கு, மேற்கு சென்னை மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார். ஏப்ரல் 14ல் காஞ்சிபுரம் தெற்கு, தென் சென்னை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இதையடுத்து தற்போது தேர்தல் களம் இன்னும் சூடுபிடிக்க தொடங்குகிறது.

No comments :

Post a Comment