ஐசிசி அணிக்கு கேப்டனாக விராட் கோலி தேர்வு: தோனிக்கு வாய்ப்பு இல்லை!

Share this :
No comments


2016 டி20 உலகக் கோப்பையின் ஐசிசி கனவு அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. நடந்து முடிந்த இருபது ஓவர் உலகக் கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடிய வீர்கள் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.

சஞ்சய் மஞ்ச்ரேக்கர், இயன் பிஷப் உள்ளிட்ட 6 பேர் கொண்ட குழு இந்த ஐசிசி கனவு அணி வீரர்களை தேர்வு செய்துள்ளனர்.

இந்த கனவு அணியில் இந்தியாவின் விராட் கோலி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆசிஷ் நெஹ்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்திய கேப்டன் தோனிக்கு இந்த அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதிகபட்சமாக இங்கிலாந்து வீரர்கள் நான்கு பேர் தேர்வு செய்யப்படுள்ளனர். இலங்கை, பாகிஸ்தான் அணி வீரர்கள் ஒருவர் கூட இந்த அணியில் இடம்பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி அணி

1. ஜேஸன் ராய் (இங்கிலாந்து)

2. குயிண்டன் டி காக் (தென் ஆப்பிரிக்கா, விக்கெட் கீப்பர்)

3. விராட் கோலி (இந்தியா, கேப்டன்)

4. ஜோ ரூட் (இங்கிலாந்து)

5. ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து)

6. ஷேன் வாட்சன் (ஆஸ்திரேலியா)

7. ஆண்ட்ரூ ரஸல் (மேற்கிந்திய தீவுகள்)

8. மிட்செல் சேன்ட்னர் (நியூசிலாந்து)

9. டேவிட் வில்லி (இங்கிலாந்து)

10. சாமுவேல் பத்ரீ (மேற்கிந்திய தீவுகள்)

11. ஆசிஷ் நெஹ்ரா (இந்தியா)

12-வது வீரர்: முஸ்தாபிஜுர் ரஹ்மான் (வங்கதேசம்)

No comments :

Post a Comment