கருணாநிதியின் திருவாரூர் தொகுதியில் பன்னீர் செல்வம் போட்டி
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 16-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை எல்லா கட்சிகளையும் முந்திக்கொண்டு ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ளார்.
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக 227 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதில் கருணாநிதியின் தற்போதைய தொகுதியான திருவாரூரில் அதிமுகவை சேர்ந்த பன்னீர் செல்வம் போட்டியிடுகிறார்.
பன்னீர் செல்வம் என்றதும் தற்போதைய நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் என்று நினைக்க வேண்டாம், இது வேற பன்னீர் செல்வம். ஏ.என்.ஆர். பன்னீர் செல்வம் என்பவர் தான் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஓ.பன்னீர் செல்வம் போடிநாயக்கனூரில் போட்டியிடுகிறார். திமுக தலைவர் கருணாநிதி இந்த முறையும் திருவாரூர் தொகுதியில் போட்டியிட இருப்பதாகவே கூறப்படுகிறது. அவர் திருவாரூர் தொகுதியில் போட்டியிடும் பட்சத்தில் அவரை எதிர்த்து ஏ.என்.ஆர்.பன்னீர் செல்வம் களம் இறங்குகிறார்.
Labels:
other
,
politics
No comments :
Post a Comment