மதுவிலக்கை பற்றி கருணாநிதி பேச அருகதை இல்லை: ஜெயலலிதா ஆவேசம்

Share this :
No comments

சென்னை தீவுத்திடலில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஜெயலலிதா மதுவிலக்கை பற்றி பேசினார். அதில் திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக சாடினார். அதிமுக அரசு மீது மதுவிலக்கு பற்றி எதிர் கட்சிகள் விமர்சனம் செய்துவருகின்றன. இது குறித்து பேசிய ஜெயலலிதா மதுவிலக்கு பற்றி திமுக தலைவர் கருணாநிதி பேசக்கூடாது. அவர் மதுவிலக்கு பற்றி பேசுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது என்றார். மக்களுக்கு பழைய வரலாறு தெரியாது என்பதால் கருணாநிதி பொய் பேசிவருகிறார். 1971 ஆகஸ்டில் கருணாநிதி தான் மதுவே இல்லாமல் இருந்த தமிழகத்தில் மதுவை கொண்டு வந்தார். கொட்டும் மழையில் ராஜாஜி காலில் விழுந்து கெஞ்சியும் கருணாநிதி மதுவை கொண்டு வந்தார். மதுவை பற்றி தெரியாதா தலைமுறையினருக்கு மதுவை அறிமுகம் செய்து வைத்தவரே கருணாநிதி தான் என்றார். தற்போது தேர்தலுக்காக கருணாநிதி நாடகமாடுவதாக ஜெயலலிதா குறிப்பிட்டார். மேலும் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என ஜெயலலிதா உறுதியளித்தார்.

No comments :

Post a Comment