தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் ஜெயலலிதா

Share this :
No comments

தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை சென்னை தீவுத்திடலில் தொடங்கினார். வருகிற சட்டசபை தேர்தலில் அதிமுக 227 தொகுதிகளிலும் கூட்டணி கட்சிகள் 7 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. மீண்டும் தமிழகத்தில் ஆட்சியமைத்து தனது ஆட்சி தொடர வேண்டும் என ஜெயலலிதா பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக போயஸ் கார்டனில் இருந்து புறப்பட்ட ஜெயலலிதாவுக்கு வழியெங்கும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள் வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவை வரவேற்றனர். நாங்கள் ஆட்சிக்கு வரும்போது இருந்த மின்வெட்டு பிரச்சணையை முற்றிலுமாக ஒழித்து, தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றியுள்ளதாக ஜெயலலிதா தனது பரப்புரையில் கூறினார். மக்களின் சந்தோசமே தனது நோக்கமும், மக்களுக்காகவே நான் உழைக்கிறேன் எனவும் ஜெயலலிதா கூறினார்.

No comments :

Post a Comment